ஆப்கானிஸ்தான்
ராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ தளபதியின் விமானம்
மீது தலிபான்கள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை களையெடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ
படைகள் முகாமிட்டுள்ளன. அவர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி தலிபான்களை
கொன்று வருகின்றனர்.
நேட்டோ
படைகள் மீது தலிபான்களும் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில்,
அமெரிக்க ராணுவ தளபதி மார்ட்டின் டிம்ப்சி, நேற்று முன்தினம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அங்கு நேட்டோ படை கமாண்டர் ஜான்
ஆலன், ஆப்கன் ராணுவ தளபதி ஷெர் முகமது கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அமெரிக்க தளபதி மார்ட்டின் வந்த சி17 ராணுவ விமானம், பக்ராம் ராணுவ
தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று
முன்தினம் நள்ளிரவில் அந்த விமானம் மீது தலிபான்கள் ராக்கெட்களை வீசி
தாக்குதல் நடத்தினர். சரமாரியாக ராக்கெட்கள் தாக்கியதில் விமானம்
சேதமடைந்தது. பராமரிப்பு பணியில் இருந்த 2 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில் ராணுவ தளபதி விமானத்தில் இல்லை. அதனால்
அவர் உயிர் தப்பினார். வேறு விமானத்தில் அவர் நேற்று அமெரிக்கா புறப்பட்டு
சென்றார்.
இந்த
தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கனில் அமெரிக்க
படையினர் மீதான தலிபான்களின் தாக்குதல் கடந்த சில நாட்களாக
அதிகரித்துள்ளது. 2 வாரத்தில் மட்டும் 10 அமெரிக்க வீரர்கள் பலியாகி
உள்ளனர். கடந்த வாரம் அமெரிக்க ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு
வீழ்த்தினர் என்பது குறிப்பிடக்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக