மொகாடிசூ, ஜுலை.24-சோமாலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதரவு பெற்ற இயக்கம் என சந்தேகிக்கப்படும் அல்-ஷபாப் என்ற போராளிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த போராளிகளை சோமாலியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா ராணுவ விமானங்கள் மூலம் குண்டு வீசுகிறது.
சமீபத்தில் அமெரிக்கா நடத்திய குண்டு வீச்சில் இந்த போராளிகள்
இயக்கத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த
தாக்குதல் நடத்துவதற்கு அல்-ஷபாப் போராளி இயக்கத்திலேயே உள்ள சிலர்
தகவல் கொடுத்தனர்.
இதில் அமெரிக்காவுக்கு 2 பேர் சி.ஐ.ஏ. ஏஜெண்டாகவும், இங்கிலாந்துக்கு ஒற்றராக ஒருவர் செயல்படுவதையும் கண்டுபிடித்தனர். அந்த 3 உளவாளிகளை
தூக்கில் போட்டு விட்டதாக அல் ஷபாப் இயக்கம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக