அசாம் மாநிலத்தில் வங்காள தேச எல்லை மாவட்டங்களில் கடந்த 20 வருடங்களாக
இன மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் வசித்துவரும் முஸ்லிம்களை வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி
சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் என்ற ஃபாசிஸ்ட் களின் தொடர் பரப்புரையால் போடோ இன மக்களுக்கும், முஸ்லிம்களுக்கிடையே பிரச்சினை இருந்து வருகிறது.
அங்கு வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களிடையே ஃபாசிஸ்ட்கள் செய்துவரும் விஷமப் பிரச்சாரத்தால் சின்ன சின்னதாக நடந்து வந்த மோதல்கள் இன்று பயங்கர இனக்கலவரமாக
உருவெடுத்திருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்த கலவரம் இன்னும்
ஓய்ந்தபாடில்லை. இதனால் உயிரிழப்புக்கு பஞ்சமில்லை. அங்கு ராணுவமும்
போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்த போதிலும் மோதல்கள் நடந்து
உயிரிழப்புகள் தொடர்கின்றன.
கோக்ரஜார், கிராங்க், துப்ரி, பொங்கைகாவோன் ஆகிய 4 மாவட்டங்களில்தான்
கலவரம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை கலவரத்துக்கு பலியானோர்
எண்ணிக்கை 34 ஆக இருந்தது. இதில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்த 4
பேரும் அடங்கும். நேற்று மாலையில் கலவர பூமியில் இருந்து மேலும் 8 உடல்கள்
மீட்கப்பட்டன. இவர்கள் அனைவரும் மோதலில் பலியானவர்கள்.
ஏராளமான ராணுவ வீரர்கள், எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார்
குவிக்கப்பட்டு தீவிர ரோந்து மேற்கொள்ளப்பட்டபோதும் கலவரம் கட்டுக்குள்
வரவில்லை என்பதையே இது காட்டுகிறது. கலவரம் நடந்து வரும் மாவட்டங்கள்
மற்றும் அந்த மாவட்டங்களை கடந்து செல்லும் பெரும்பான்மையான ரெயில்கள்
ரத்து செய்யப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்ய டிக்கெட்
எடுத்திருந்த பயணிகள் அந்தந்த ரெயில் நிலையங்களில் படுத்து
ஒய்வெடுக்கின்றனர்.
ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் சில இன்று காலை பலத்த பாதுகாப்புடன்
ஓடத்தொடங்கின. முஸ்லிம்களுக்கு வங்கதேசத்தில் இருந்து உதவிகள்
கிடைப்பதை தடுக்க எல்லை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு
அதிகரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக