அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஜூலை 09, 2012

கொன்றது மாவோயிஸ்ட்களை அல்ல! கொன்றழித்தது அப்பாவிப் பழங்குடி மக்களை!

சட்டீஸ்காரில் உள்ள பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்கேகுடா என்ற கிராமத்தில் புகுந்து மாவோயிஸ்ட்கள் 20 பேரை சண்டையில் சுட்டு வீழ்த்தினோம் என்று சட்டீஸ்கார் போலீசார் கூறியது பொய் என்றும் அங்கு சுட்டுக் கொன்றது அப்பாவி பழங்குடி மக்களையே என்றும் இந்து நாளிதழில் அமான் சேத்தி படங்குளுடன் செய்தி வெளியிட்டுள்ளார்.
அந்த செய்தி அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:
சுட்டுக் கொல்லப்பட்ட பழ்ங்குடி மக்கள் உடல்களை ஒன்றொன்றாகவே எரிக்கவோ புதைக்கவோ முடிந்தது. ஏனெனில் உதவிக்கு ஆளில்லை. புதைப்பதென்றால் அவ்வளவு சவக்குழிகளை வெட்டுவதற்கு கிராமத்தில் ஆண்கள் இல்லை. சில உடல்களை எரிக்கவேண்டும். ஆனால் எரிப்பதற்கான மரங்களை வெட்டி எடுத்து வருவது யார்?
கிராமத்தில் மக்கள் அமைதியாக ஒரு இடத்தில் கூடியிருந்தபோது பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமாக சுட்டித் தள்ளியுள்ளனர். இதில் 20 பேர் பலி. அதுவும் முதல் 5 வயதுக்குள் இருக்கும் சிறுவர்கள் 5 பேர் இதில் பலியாகியுள்ளனர். மேலும் போலீஸ் பதின்ம வயது சிறுமிகளை கற்பழிக்க முயன்றதாகவும் கிராம்த்தினர் குற்றம்சாட்டினர்.
கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் அன்று அந்த கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் ஒருவரும் இல்லை என்றார். விதைவிதைப்பதற்கு முன்னர் விதை திருவிழா பற்றி பேச நாங்கள் ஒன்று கூடினோம். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதே என்றார் அந்த கிராமத்து மனிதர்.
கூட்டம் பல மணிநேரங்கள் நீடித்தபோது திடீரென தங்களை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்தததாக அவர் தெரிவித்துள்ளார்.

"
எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் ஓட முயன்றோம் அப்போது பலரது கால்களில் துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. பலரது முதுகு மற்றும் மார்புகளிலும் குண்டுகள் பாய்ந்தது. இடையில் காகா சரஸ்வதி என்ற 12 வயது சிறுமி கொல்லப்பட்டதாக அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்தார்.
பல சடலங்களில் தலை மற்றும் கழுத்தில் குண்டு பாய்ந்த அடையாளங்கள் தெரிந்ததாக அங்கு சென்று விசாரித்த நிருபர் தெரிவித்துள்ளார்.

17
வயது சப்கா மிது என்பவரின் தொண்டை அறுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் பல உடல்கள் கிழித்து, கீறி காயப்படுத்தப்பட்டதற்கான அடையாளங்களுடன் இருந்தது தெரியவந்துள்ளது.
மாவோயிஸ்ட்கள் யாரும் இல்லாதபோது போலீஸ் காரர்கள் 6 பேர் காயமடைந்தது எப்படி என்று அந்தப் பழங்குடி மக்கள் அதிசயித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தங்களுக்குள்ளேயே சுட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் சந்தேகித்துள்ளனர்.
கொலைவெறித் தாக்குதலை முடித்து விட்டு ட்ராக்டரை வரவழைத்து சில உடல்களை எடுத்துச் சென்றனர். அப்போது ஒரு சிறுமியை தரதரவென்று இழுத்துச் சென்று அடித்து உதைத்து உடைகளைக் கிழித்து கற்பழித்து விடுவதாக மிரட்டப்பட்டுள்ளார். இதே போல் வேறு 3 சிறுமிகளுக்கும் நிகழ்ந்தது என்று அந்தச் சிறுமி கூறியுள்ளார்.
படைகள் மறுநாள் காலை வரை அந்தக் கிராமத்தில் இருந்தனர். அப்போது ரமேஷ் என்ற ஒரு நபர் வீட்டிலிருந்து வெளியே கழிப்பிடம் செல்ல வந்தபோது போலீசாரால் சுடப்பட்டார். அவர் அம்மா என்று அலறியபடியே வீட்டை நோக்கி வந்தபோது அவரைத் துரத்தி வந்த பாதுகாப்புப் படையினர் தாயின் முன்னாலேயே மகனை சுட்டுக் கொன்றுள்ளனர். இதனை தாயார் இர்பா ராஜு தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த வீட்டிற்குள் புகுந்து ரூ.5,000 திருடியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. கிராமத்தினர் விழாக்கள் குறித்து விவாதிக்க கூட்டம் கூட்டும்போது சில வேளைகளில் மாவோயிஸ்ட்களும் அழைக்கப்படுவதுண்டு.
மாவோயிஸ்ட்கள் இந்தப் படுகொலை போலி என்கவுண்டர் என்றும் கொல்லப்பட்டது அப்பாவி பழங்குடியினர் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால் கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள பாதுகாப்புப் படையோ நாங்கள் தற்காப்புக்காகவே சுட்டோம் என்றும், நாங்கள் நினைத்திருந்தால் இந்த கிராமம் முழுதையுமே காலி செய்திருக்க முடியுமே என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினரைக் கொன்ற பாதுகாப்புப் படையினர், போலீஸ் இவர்கள் மீது நடுநிலையான விசாரணை நடத்தி உச்சபட்ச தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்