முதல் தடவை உண்ணாவிரதம் இருந்தபோது, இந்தியாவே கலங்கும் விதத்தில்
கூட்டமும், பப்ளிசிட்டியும் சேர்ந்த அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம்,
அடிக்கடி நடப்பதாலோ என்னவோ, பொதுமக்கள் ஆதரவை கணிசமாக இழந்துள்ளது.
டில்லியில் நடைபெறும் அன்னா குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரத
போராட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களின் எண்ணிக்கை 500 ஐ விட குறைவானது!
வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன்,
டெல்லி ஜந்தர் மந்தரில் அன்னா குழுவினர் நடத்தும் காலவரையற்ற உண்ணாவிரத
போராட்டம், கடந்த புதன்கிழமை துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே மக்கள்
பெருமளவில் வரவில்லை.
இதற்கிடையே, உண்ணாவிரத போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற பெண்
நிருபர் ஒருவரிடம், யாரோ சில்மிஷம் செய்ததாக மற்றொரு விவகாரம் கிளம்பி
நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. சில்மிஷம் செய்தவர் என ஒருவரை போலீஸ்
அரஸ்ட் செய்துள்ளது. பத்திரிகையாளர்களே அந்த நபரை பிடித்துக்
கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் என்ன வாக்குமூலம் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை. ஒருவேளை
அவரிடம் இருந்து அன்னா குழுவினருக்கு பாதகமான வாக்குமூலம் ஒன்று
வெளியானால், மத்திய அரசு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். இதில்
மீடியாவும் தொடர்பு பட்டுள்ளதால், எதிர்மறையான பப்ளிசிட்டி கிடைக்கும்!
கைது செய்யப்பட்ட நபர் யார் என்ற விபரத்தை போலீஸ் வெளியிடவில்லை.
“உண்ணாவிரத போராட்டத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்
வந்தவர்கள் இப்படிபட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கும், எமது
போராட்டத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது” என அன்னா குழுவினர்
குற்றம்சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக