அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஷ்யா

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று அமெரிக்க கடற்பரப்புக்குள் நுழைந்து உளவுபார்த்துச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.

ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலெனத் தெரிவிக்கப்படுகின்றது. விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான பின்னரே இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது.

அக்கப்பல் அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகே இந்தத் தகவல் அமெரிக்க கடற்படைக்கு தெரியவந்துள்ளது. எனினும் அமெரிக்கா இதனை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்