அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், பிப்ரவரி 29, 2012

எஸ்.டி.பி.ஐ அனைத்து இந்தியர்களுக்கான கட்சி - இ. அபூபக்கர்

பெங்களூர்: கர்நாடக மாநில சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக பெங்களூரில் மாபெரும் மாநாடு நடைபெற்றது பீப்புல்ஸ் பொலிடிக்கல் கான்ஃப்ரென்ஸ் (மக்கள் அரசியல் மாநாடு) என்ற இந்த மாநாடு பெங்களூரில் சிவாஜி நகரிலுள்ள சோட்டா மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.


 இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் உரையாற்றும்போது தேசத்தில் பெரும்பாலானவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருகிறது. தேசத்தின் கட்டமைப்பு சீர்குலைந்து வருவதை சுட்டிக்காட்டினார். பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசிய அபூபக்கர் அவர்கள் கூறும்போது "பாரதிய ஜனதாவிற்கென்று தார்மீக நிலை என்ற ஒன்றே கிடையாது. மற்றக் கட்சிகளை காட்டிலும் தாங்கள் மாறுபட்டவர்கள் என்று மக்களை ஏமாற்று ஓட்டுகளை பெற்றனர். ஆனால் தற்போது பா.ஜ.கவின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.


எந்த ஒரு முஸ்லிமாவது காங்கிரஸ் கட்சியில் இணைந்தாலோ அல்லது ஜனதா தளத்தில் இணைந்தாலோ அக்கட்சி முஸ்லிம்களுக்கான கட்சியா? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால் என்னிடம் வந்து பல பேர் கேட்கும் கேள்வி என்னவெனில் எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்களுக்கான கட்சியா? என்று, ஆனால் நான் அவர்களுக்கு கூறுவது என்னவென்றால், எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்களுக்கு மாத்திரமல்ல, தலித்களுக்கும், கிறிஸ்த்தவர்களுக்கும், இந்துக்களுக்கும் உண்டான கட்சியாகும். ஆம்! இந்தியாவின் குடிமகன் ஒவ்வொருக்கும் உண்டான கட்சிதான் எஸ்.டி.பி.ஐ" இவ்வாறு அவர் உரையாற்றினார்.


எஸ்.டி.பி.ஐயின் கர்நாடக மாநிலத்தலைவர் அப்துல் மஜீத் பேசும் போது, இந்த தேசத்தில் ஒவ்வொரு தனி நபரும் சந்தித்து வரும் பிரச்சனைகளை விரிவாக எடுத்துக்கூறினார். அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்பாட்டினால் இன்று இந்தியா முழுவதும் மக்கள் சிரமப்பட்டு வாழ்வதாக கூறினார். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்பு ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் ஊழலில் ஈடுபட்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள வங்கிகளின் நமது அரசியல்வாதிகளின் கறுப்பு பணங்கள் கணக்கின்றி கிடப்பதாக அவர் கூறினார்.


மாநில அரசை விமர்சித்து பேசிய அவர் கூறும்போது கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க அரசு பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கிறது. அதன் அமைச்சர்கள் ஊழல், கற்பழிப்பு, போன்றவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் சமீபத்தில் பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் சட்டமன்றத்திலேயே வைத்து ஆபாச வீடியோவை பார்த்திருக்கின்றனர் என்று கூறினார்.


இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்வதாகவும், இந்தியாவின் கல்வி முறை நாளுக்கு நாள் மோசமாகி வருவதையும் சுட்டிக்காட்டினார். அடுத்ததாக உரை நிகழ்த்திய ராஜிய ரைத்தா சங்கின் தலைவர் கொடிஹல்லி சந்திரசேகர் உரையாற்றும்போது "இந்திய அரசியலமைப்பு சாசன சட்டத்தில் எந்த இடத்தில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது? நான் இதற்கு முன்னால் பிற்படுத்தப்பட்ட கமிஷனின் தலைவராக இருந்துள்ளேன். முஸ்லிம்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற முறையில் அவர்களுக்கென்று இடஒதுக்கிடு வழங்கப்படவெண்டும். என்று கூறினார். எஸ்.டி.பி.ஐ தற்போது வேகமாக வளர்ந்து வரக்கூடிய அரசியல் கட்சியாக விளங்குகிறது. இதன் செயல்பாடுகளை பட்டிதொட்டியங்கும் பரப்பவேண்டும் என கூடியிருந்த மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

அவர் மேலும் கூறும்போது இந்தியாவில் எஸ்.டி.பி.ஐ மட்டுமே இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தை பின்பற்றி வருகிறது எனவும், நீங்கள் அனைவரும் டாக்டர் அம்பேத்கர் மற்றும் திப்பு சுல்தான் போன்ற பெரும் பெரும் தலைவர்களின் வழியில் நடக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைவர் முஹம்மது இலியாஸ் தும்பே உரையாற்றும்போது "எல்லோரும் முஸ்லிம் சமூகத்தின் மேம்பாடு பற்றி பேசினார்கள் என்றால் எஸ்.டி.பி.ஐ முஸ்லிம்களின் கட்சி என்றல்ல மாறாக இன்று இந்தியாவில் கல்வியிலும், பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கிய சமூகமாக முஸ்லிம் சமுதாயம் இருப்பதனால் தான் அனைவரும் முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காக குரல் கொடுத்துள்ளனர். மேலும் அரசியல் என்று வந்ததும் எல்லா கட்சிகளும் முஸ்லிம்களை ஓட்டு வங்கியாகவே பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இலியாஸ் தும்பே உரையாற்றினார்.

எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயலாளர் ஆவாஷரீஃப் உரையாற்றும்போது "வெள்ளையர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னால் நமது தேசம் வலிமைமிக்க தேசமாக இருந்து வந்தது. வெள்ளையர்களின் ஆதிக்கத்திற்கு பின்னால் 40 கோடி இந்தியமக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். மாதம் வெறும் 950/- மட்டுமே சம்பாதிக்கக்கூடிய எத்தனையோ குடும்பங்கள் இந்தியாவில் வாழ்கிறது. எஸ்.டி.பி.ஐ அப்பேற்பட்ட மக்களின் வலிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடும் என்றார். இந்தியாவில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் லஞ்சத்திலும் குற்றச்செயலிலும் ஊறித்திழைத்திருக்கின்றனர். இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் அரசியல் நிலை மாற்றப்படவேண்டும். மக்களுக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கக்கூடிய அரசியல் சக்தியாக எஸ்.டி.பி.ஐ உருவெடுத்துவருவதாக அவர் கூறினார். ஒவ்வொரு தேர்தலின் போது எதிர்மறை அரசியலை கையாண்டு வந்த ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள் இந்த முறை நேர்மறை அரசியலை கையில் எடுத்திருக்கின்றனர். இதன் மூலம் இந்தியாவின் நிலை மீட்டெடுக்கப்படும் என்று கூறினார்.

இம்மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் செய்யது இர்ஃபான் இபுராஹிம் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்ட கமிஷனின் முன்னால் தலைவர் துவரகனாத், எஸ்.டி.பி.ஐயின் தமிழக பொதுச்செயலாளர் முஹம்மது ரஃபீக், தேசிய துணைத்தலைவர் டாக்டர் நஜ்னி பேகம், கர்நாடக பொதுச்செயலாளர் அப்துல் ஹம்மான், மற்றும் பலர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்