அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், ஜூலை 23, 2012

பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி பேசவிடாமல் எம்.பி.க்கள் கூச்சல்

பாராளுமன்றத்துக்கு கவர்ச்சியாக வந்த பிரான்ஸ் பெண் மந்திரி
பிரான்சில் 13 ஜூலை 2010 முதல் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. உலகையும், உலகிலுள்ள அனைத்தையும் படைத்த அல்லாஹ்வினால் உலக மாந்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட பொதுமறை திருக்குர்ஆனில் பெண்கள் எப்படி தங்களுடைய உடலை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதனை பிரான்சின் முன்னால் அதிபர் சர்கோசி தடை செய்தார். அதே பிரான்சின் நாடாளுமன்றத்தில் பெண் மந்திரி கவர்ச்சியாக ஆடை அணிந்ததை சக உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்பொழுதாவது புரிகிறதா? அல்லாஹ் வழங்கிய சட்டம் எவ்வளவு மேன்மையானது என்று.  

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் மந்திரி செசிலி டியூப்ளாட் (37). இவர் கவர்ச்சிகரமான ஆடை அணிவதில் விருப்பம் உள்ளவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பாராளுமன்ற கூட்டத்துக்கு கவர்ச்சிகரமான ஆடை அணிந்து வந்திருந்தார்.அதாவது முழங்கால் தெரியும் அளவுக்கு பூக்களால் வடிவமைக்கப்பட்ட உடை அணிந்து இருந்தார். மிகவும் உயரமான ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து இருந்தார். இது மந்திரிகளின் உடை கட்டுப்பாட்டை மீறியதாக இருந்தது.

இந்த நிலையில் அவர் கூட்டத்தில் பேச தொடங்கினார். உடனே எம்.பி.க்கள் எழுந்து ஓ நாய் போன்று ‘ஓ’ வென கூச்சலிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பெண் மந்திரி செசிலிக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டது.

லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என பேச தொடங்கிய அவரால் பேச முடியவில்லை. எனவே, தனது பேச்சை உடனே நிறுத்திவிட்டார். இச்சம்பவம் குறித்து பாராளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

நான் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடங்கள் கட்டி விற்பனை செய்துவருகிறேன். இதுபோன்ற அவமானத்தை நான் வேறு எங்கும் சந்தித்ததில்லை. எம்.பி.க்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தங்கள் மனைவி மார்களை இதுபோன்று அவமதிப்பார்களா? என்று கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு முன்பு கேபினட் மந்திரி சபை கூட்டத்துக்கு இவர் ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார். அதற்கு முன்னாள் அதிபர் சர்கோசியின் பாப்புலர் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்