இந்தியா நெக்ஸ்ட் ஹிந்தி மாதமிருமுறை இதழின் துவக்க விழா ஜூன் 30, 2012 மாலை 4 மணியளவில் புது டெல்லியிலுள்ள காந்தி பீஸ் பௌண்டேசன்-ல் நடைபெற்றது..
இந்தியா நெக்ஸ்டின் செயல் பதிப்பாசிரியர் ஜனாப்.அன்ஜும் நயீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தலைமையுரையாற்றிய இந்தியா நெக்ஸ்டின் வெளியீட்டாளரும், பதிப்பாசிரியருமான ஜனாப்.E.அபூபக்கர் அவர்கள், "ஹிந்தி பத்திரிக்கை உலகில் ஒரு சிறிய துவக்கம் தான் இந்தியா நெக்ஸ்ட். ஆனால், அர்த்தமுள்ள மற்றும் நெறிமுறைகள் சார்ந்த ஊடகத்தை நோக்கிய முதல் படி" என்று வர்ணித்தார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி A.M.அஹமதி அவர்கள் முதல் பிரதியை .வெளியிட, அதனை வழக்கறிஞர் ND பஞ்சொளி அவர்களும், பேராசிரியர் சாய்பாபா அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஷம்சுல் இஸ்லாம் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக இவ்விழாவில் கலந்துகொண்டு இப்புதிய முயற்சியை பாராட்டிப் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக