புது டெல்லி: நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களான குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் 4 அல்ல, 16 தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை அவர்களின் பங்கு 4 மிகப் பெரும் குண்டுவைப்பு தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேகான் (செப்டம்பர் 29, 2008), சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் (பிப்ரவரி 18, 2007), மக்கா மஸ்ஜித் (மே 18, 2007), அஜ்மீர் தர்கா (அக்டோபர் 11, 2007).
செப்டம்பர் 16, 2011 அன்று புது டெல்லியில் காவல்துறை பொது இயக்குனர்களின் (Director General of Police - {DGP}) வருடாந்திர மாநாடு நடந்தது. அதில் உளவுத்துறையின் (IB) சிறப்பு இயக்குனர் தன்னுடைய அறிக்கையை மாநிலங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகளிடையே பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாட்டில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளில் 16 சம்பவங்களில் ஹிந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளது பற்றி புலனாய்வு நடந்து வருகிறது.
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு (புகைப்பட உதவி: AFP) |
காவி பயங்கரவாதத்தின் கோரமுகம் இதுவரை 4 சம்பவங்களில் மட்டுமே உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் உளவுத் துறை (IB) அதிகாரிகளின் கூற்றுப்படி இன்னும் அதிகமான குண்டுவெடிப்புகளில் அவர்களுக்குள்ள பங்கை வெளிப்படுத்துகிறது. இருந்த போதிலும், அந்த புலனாய்வு அதிகாரி மற்ற 12 தாக்குதல்களில் காவி தீவிரவாதிகளின் பங்கு குறித்து விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
மலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவார பெண் தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகிய இருவரும் கைதான பிறகு தான் காவி பயங்கரவாதம் அம்பலமானது. அத்தாக்குதலில் 7 அப்பாவிகள் பலியானார்கள். மகாராஷ்டிர காவல் துறை ஜனவரி 19, 2009-இல் மலேகான் குண்டு வெடிப்பு குறித்து தாக்கல் செய்த குற்ற நகலில் தாக்கூர், ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் பலரின் பங்கு குறித்தும் பதிவு செய்திருந்தது.
2007-இல் நடந்த இது போன்ற பல பயங்கரவாத குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, 2008-இல் ஜெய்பூர், அஹ்மதாபாத், டெல்லி ஆகிய மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை நாடு சந்திக்க நேர்ந்தது. 2007 குண்டு வெடிப்புகளில் நடந்ததைப் போலவே, நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 2008 கோரத் தாக்குதல்களுக்காகவும் கொத்து கொத்தாக சிறைப்பிடிக்கப் பட்டனர். இருந்த போதிலும், 2008 குண்டு வெடிப்பு குறித்து இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை. 2007 சம்பவங்களில் எப்படி சம்பந்தமே இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அது போலவே தான் 2008 சம்பவங்களிலும் நடந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் ஆதங்கப்படுகின்றனர். இருந்தாலும், புலனாய்வுத் துறையினர் இந்தத் தாக்குதல்களில் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை சந்தேகிக்கின்றனர்.
மலேகான் குண்டு வெடிப்பு (புகைப்பட உதவி: அவுட் லுக்) |
அதே காவல்துறை பொது இயக்குனர்கள் மாநாட்டில், பாரதப் பிரதமர் Dr.மன்மோகன் சிங் அவர்கள் பேசும்போது, சட்டத்தை அமுல்படுத்து பவர்களும், புலனாய்வு துறைகளும் சிறுபான்மையினர் மீது மட்டும் குற்றப்பார்வை பார்ப்பது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். நடப்பில் இருக்கும் இது போன்ற நடைமுறைகள் தகுதி வாய்ந்த காவல் துறைக்கு ஏற்ற செயல் அல்ல. யூகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, குற்றத்தின் முழு பின்னணியையும், காரணங்களையும் அறிந்து உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
தீவிர புலனாய்வுக்குப் பிறகு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா போன்ற இடங்களில் குண்டு வைத்தது ஹிந்துத்துவ அமைப்புகளின் பல்வேறு பிரிவுகள் தான் என்பது நிரூபணமானது. RSS பிரச்சாரகர் சுவாமி அசிமானந்த என்பவர் இச்செயல்களை செய்தது காவிக் குழுக்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அசிமானந்த நவம்பர் 2010 இல் ஹரித்வாரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நன்றி: TCN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக