யோகா பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காட்சி |
"ஆரோக்கியமான மக்கள், வலிமையான தேசம்" என்ற தலைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டுதோறும் தேசிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் துவக்க நிகழ்ச்சி கோவையில் நடை பெற்றது. நிகழ்ச்சி காலை 7 மணிக்கு நல்ல ஆயன் உயர்நிலைப் பள்ளியில் துவங்கியது.
இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஃபக்ருதீன் அஹ்மத் அவர்கள் தலைமை தாங்க, மாவட்ட தலைவர் K.ராஜா உசேன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் A.S.இஸ்மாயில் அவர்களும், கோவை மாநகர மேயர் செ.மா.வேலுச்சாமி அவர்களும் மற்றும் கோவை அரசு மருத்துவ மனையின் இருப்பிட மருத்துவ அலுவலர் சிவப்ரகாசம் அவர்களும் பங்கு பெற்றனர். பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் யோகா கற்றுத் தரப்பட்டது.
மாநில செயற்குழு உறுப்பினர் ஃபக்ருதீன் அஹமத் |
கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக