சுட்டுக் கொல்லப்பட்ட சேகர் |
அமெரிக்க கடற்படை வீரர்கள் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அந்த கப்பலை சுற்றிக் கொண்டு செல்ல முயற்சி செய்த போது கப்பலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக மீனவர் முனிராஜ் கூறியுள்ளார்.
துபாய் கடற் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை நோக்கி அமெரிக்க கடற்படை வீரர்கள் சுட்டதில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மீனவர் உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர்.தங்கள் கப்பலை நோக்கி விரைந்து வந்ததாகவும், அவர்களை அருகே வராதீர்கள் என்று பல முறை எச்சரித்தும், மீறி வந்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
ஆனால், அவர்கள் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்றும், அந்த கப்பலை சுற்றிக் கொண்டு செல்ல முயற்சி செய்த போது கப்பலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் துபாய் மருத்துவமனையில் காலில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் முத்து முனிராஜ் கூறியுள்ளார்.
எச்சரிக்கை ஒலி எவ்வாறு இருக்கும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவ்வாறு எதுவும் கேட்கவில்லை. திடீரென அவர்கள் சுடத் தொடங்கவிட்டனர். எனது நண்பன் இறந்துவிட்டான். அந்த நிமிடம் என்ன நடந்தது என்று கூட எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவரை அமெரிக்க கடற்படை சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரியது- ஈரான்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடல் பகுதியில், இந்திய மீனவரை அமெரிக்கக் கடற்படையினர் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரிய ஒன்று. அன்னியப் படையினரால் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவதை இந்த செயல் தற்போது நிரூபிப்பதாக அமைந்துள்ளது என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த
சம்பவத்திற்கு இந்திய அரசு இதுவரை கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக
என்ன நடந்தது என்பதை ஒரு அறிக்கையாக மட்டுமே வெளியிட்டுள்ளது. அதேசமயம்,
ஈரான் அரசு, இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளது, விமர்சித்துள்ளது.
அமெரிக்கர்களின்
இச்செயல் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ள ஈரான், இச்சம்பவத்தின் மூலம்
அன்னியப் படையினரால் பிராந்திய பாதுகாப்புக்கு ஊறு விளைந்திருப்பது
நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை
செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹமான்பராசத் கூறுகையில், நாங்கள்
ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற செயல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்து
வந்துள்ளோம். இதுபோன்ற அன்னியப் படையினரால் பிராந்திய பாதுகாப்புக்கு
ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டி வந்துள்ளோம்.
இப்பிராந்தியத்தில்
உள்ள நாடுகள் ஒருவருக்கொருவர் உதவி செய்து, அணுகுமுறையுடன் செயல்பட்டால்
இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். நாம் அனைவரும் சேர்ந்து பாதுகாப்பு
தொடர்பான விஷயங்களில் இணைந்து செயல்பட்டால், இதுபோன்ற அன்னியப் படையினரை
இப்பகுதியில் நடமாடாமல் தடுக்க முடியும் என்றார்.
அமெரிக்கக்
கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம்
நடந்த பகுதி ஈரானுக்கு அருகில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மீனவர்கள் மீது தவறில்லை, அமெரிக்கா சுட்டதுதான் தவறு- துபாய் போலீஸ் தலைவர்
இந்திய மீனவர்கள் சென்ற படகு சரியான திசையில்தான் போயுள்ளது. அவர்கள்
பக்கம் எந்தத் தவறும் இல்லை. அமெரிக்கக் கடற்படையினர்தான் தவறுதலாக
சுட்டுள்ளனர் என்று துபாய் போலீஸ் துறை தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் தஹி கல்பான் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆரம்பகட்ட
விசாரணையில், இந்திய மீனவர்கள் சென்ற படகு எந்த வகையிலும் யாருக்கும்
அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்கள் சரியான திசையில்தான் போயுள்ளனர். அவர்கள் மீது அமெரிக்கக்
கடற்படையினர் சுட்டதில்தான் தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது என்றார்.
துபாய்
போலீஸ் துறை தலைவரின் இந்த அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது. அமெரிக்கக் கடற்படையினர் பொய் சொல்லுவதை உறுதிப்படுத்தும்
விதமாக இருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு தவறு செய்த
அமெரிக்கக் கடற்படையினர் மீது சர்வதேச மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீவிர முயற்சிகள் எடுக்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்திய அரசு தீவிரமாக
செயல்படுமா என்பதுதான் தெரியவில்லை.
அமெரிக்க தூதரகம் முற்றுகை - SDPI கட்சி மாநில தலைவர் கே. கே. எஸ். எம். தெஹ்லான் பாகவி அறிவிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக