அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஜூலை 18, 2012

பர்மா முஸ்லிம் படுகொலைகள் - உலகம் மெளனம் காப்பதேன்? - மாணவி கேள்வி

பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மரில் ரோஹிங்க்யா முஸ்லிம்கள் மீது பெளத்த பயங்கரவாதிகள் இன அழிப்புப் படுகொலைகளை நிகழ்த்திவருவதாகவும், அந்நாட்டிலுள்ள சுமார் 1 கோடி முஸ்லிம்களை அழிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மியான்மர் மாணவி ஒருவர் கவலைதெரிவித்துள்ளார். எகிப்தின் ஷரீஆ கல்லூரி ஒன்றில் மாணவியாக இருக்கும் ஆயிஷா சுல்ஹி இதுபற்றி சர்வதேச ஊடகத்தின் கவனத்தை வேண்டியுள்ளார்.
அகிம்சையைப் பின்பற்றுவதாகக் கூறும் பெளத்தர்கள் மியான்மரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்துள்ளதாகவும், ஏராளமான முஸ்லிம் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், இச்செய்திகளை அறிய வரும் எந்த மனிதரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது; ஆயினும் சர்வதேச நாடுகளும் ஊடகங்களும் ஜீரணிக்க இயலாத மெள்னத்தைச் சாதித்து வருவது ஏன்? என்றும ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தனது வலைப்பக்கம் ஒன்றில் “பெளத்த  பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். அவ்வகையில் மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளை கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்" என்கிறார் ஆயிஷா. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்