அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

உரிமைகளுக்காக போராடுவோம்! கேம்பஸ் ஃப்ரண்ட் (CFI)!!

கோவை : கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (மாணவர்களுக்கான தேசிய அமைப்பு) சார்பாக மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம் எனும் பெயரில் தேசிய அளவிலான விழுப்புணர்வுப் பிரச்சாரத்தை 2011 செப் 12 முதல் 19 வரை நடத்த அவ்வமைப்பின் தேசிய குழு தீர்மானித்தது. இதனடிப்படையில் அவ்வமைப்பின் சார்பில் தமிழகத்திலும் கருத்தரங்கள், பேரணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்முனைக் கூட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 12\09\2011 மாலை 7 மணியளவில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள திவ்யோதயா ஹாலில் ''மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம்'' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவர் எஸ்.முஹம்மது ஷாஃபி, தலைமை ஏற்று, போலி என்கவுன்டர்கள், அஸ்ஸாம், மனிப்பூர் மற்றும் கஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் நடைப்பெறும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றால் சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் இவற்றிற்கு எதிராக நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மாணவ சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

NCHRO வின் மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், மாணவர்களின் சக்தி குறித்தும் உலகில் நடந்த அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் ஏற்படுத்திய புரட்சி குறித்தும் பேசினார். பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில் பத்திரிக்கைத்துறை ஆதிக்க சக்திகளின் கைகளில் சிக்கியிருப்பதையும், மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில் கார்ப்பரேட் மீடியாக்களின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

கேம்பஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி தனது முடிவுரையில் நாளைய இந்தியாவை வழிநடத்த போகும் தலைவர்களான மாணவ சமூகம் மக்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவில்லையெனில் நம் தேசம் அடிமைகளின் தேசமாக மாறிவிடும். எனவே நம் உரிமைகளை அறிந்து அவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் சபதமேற்று போராட வேண்டும் என கேட்டுகொண்டார்.

இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை சட்டக் கல்லூரி யூனிட் செயலாளர் சுலைஹா பர்வீன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பெங்களூரில் நடத்திய ஈத் மிலன்

பெங்களூர்: கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, சமூகத்தில் ஒற்றுமையும், பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செப்டெம்பர் 15 அன்று பெங்களூர் பென்சன் டவுனிலுள்ள ஆடம்ஸ் கோல்டன் ஹெரிடேஜ்-இல் வைத்து ஈத் மிலன் கலந்தமர்வுக் கூட்டத்தை நடத்தியது. 

விழாவில், Dr.துவாரகநாத், பிற்படுத்தப் பட்டோர் நல வாரியத்தின் ஆணையாளர் பேசுகையில், மத சார்பற்ற நாட்டில் சமூக நீதியின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். தலித்துகளும், முஸ்லிம்களும் சம உரிமையைப் பெற்று தேசிய நீரோடையில் கலக்க மிகப் பெரும் தடைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். சமூகத்தில் குறிப்பிட்ட சில இன மக்கள்  புறக்கணிக்கப்படுவதை தடுப்பதற்காக பாடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தோடு இணைந்து பணியாற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.





பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே அவர்கள் பேசுகையில், PFI செய்து வரும் ஏராளமான மக்கள் நலப் பணிகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டினார். பல்வேறு இயற்கைச் சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா துடிப்புடன் களமிறங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேவையில் துடித்துக் கொண்டு இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டும்.

அஹிந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் நரசிம்மையா அவர்கள் பேசும்போது, இன்றைய இந்தியாவுக்கு மதவாதமும், பாசிசமும் மிகப் பெரிய விரோதிகளாகும் என்று குறிப்பிட்டார்.





பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிஸ் அஹமத் அவர்கள் அமைப்பின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விளக்கமாகப் பேசினார். ஆனால் அதன் செயல் பாடுகளைப் பற்றி எவ்வாறு திரித்துக் கூறப்படுகிறது என்றும், அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்றும் விளக்கினார். 

விழாவில் உரையாற்றிய முக்கிய பிரமுகர்கள்:- அப்துல் வாஹித் சேட், துணை தலைவர், PFI, கர்நாடகா, அப்துல் மஜீத் கொட்லிபெட், கர்நாடக மாநில தலைவர், SDPI, B.K.அல்தாப் கான், மாமன்ற உறுப்பினர், JJR நகர், சபியுல்லாஹ், கர்நாடக துணை தலைவர், மத சார்பற்ற ஜனதா தளம், பேராசிரியர் நஜ்நீன் பேகம், மாமன்ற உறுப்பினர், படரயனபுற மற்றும் மௌலானா காதீர் அஹ்மத்.

நன்றி: டூசர்கில்

பாப்புலர் பிரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு

புது டெல்லி: 2011 நவம்பர் 26, 27 தேதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சமூக நீதி மாநாட்டை ("Social Justice Conference" [Samajik Nyay Conference]) புது டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது. புது டெல்லியில் அமைந்துள்ள தேசியத் தலைமையகத்தில் நடந்த இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாநாடு பற்றி முடிவு செய்யப்பட்டது.

கோப்புப் படம்

மாநாட்டில் சமூக நீதி பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் குறித்த அமர்வுகளும், இரண்டாவது நாளில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடாக இருப்பதால், மாநாட்டின் செய்தியை நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்படும்.

