கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாபெரும் இஃப்தார்
(நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி இன்று மாலை 5:30 மணியளவில் சுண்ணாம்புக் காளவாயிலுள்ள ஆயிஷா மஹால் 1, 2, 3 - இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சிக்கு தெற்கு பகுதி தலைவர் எ.ஷாநவாஸ் அவர்கள் வரவேற்புரையாற்ற, கோவை மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம் பாதுஷா அவர்களும், மாவட்டச் செயலாளர் ஹக்கீம் அவர்களும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முஹம்மது நாசர் அவர்களும், SDPI மாவட்டத் தலைவர் முஸ்தபா அவர்களும், மாவட்டச் செயலாளர் காதர் அவர்களும், அஷ்ரப் அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர் அவர்களும், அன்சர் ஷரீப் அவர்களும், 82-வது பகுதி மாமன்ற உறுப்பினர் முஹம்மது சலீம் அவர்களும் முன்னிலை வகித்தனர்.
சென்னை மாவட்ட
தலைவர் மௌலவி ஜெ.முஹம்மத் நாஜிம் காசிஃபி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில், "ரமளானில் மட்டுமே தொழுகை, நோன்பு, திருக்குர்ஆனை ஓதுதல், தர்மம் செய்தல் மற்றும் பிற நல்லறங்களை செய்யும் மக்கள் மற்ற மாதங்களில் இவைகளை செய்யாமல் தவிர்ந்து வருவதை வேதனையோடு சுட்டிக் காட்டினார். இது போன்று செயல்படுபவர்கள் ரமளானை வணங்குகிறோமா? அல்லது அல்லாஹ்வை வணங்குகிறோமா? என்று சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அல்லாஹ் ரமளானில் மட்டும் நல்லறங்களை செய்யச் சொல்லவில்லை. மற்ற மாதங்களிலும் தொடர்ந்து நல்லறங்கள் செய்து அல்லாஹ்வின் நேசத்தை பெறக்கூடிய மக்களாக மாறவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.அப்துல் ரகூஃப் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
பிறகு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழுகையிலும், விருந்திலும் கலந்து கொண்டு அனைவரும் மனநிறைவுடன் திரும்பினர்.
இதில் ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
|
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்களில் ஒரு பகுதி |
|
தலைமையுரையாற்றும் மாவட்டத் தலைவர் கே.ராஜா உசேன் |
|
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதரிகள் |
|
NWF தலைவர்கள் |
|
நோன்பு திறக்கும் சகோதரிகள் |
|
விருந்துண்ணும் ஆண்கள் |
|
நோன்பு திறக்கும் ஆண்கள் |
|
நோன்பு திறக்க காத்திருக்கும் ஆண்கள் |
|
சிறப்புரையாற்றும் ஜெ.முஹம்மத் நாஜிம் சென்னை மாவட்டத் தலைவர் | |
|
கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி |
Nice program .......................
பதிலளிநீக்கு