டெஹ்ரான்: மார்ச் 2- ஆந்தேதி அன்று நடக்கவிருக்கின்ற ஈரான் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து எதிரியின் முகத்தில் குத்துவார்கள் என்று இஸ்லாமியப் புரட்சியின் மூத்த தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி கூறியுள்ளார்.
தெஹ்ரானிலுள்ள வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் புதனன்று ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.
மக்களின் பெருவாரியான வாக்குகள் நாட்டை மேலும் வலுப்படுத்தும், எதிரிகளின் அச்சுறுதல்களிலிருந்து காக்கும், எதிரிகளின் சதித் திட்டங்களை வலுவிழக்கச் செய்யும், எதிரியை பின்வாங்கச் செய்யும் என்றும் ஆயதுல்லாஹ் கொமெய்னி பேசினார்.
எதிரிகள் ஈரானிய மக்கள் தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்குரிய வேலைகளைச் செய்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
இஸ்லாமிய சட்ட நெறிகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று உலகை நம்ப வைக்க எதிரிகள் முயற்சித்து வருவதாக ஆயதுல்லாஹ் கொமெய்னி குற்றம் சாட்டினார்.
இருந்த போதிலும், 1979 இல் நடந்த இஸ்லாமியப் புரட்சியின் 33 வது ஆண்டுவிழா கடந்த 11 ஆந்தேதி நடைபெற்றது. அதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணி எதிரிகளின் சதியை முறியடிப்பதாக உள்ளது என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், "எதிர்கால தலைமுறைகள் பல பெரிய மற்றும் முக்கிய மாற்றங்களுக்கு சாட்சியாக இருப்பார்கள். உலகம் ஒரு மிகப் பெரிய எழுச்சியை சந்திக்கும். பரவலாகக் காணப்படுகிற எதேச்சதிகாரமும், பொருளாதாரக் கொள்கைகளும் படிப் படியாக செயலிழந்து போகும்... இது தான் எதிர்கால உலகமாக இருக்கும்" என்றும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக