அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், பிப்ரவரி 16, 2012

உற்சாகமான தேர்தல் எதிரியின் முகத்தை நோக்கிய இடியாக இருக்கும்: ஈரான் தலைவர்



டெஹ்ரான்: மார்ச் 2- ஆந்தேதி அன்று நடக்கவிருக்கின்ற ஈரான் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து எதிரியின் முகத்தில் குத்துவார்கள் என்று இஸ்லாமியப் புரட்சியின் மூத்த தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி கூறியுள்ளார்.

தெஹ்ரானிலுள்ள வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் புதனன்று ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

மக்களின் பெருவாரியான வாக்குகள் நாட்டை மேலும் வலுப்படுத்தும், எதிரிகளின் அச்சுறுதல்களிலிருந்து காக்கும், எதிரிகளின் சதித் திட்டங்களை வலுவிழக்கச் செய்யும், எதிரியை பின்வாங்கச் செய்யும் என்றும் ஆயதுல்லாஹ் கொமெய்னி பேசினார்.

எதிரிகள் ஈரானிய மக்கள் தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்றும் கூறினார்.

இஸ்லாமிய சட்ட நெறிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று உலகை நம்ப வைக்க எதிரிகள் முயற்சித்து வருவதாக ஆயதுல்லாஹ் கொமெய்னி குற்றம் சாட்டினார்.

இருந்த போதிலும், 1979 இல் நடந்த இஸ்லாமியப் புரட்சியின் 33 வது ஆண்டுவிழா கடந்த 11 ஆந்தேதி நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி எதிரிகளின் சதியை முறியடிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "எதிர்கால தலைமுறைகள் பல பெரிய மற்றும் முக்கிய மாற்றங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள். உலகம் ஒரு மிகப் பெரிய எழுச்சியை சந்திக்கும். பரவலாகக் காணப்படுகிற எதேச்சதிகாரமும், பொருளாதாரக் கொள்கைகளும் படிப் படியாக செயலிழந்து போகும்... இது தான் எதிர்கால உலகமாக இருக்கும்" என்றும் கூறினார்.

யுரேனிய செறிவூட்டல் நேரடி ஒளிபரப்பு, பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை - ஈரான் அதிரடி !

தெஹ்ரான்: ஈரான் தெஹ்ரானில் அமைத்துள்ள அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை செய்து வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதை பயன்படுத்துவதாகவும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்காததால் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ஈரான் மேல் விதித்தது.

ஆனால் ஈரானோ அவை ஆக்கபூர்வமான முறையில் மின்சாரம் தயாரிக்கவே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தது. இச்சூழலில் எந்த அணு உலையை அமெரிக்கா மூட சொன்னதோ அதே அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் காட்சிகளையும் யுரேனிய ப்ளேட்டுகள் பொருத்தப்படும் காட்சியையும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் உத்தரவின் பேரில் ஈரான் அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது. 



தன் உத்தரவை மீறியதோடு முகத்தில் கரி பூசும் விதமாக தன் வல்லமையை ஈரான் பறை சாற்றியது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அனைத்தும் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதற்கிடையில் ஈரான் அணு உலை உற்பத்தியை நிறுத்தாவிட்டால் ஈரானிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என்று அச்சுறுத்திய 6 ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்தும் அதிரடிமுடிவை அறிவித்துள்ளது. 

ஈரான் ஒரு அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்த அமெரிக்காவின் கோபத்தை கிளறும் விதமாக ஈரானின் மின் உற்பத்தியை நிவர்த்தி செய்ய இன்னும் 4 அணு உலை நிலையங்கள் அமைக்கப்படும் என்றும்  ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார்.
நன்றி: ஆசியாநண்பன் 

தேடுதல்