அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, பிப்ரவரி 18, 2012

மேற்கத்திய நாடுகளின் ஈரானுக்கெதிரான தடைகள் துருக்கியை கட்டுப்படுத்தாது

துருக்கியின் எரிசக்தித்துறை அமைச்சர் டநேர் இல்டிஸ்
மேற்கத்திய நாடுகளால் தெஹ்ரானின் ஆக்கப்பூர்வ அணுசக்தி உலைகளுக்கு எதிராக விதிக்கப்படும் தடைகள் அன்காராவை கட்டுப்படுத்தாது என்று துருக்கியின் எரிசக்தித்துறை அமைச்சர் டநேர் இல்டிஸ் தெளிவுபடுத்தியுள்ளார். ஆற்றல் பங்கீட்டில் டெஹ்ரானோடு நாங்கள் கொண்டுள்ள வலுவான தொடர்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறினார்.         

"துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) உறுப்பினர் அல்ல. ஆகவே, அதன் தீர்மானங்கள் எங்களை கட்டுப்படுத்தாது. அதுபோலவே, அமெரிக்காவால் எடுக்கப்படும் எந்த முடிவும் எங்களை கட்டுப்படுத்தாது," என்று தென்னாப்பிரிக்க தொழில் மற்றும் வர்த்தகத்  துறை அமைச்சர் ரோப் டேவிஸ் உடன் வியாழனன்று துருக்கி தலைநகர் அங்காராவில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார்.

டேவிஸ் தனது பேட்டியின் போது, பொருளாதாரத் தடையால் உலகளாவிய அளவில் ஏற்படும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வும், உலகளாவிய அளவில் பெட்ரோலியப் பொருட்களை விநியோகிப்பதில் ஏற்படும் சிரமங்களையும் வருத்தத்தோடு சுட்டிக் காட்டினார்.

புத்தாண்டிற்கு முந்தைய இரவில் அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது. அது மற்ற நாடுகள் ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்வதையும், ஈரானின் மத்திய வங்கியோடு பரிவர்த்தனையில் ஈடுபடுவதையும் தடுக்கிறது.

ஜனவரி 23 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் இந்த தடையை அங்கீகரித்தனர். அதில் ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்யாதிருப்பதும், ஈரான் மத்திய வங்கியின் நிதிகளை முடக்குவதும் அடங்கும். மேலும், தங்கம், வெள்ளி மற்றும் பிற விலையுயர்ந்த உலோகங்களை தெஹ்ரானுக்கு விற்பதையும் தடை செய்தது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நாடுகள், ஈரான் அணு சக்தியை தன்னுடைய ராணுவப் பயன்பாட்டிற்கு  பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி வந்தது. இதனைச் சொல்லியே இந்த இஸ்லாமியக் குடியரசின் மீது முழு பொருளாதாரத் தடையை விதிக்க மற்ற நாடுகளையும் வற்புறுத்தி வருகிறது.

ஈரான் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வந்தது. அது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும், உலகளாவிய அணு சக்தி முகமையின் உறுப்பினர் என்றும் விளக்கமளித்து வந்தது. அணு தொழில் நுட்பத்தை அமைதி வழியில் பயன்படுத்த தனக்கு உரிமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டி வந்தது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்