பாப்புலர் பிரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.சரீப் அவர்கள் மாநாட்டின் நோக்கத்தைப் பற்றிக் கூறும்போது, "தற்போதைய தேவையான சமூக-அரசியல் மாற்றத்தின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் சம நீதியை பெற்றுத் தருவதுமாகும். மாநாடு மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக குடிமக்களின் வாழ்வாதார உரிமைகளையும், கடமைகளையும் பற்றிய செய்தியை மக்கள் மத்தியில் பரவச் செய்வோம். சமூக நீதி மாநாட்டின் கொள்கை "நீதியின் மீது தேசத்தை கட்டி எழுப்புவோம்" (Build Nation on Justice [Mulk Banao Insaaf par]) என்பதாகும்.

மாநாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைமை மேற்பார்வையாளராக தேசியத் துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களும், உதவி மேற்பார்வையாளர்களாக முஹம்மது ஷாபி, முஹம்மது ரோஷன் ஆகியோர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், முஹம்மது சஹாபுதீன், முஹம்மது காலித், மௌலானா உஸ்மான் பேக், மௌலானா கலிமுல்லாஹ் ரஷாதி, வழக்குரைஞர் K.P.முஹம்மது ஷரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,
புது டெல்லி

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

கோவையில் வார்டு  சீரமைக்கும் பணி நடந்தது. அதில் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருக்கும் பகுதிகளை Schedule Caste வகுப்பினருக்கு எனவும், பெண்களுக்கு எனவும் தனி ஒதுக்கிடு செய்து முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது. 

ஆகவே  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக  கோவை மாவட்டத் தலைவர் k.ராஜா உசேன் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வார்டு சிரமைப்பில் நடந்த முறைகேடை கண்டித்தும், அதை சீரமைக்க தமிழக அரசை  வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 12-09-2011 அன்று காலை 11-00  மணியளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரலான மக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலிஸ் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த  ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

சிறுபான்மை விரோத போலீஸ் சுற்றறிக்கையை திரும்பப் பெறு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆந்திர அரசை வலியுறுத்தி அறிக்கை

ஹைதராபாத்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆந்திர மாநிலத் தலைவர் முகம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறையின் கூடுதல் பொது இயக்குனர் (உளவுத்துறை, ADGP) வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரையும், உள்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களால் ரமலான் மாதத்தில் பெறப்பட்ட ஜகாத் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாய மக்களால் துவங்கப்பட்ட சமூக பேரியக்கம் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. சமூகத்தை சக்திப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது பதிவு செய்யப்பட்ட இயக்கமாக, டெல்லியில் தேசிய தலைமையகத்தையும், கர்நூலில் மாநில தலைமையகத்தையும் கொண்டுள்ளது. கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு, சமூக சேவை, இயற்கை சீற்றங்களின்போது நிவாரண உதவி போன்றவற்றை ஆந்திர மாநிலம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான மக்கள் நலப் பணிகளைச் செய்து வருகிறது. அநீதி இழைக்கப்படும் மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தரவும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்கும் மதவாத, பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பது வெளிப்படையான உண்மையாகும். உண்மைகள் இவ்வாறிருக்க, மாநில காவல்துறை பாப்புலர் பிரண்டின் ரமலான் நிதி சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது மிகுந்த பாரபட்சமாகவும், ஆட்சேபத்திற்கு உரியதாகவும் உள்ளது. மேலும், ஜகாத் கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதென்பது மத சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

பாப்புலர் பிரண்ட் தடை செய்யப்படவும் இல்லை, மறைமுகமாகச் செயல்படுவதும் இல்லை. இதன் உறுப்பினர்களில் ஒருவரைக்கூட பயங்கரவாத வழக்குகளில் பதியப்பட்டதில்லை. இந்த அமைப்புக்கு வேறு எந்த வெளிநாட்டு தீவிரவாத அல்லது மற்ற அமைப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் உளவுத்துறையை மேற்கோள் காட்டி வெளிவரும் செய்திகள், "பாப்புலர் பிரண்ட் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளோடு அதற்குள்ள தொடர்புக்கு தெளிவான சான்றுகள் இல்லை" என்றும் தெரிவிக்கின்றன. இது போன்ற எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகள் உண்மையிலேயே காவல் துறையின் மூலமாகத்தான் வெளியாகின்றது என்றால் இது போன்ற வேலைகளை காவல் துறையின் உயர் பதவிகளில் ஊடுருவியுள்ள பாசிச சிந்தனை கொண்ட கயவர்களின் வேலையாகத் தான் இருக்கும்.

காங்கிரசின் தலைமயிலான மத சார்பற்ற அரசு ஆந்திர மாநிலத்தை நிர்வகித்து வருகிறது என்றாலும், அம்மாநில காவல் துறை மத சார்பு வாதத்தோடும், சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்துவருவதும் துரதிஷ்டவசமாக இது முதல் முறையாக நடந்தது அல்ல. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு விசாரணை என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லிம்களை சிறைப்பிடித்து, சித்திரவதை செய்தனர். உண்மையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்புகள் தான். முஸ்லிம்களின் மத உரிமையான ஜகாத் விநியோகித்தலைப்பற்றி தேவையற்ற கவனத்தை எடுத்துக் கொள்ளும் இந்த உளவுத் துறை, பல்வேறு ஹிந்துத்துவ மத அமைப்புகளுக்கு பணம் வந்து குவியும் வழிகளைப் பற்றி பாராமுகமாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது.


ஆந்திர மாநில காவல் துறையின் உளவுத்துறையில் ஊடுருவியுள்ள மதவாத பாசிச முகவர்களை களையெடுக்க வேண்டும் என்று முஹம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர காவல் துறையின் மத சார்பு போக்கை தடுக்கத் தவறினால், சிறுபான்மை சமூக அமைப்புகளையும், மனித உரிமை குழுக்களையும் ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேடுதல்