திங்கள், அக்டோபர் 22, 2012
சனி, அக்டோபர் 20, 2012
பிடிக்காதவர்களை ஒடுக்கத்தான் ரெளடிகள் பட்டியலா? நீதிபதி ஆவேசம்
காவல் துறை நினைத்தால், ஒருவரை எப்படி வேண்டுமானாலும் பழிவாங் கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் வேடியப்பன் வழக்கு.
தந்தை
பெரியார் திராவிடர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக
இருப்பவர் வேடியப்பன். அரூர் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் சேவைக்கு
2,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக அவரிடம் சிலர் புகார் சொன்னதை
வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை அரூர்
மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேச அவரை
வரச்சொல்ல... அந்த சந்திப்பில் மோதல் நடந்துள்ளது.
வியாழன், அக்டோபர் 18, 2012
SDPI கட்சியின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்
SDPI கட்சியின் பூரண மதுவிலக்கிற்கான போராட்டம் அக்டோபர் 2ந்தேதி முதல் அக்டோபர் 17 வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. மதுவினால் ஏற்படும் தீங்குகளை மக்களுக்கு எடுத்துக்கூற சுவர் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் ஆகியவற்றை செய்தனர். அரசு மதுக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் 17ந்தேதி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் SDPI கோவை மாவட்டத் தலைவர் எ.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடந்தது.
புதன், அக்டோபர் 17, 2012
குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும்
இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய
அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்
தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு
மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று
நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர்,
மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில்
சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம்
மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து
இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய், அக்டோபர் 16, 2012
கல்விக்கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பில் கோவையில் உயர்கல்விக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி 14 ம்
தேதி மாலை 5 மணியளவில் உக்கடம் அருகிலுள்ள CGMA ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் A.S.
இஸ்மாயில் அவர்கள் தலைமையில் 24 லட்சம் ரூபாய்க்கான கடன் உதவி
வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களது
பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



