அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

பாப்புலர் பிரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு

புது டெல்லி: 2011 நவம்பர் 26, 27 தேதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சமூக நீதி மாநாட்டை ("Social Justice Conference" [Samajik Nyay Conference]) புது டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது. புது டெல்லியில் அமைந்துள்ள தேசியத் தலைமையகத்தில் நடந்த இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாநாடு பற்றி முடிவு செய்யப்பட்டது.

கோப்புப் படம்

மாநாட்டில் சமூக நீதி பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் குறித்த அமர்வுகளும், இரண்டாவது நாளில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடாக இருப்பதால், மாநாட்டின் செய்தியை நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்படும்.

பாப்புலர் பிரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.சரீப் அவர்கள் மாநாட்டின் நோக்கத்தைப் பற்றிக் கூறும்போது, "தற்போதைய தேவையான சமூக-அரசியல் மாற்றத்தின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் சம நீதியை பெற்றுத் தருவதுமாகும். மாநாடு மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக குடிமக்களின் வாழ்வாதார உரிமைகளையும், கடமைகளையும் பற்றிய செய்தியை மக்கள் மத்தியில் பரவச் செய்வோம். சமூக நீதி மாநாட்டின் கொள்கை "நீதியின் மீது தேசத்தை கட்டி எழுப்புவோம்" (Build Nation on Justice [Mulk Banao Insaaf par]) என்பதாகும்.

மாநாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைமை மேற்பார்வையாளராக தேசியத் துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களும், உதவி மேற்பார்வையாளர்களாக முஹம்மது ஷாபி, முஹம்மது ரோஷன் ஆகியோர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், முஹம்மது சஹாபுதீன், முஹம்மது காலித், மௌலானா உஸ்மான் பேக், மௌலானா கலிமுல்லாஹ் ரஷாதி, வழக்குரைஞர் K.P.முஹம்மது ஷரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,
புது டெல்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்