அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஆகஸ்ட் 29, 2012

தலிபான் சடலத்தின் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க வீரர்களுக்கு தண்டனை

"ஆப்கானிஸ்தானில், தலிபான்களின், சடலத்தின் மீது சிறுநீர் கழித்து, இழிவு படுத்திய ராணுவ வீரர்களுக்கு, உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானின், ஹெல்மண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட சாண்டலா நகரில், கடந்தாண்டு ஜூலை மாதம், தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, அமெரிக்க கடற்படையின் மூன்றாவது பிரிவைச் சேர்ந்த மூன்று வீரர்கள், தலிபான்களின் உடல்களை வரிசையாக கிடத்தி, அவற்றின் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இந்த காட்சிகளை படம் பிடித்து, இணைய தளம் மூலமாகவும் வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, அமெரிக்க ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான "பென்டகன்' சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ராணுவ நீதியின் ஒழுங்குமுறை விதிகளை மீறி, நடந்து கொண்ட மூன்று கடற்படை வீரர்கள், துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உரிய தண்டனையும் பெற்றுள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற கடற்படை வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என்றும், பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஆப்கானிஸ்தானில், உலக மாந்தர்களின் இறைவேதம்  "திருமறை குர்ஆன்" நூலை தீயிட்டு கொளுத்திய, ஆறு வீரர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க உள்ளது. "ராணுவ வீரர்கள் ஆறு பேருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்