தெஹ்ரான்: ஈரான் தெஹ்ரானில் அமைத்துள்ள அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை செய்து வந்தது. ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதை பயன்படுத்துவதாகவும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோரிய அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் ஏற்காததால் அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை ஈரான் மேல் விதித்தது.
ஆனால் ஈரானோ அவை ஆக்கபூர்வமான முறையில் மின்சாரம் தயாரிக்கவே பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தது. இச்சூழலில் எந்த அணு உலையை அமெரிக்கா மூட சொன்னதோ அதே அணு உலையில் யுரேனியம் செறிவூட்டும் காட்சிகளையும் யுரேனிய ப்ளேட்டுகள் பொருத்தப்படும் காட்சியையும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் உத்தரவின் பேரில் ஈரான் அரசு தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.
தன் உத்தரவை மீறியதோடு முகத்தில் கரி பூசும் விதமாக தன் வல்லமையை ஈரான் பறை சாற்றியது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அனைத்தும் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் ஈரான் அணு உலை உற்பத்தியை நிறுத்தாவிட்டால் ஈரானிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவோம் என்று அச்சுறுத்திய 6 ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் பெட்ரோல் ஏற்றுமதி செய்வதை நிறுத்தும் அதிரடிமுடிவை அறிவித்துள்ளது.
ஈரான் ஒரு அணு மின் நிலையம் அமைப்பதை எதிர்த்த அமெரிக்காவின் கோபத்தை கிளறும் விதமாக ஈரானின் மின் உற்பத்தியை நிவர்த்தி செய்ய இன்னும் 4 அணு உலை நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார்.
நன்றி: ஆசியாநண்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக