அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், பிப்ரவரி 08, 2012

பிஜேபி-யின் MLA-க்கள் சட்ட சபையில் என்ன செய்வார்கள்?

பாரதீய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்டசபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்த போது, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விஷயமாகும். அது மட்டுமல்ல, சபையில் அவர் அருகில் அமர்ந்திருந்த ''பெண்கள் நலத்துறை'' அமைச்சர் சி.சி.பாட்டீலும் அவரோடு சேர்ந்துகொண்டு உற்சாகமாகப் பார்த்தார் என்பதும் வெட்கக்கேடான விஷயமாகும். 
மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களையும், ஒழுக்கக் கேடானவர்களையும், ஒழுங்கீனமானவர்களையும் சட்டமன்றத்திற்கு அனுப்பினால் இப்படி தான் நடக்கும் என்பதை மக்கள் உணரவேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல், தண்டிக்காமல் தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால், சட்டசபையிலேயே காபரே நடனம் கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம், சட்டசபையிலிருந்து மட்டுமல்ல அரசியலை விட்டே மக்கள் தூக்கி எறியவேண்டும். இவர்கள் சமூகத்தில் விஷப்பாம்புகள்.


ஹிந்துத்துவ பயங்கரவாதம் என்ற பதத்தை தைரியமாக முழங்கியதால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை 2G அலைக்கற்றை வழக்கில் சேர்த்து எப்படியேனும் பழிவாங்கி வட மாநிலங்களில் நடந்து வரும் சட்ட மன்ற தேர்தல்களில் ஆதாயமடைய திட்டமிட்டிருந்த பிஜேபி-க்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பிஜேபி MP, MLA-க்கள் வழக்கமாக செய்து வரும் ஊழல், லஞ்சம், இனப் படுகொலை, நிலமோசடி போன்றவற்றோடு சட்ட நாடாளுமன்றங்களில் எப்படி மக்கள் நலனுக்காக பணியாற்றுவார்கள் என்ற மக்களின் சந்தேகத்திற்கு இப்போது கர்நாடக அமைச்சர்கள் விடையாக அமைந்துள்ளனர்.    


இனப்படுகொலைகள் மூலம் மிக வேகமாக வளர்ந்த கட்சி, அதே வேகத்தில் தேய்ந்து வருவதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்