அமெரிக்காவிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ள நிலையில், எந்த பணிக்குச்
சென்றாலும், நாளை கழுத்தில் கத்தி விழுமோ என்ற கவலை வாட்டுகிறது.
அப்படியான நிலையிலும், இந்தப் பணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளதை
நீங்கள் அறிவீர்களா?
கமர்ஷல் விமானங்களில் விமானி பணிதான் அது.
அண்மைக் காலத்தில் விமானிகளுக்கான தேவை உச்சத்துக்கு செல்லப்
போகின்றது. ஆசிய விமான நிறுவனங்களில் மட்டுமின்றி, வட அமெரிக்காவில்கூட
ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாவதைப் பார்க்கப் போகிறீர்கள்.
மிகச் சிறிய பிராந்திய விமான நிறுவனத்தில் ஆரம்ப பைலட்டாக பணியில்
இணையும்போது கிடைக்கும் பணம் ஒன்றும் ஆஹா ஓஹோ கிடையாது. ஆவரேஜாக ஆண்டுக்கு
$21,000 ஊதியம்தான் கிடைக்கும், ஆனால், அனுபவத்துடன் பெரிய விமான
நிறுவனத்துக்கு செல்லும்போது கிடைப்பது, சராசரியாக $186,000.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக