அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், அக்டோபர் 17, 2012

குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய், அக்டோபர் 16, 2012

கல்விக்கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்  கோவையில் உயர்கல்விக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி 14 ம் தேதி மாலை 5 மணியளவில் உக்கடம் அருகிலுள்ள CGMA ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் A.S. இஸ்மாயில் அவர்கள் தலைமையில் 24 லட்சம் ரூபாய்க்கான கடன் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களது  பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டார்கள்.

வியாழன், அக்டோபர் 11, 2012

கர்நாடக பாஜகவில் பிளவு: எடியூரப்பா புதிய கட்சி தொடங்க திட்டம்

கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போன கட்சி காங்கிரஸ் என்று அவ்வப்பொழுது செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மத்தியில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் பாஜகவும் அதற்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலம் நிரூபித்து வருகிறது. உதாரணத்திற்கு, பாஜக தலைவர் நிதின் கட்கரிக்கு எதிராக கோபிநாத் முண்டேவையும், குஜராத்தில் மோடிக்கு எதிராக கேசுபாய் படேலையும், ராஜஸ்தானில் எதிர்கட்சித் தலைவர் வசுந்தரா ராஜேவிற்கு எதிராக முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவையும் குறிப்பிடலாம். அந்த வரிசையில் கர்நாடக பாஜகவிற்கு இடையூறாக இருந்த எடியூரப்பாவும் சேர்ந்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா பாரதீய ஜனதா கட்சியில் இருந்து டிசம்பர் மாதம் வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

அசாமில் 18 லட்சம் குழந்தைகள் உணவில்லாமல் தவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த மூன்று மாதங்களாக சுமார் 18 லட்சம் குழந்தைகள் உணவு, தண்ணீர், மருத்துவ உதவி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாக சர்வதேச அளவில் செயல்படும் அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.

லன்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அசாமில் வெள்ளத்தால் 4.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் பெருமளவு பாதிப்பு எனபது குழந்தைகளுக்கு மட்டுமே.

புதன், அக்டோபர் 10, 2012

ஹரியானா மாநில தொடர் கற்பழிப்புகள்: கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு சோனியா உத்தரவு

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில் இந்த ஒரு மாதத்தில் நடந்த 12 கற்பழிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கற்பழிக்கப்பட்ட தலித் பெண் தீக்குளித்தது மற்றொரு மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்தது என பல சம்பவங்கள் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.

தேடுதல்