பெங்களூர்: கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, சமூகத்தில் ஒற்றுமையும், பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செப்டெம்பர் 15 அன்று பெங்களூர் பென்சன் டவுனிலுள்ள ஆடம்ஸ் கோல்டன் ஹெரிடேஜ்-இல் வைத்து ஈத் மிலன் கலந்தமர்வுக் கூட்டத்தை நடத்தியது.
விழாவில், Dr.துவாரகநாத், பிற்படுத்தப் பட்டோர் நல வாரியத்தின் ஆணையாளர் பேசுகையில், மத சார்பற்ற நாட்டில் சமூக நீதியின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். தலித்துகளும், முஸ்லிம்களும் சம உரிமையைப் பெற்று தேசிய நீரோடையில் கலக்க மிகப் பெரும் தடைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். சமூகத்தில் குறிப்பிட்ட சில இன மக்கள் புறக்கணிக்கப்படுவதை தடுப்பதற்காக பாடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தோடு இணைந்து பணியாற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே அவர்கள் பேசுகையில், PFI செய்து வரும் ஏராளமான மக்கள் நலப் பணிகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டினார். பல்வேறு இயற்கைச் சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா துடிப்புடன் களமிறங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேவையில் துடித்துக் கொண்டு இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டும்.
அஹிந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் நரசிம்மையா அவர்கள் பேசும்போது, இன்றைய இந்தியாவுக்கு மதவாதமும், பாசிசமும் மிகப் பெரிய விரோதிகளாகும் என்று குறிப்பிட்டார்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிஸ் அஹமத் அவர்கள் அமைப்பின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விளக்கமாகப் பேசினார். ஆனால் அதன் செயல் பாடுகளைப் பற்றி எவ்வாறு திரித்துக் கூறப்படுகிறது என்றும், அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்றும் விளக்கினார்.
விழாவில் உரையாற்றிய முக்கிய பிரமுகர்கள்:- அப்துல் வாஹித் சேட், துணை தலைவர், PFI, கர்நாடகா, அப்துல் மஜீத் கொட்லிபெட், கர்நாடக மாநில தலைவர், SDPI, B.K.அல்தாப் கான், மாமன்ற உறுப்பினர், JJR நகர், சபியுல்லாஹ், கர்நாடக துணை தலைவர், மத சார்பற்ற ஜனதா தளம், பேராசிரியர் நஜ்நீன் பேகம், மாமன்ற உறுப்பினர், படரயனபுற மற்றும் மௌலானா காதீர் அஹ்மத்.
நன்றி: டூசர்கில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக