திரு. சுஷில் குமார் சம்பாஜிராவ் ஷிண்டே
மதிப்பிற்குரிய மத்திய உள்துறை அமைச்சர்
நார்த் ப்ளாக், மத்திய தலைமைச் செயலகம்
நியூ டெல்லி - 110 001.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: அரசுத்துறைகளை மேற்கோள் காட்டி பாப்புலர் ஃபிரண்ட்டின் மீது குற்றம் சுமத்தும் ஒரு சில ஊடகங்கள்
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இது ஒரு நவீன-சமூக இயக்கம், தேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக உழைத்து வருகிறது. அஸ்ஸாமிய மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் குறித்த செய்திகளில் துரதிஷ்டவசமாக எங்களுடைய அமைப்பை தொடர்புபடுத்தி ஒரு சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை உங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதில் பாப்புலர் ஃபிரண்டின் ஈடுபாட்டை மறுக்கிறேன். ஒன்றுமில்லாத இந்த அறிக்கைகளை நாங்கள் சந்தேகிக்கிறோம். இது குழு நல அக்கறை கொண்ட மற்றும் மதவாத சக்திகளின் தீங்கிழைக்கும் பரப்புரையின் அடுத்த சுற்று ஆகும். மேலும், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இந்தியாவின் எப்பகுதியிலும் வசிக்கவும், படிக்கவும், பணிபுரியவும் உரிமை உண்டு என்பதுவே பாப்புலர் ஃபிரண்டின் நிலைப்பாடு ஆகும் என்பதை நான் இங்கு தெளிவுபடுத்துகிறேன். துரதிஷ்டவசமான இந்த அஸ்ஸாம் மதக் கலவரம் வெடித்ததை தொடர்ந்து நாங்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கைகள் அனைத்தும் இதற்கான சான்றுகள் ஆகும்.
குறிப்பாக கேரளத்தை மையமாகக் கொண்ட சில இணையப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி அலைவரிசைகளும் வதந்தி பரப்பும் சம்பவங்களில் பாப்புலர் ஃபிரண்டிற்கு உள்ள தொடர்பு குறித்த அறிக்கையை "இணையவெளி புலனாய்வு முகமைகள்" (cyber investigation agencies) உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருப்பதாக செய்திகளை வெளியிட்டன. வேறு சில செய்திகள் "மத்திய புலனாய்வு முகமைகளை மேற்கோள் காட்டியிருந்தன. ஒரு சில ஊடகங்கள் "மத்திய இணையவெளி புலனாய்வு முகமை" (National Cyber Investigation Agency) அறிக்கை சமர்ப்பித்து இருப்பதாக செய்தி வெளியிட்டன. மொத்தத்தில், மக்களை பீதிவயப் படுத்துவதற்கும், எங்களின் அமைப்பை களங்கப் படுத்துவதற்கும் செய்யும் முயற்சிகளில் ஒன்றாக அரசு முகமைகளின் பெயர்களும், உள்துறை அமைச்சகத்தின் பெயரும் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றன. பாப்புலர் ஃபிரண்ட் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இது போன்ற அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதா என்பதை நாங்கள் அறிய விரும்புகின்றோம். "தேசிய இணையவெளி புலனாய்வு முகமை" என்று அழைக்கப்படும் ஒரு துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுவதாக எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. இருந்தபோதிலும் அப்படி ஏதாவது தவறான அறிக்கைகள் எங்களை பற்றி சமர்ப்பிக்கப்பட்டிருந்தால், நாங்கள் மீண்டும் தெளிவுபடுத்திக் கொள்கின்றோம்; அதாவது நாங்கள் வெளிப்படையாக செயல்படும் அமைப்பாகும். மறைமுகமான செயல்திட்டங்களில் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை. அரசியல் சாசனத்தின் வரையறைகளுக்கு உட்பட்டும், தேசத்தின் மற்ற விதிகளை மீறாதவாறும் எங்களின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறோம் என்பதை தயைகூர்ந்து கவனிக்கவும். உளவுத்துறை, பாதுகாப்பு, புலனாய்வு முகமைகள் சிறுபான்மையினரைப் பற்றியும், பாப்புலர் ஃபிரண்ட் உட்பட அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளைப் பற்றியும் அவதூறான, விஷமத்தனமான மற்றும் மத துவேசத்தை தூண்டும் தவறான தகவல்களை பரப்புரை செய்வதில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற வடகிழக்கு மாநில மக்களை அச்சுறுத்தும் வதந்திகளைப் பரப்பியவர்களை கண்டுபிடிக்க முழுமையான விசாரணைக்கு உத்தரவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன். எங்களது அமைப்பைப் பற்றிய விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இது போன்ற தவறான அறிக்கைகளில் ஊடகங்கள் IBயும், உளவுத் துறையை சார்ந்தவர்களும் தகவல்களை தந்ததாக கூறிக் கொள்கின்றன. இது போன்ற எவ்வித அடிப்படையுமற்ற அறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் உளவுத்துறையிலும், பாதுகாப்பு முகமையிலும் மத சிறுபான்மையினருக்கும், அவர்களின் அமைப்புகளுக்கும் எதிரான சக்திகள் ஊடுருவி மதவாத, ஃபாஸிச சக்திகளுக்கு முகவர்களாக செயல்படுவதாக சந்தேகம் ஏற்படுகிறது. அவர்களது உண்மையான நோக்கம் மத துவேசத்தை பரப்பி, அதன் மூலம் சிறுபான்மையினர் சக்தி பெறாமலும், முன்னேற்றமடையாமலும் செய்வதாகும். எனவே, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு துறைகளில் மதவாத சக்திகளின் கருவியாக விளங்கும் விஷமிகளை அடையாளங்கண்டு, களையடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக, நான் எங்களது நிலைபாட்டை விளக்க உங்களுக்கு வசதியான நேரத்தில் என்னை அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது சம்பந்தமாக, நான் எங்களது நிலைபாட்டை விளக்க உங்களுக்கு வசதியான நேரத்தில் என்னை அனுமதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
K.M. Shareef
KM ஷரீப், தேசிய பொதுச் செயலாளர், PFI |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக