அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஜூலை 09, 2012

இந்தியா நெக்ஸ்ட் புதிய ஹிந்தி மாதமிருமுறை வெளியீடு

இந்தியா நெக்ஸ்ட் ஹிந்தி மாதமிருமுறை இதழின் துவக்க விழா ஜூன் 30, 2012 மாலை 4 மணியளவில் புது டெல்லியிலுள்ள காந்தி பீஸ் பௌண்டேசன்-ல் நடைபெற்றது..

இந்தியா நெக்ஸ்டின் செயல் பதிப்பாசிரியர் ஜனாப்.அன்ஜும் நயீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையாற்றிய இந்தியா நெக்ஸ்டின் வெளியீட்டாளரும், பதிப்பாசிரியருமான ஜனாப்.E.அபூபக்கர் அவர்கள், "ஹிந்தி பத்திரிக்கை உலகில் ஒரு சிறிய துவக்கம் தான் இந்தியா நெக்ஸ்ட். ஆனால், அர்த்தமுள்ள மற்றும் நெறிமுறைகள் சார்ந்த ஊடகத்தை நோக்கிய முதல் படி" என்று வர்ணித்தார்.

கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை!

சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:
சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவக்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்கவேண்டும். ஆனால் எரிப்பதற்கான மரங்களை வெட்டி எடுத்து வருவது யார்?

ஐக்கிய அரபு எமிரேட்டில் மாடர்ன் உடைகளுக்கு எதிர்ப்பு

ஐக்கிய அரபு எமிரேட்டில் வெளிநாட்டினர் மாடர்ன் உடைகள் அணிவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல்தான் எமிரேட் குடிமக்கள். மற்றவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்பட எந்த இடத்துக்கு சென்றாலும் வெளிநாட்டினர் அரை குறை ஆடையுடன் வலம் வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சனி, ஜூலை 07, 2012

கல்லீரல்

நோய் முற்றிய வயிறு 
குடியினால் வரும் உடல் ரீதியான நோய்களில் கொடுமையானது 'லிவர் சிரோஸிஸ்’(Lever cirrhosis). இதுதான் க்ளைமாக்ஸ். குடிநோய்களின் தலைவன் இவன். சுமார் 10 ஆண்டுகளாக தினமும் மது அருந்துபவருக்கு கட்டாயம் இந்த நோய் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலின் வயிற்றுப்பகுதியின் வலது பக்கத்தில் சுமார் ஒன்றரைக் கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற உறுப்பு இது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

வியாழன், ஜூலை 05, 2012

மியன்மார் பௌத்தர்களிடமிருந்து முஸ்லிம்களை காப்பாற்ற அவசர அழைப்பு

எகிப்திய இஹ்வானுல்முஸ்லிமீன் இயக்கம் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த தீவிரவாத இயக்கங்கள் மேற்கொள்ளும் பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகத்தை தலையிடுமாறு வேண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேடுதல்