புதன், அக்டோபர் 10, 2012
மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்
மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே
சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல
பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல்
தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில்
மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன்,
புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.
மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.
மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.
செவ்வாய், அக்டோபர் 02, 2012
பாரதியார் பற்றியான ஆய்வு
-வே. மதிமாறன்
முன்னுரை
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,
அதில் முக்கியமான இரண்டு,
1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.
2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.
இதில்
மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ
முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த -
இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு
நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.
மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து - விஸ்கி
பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை
பொறுமையாக அமைதி காத்தார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை
காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால்,
‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும்
நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி,
முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.
மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை
வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்`
செய்து கொண்டார்கள்.
திங்கள், அக்டோபர் 01, 2012
1870 பணியிடங்கள் நிரப்ப 9.8 லட்சம் பேர் எழுதிய வி.ஏ.ஓ தேர்வில் 20 சதவீதம் பேர் ஆப்செண்ட்
தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வை 9.8 லட்சம்
பேர் எழுதினர். குளறுபடிகள் நடக்காமல் தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மாதத்தில் ரிசல்ட்
வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,870
பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த ஜூலை 9ம் தேதி
வெளியிட்டது. அதன்படி, விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை
10 மணிக்கு தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
அரசு பயங்கரவாதத்தை கண்டித்த உச்ச நீதி மன்றம்
![]() |
| உச்ச நீதி மன்றம் |
"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி
நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில்
அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு
மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில்
குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது. குஜராத்துக்கு
மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு, காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும்
சேர்த்தே பொருந்தும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



