அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

திங்கள், டிசம்பர் 26, 2011

இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு

கடந்த டிசம்பர் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் கூடியது. மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்க துணை தலைவர் மு.முஹம்மது இஸ்மாயில், பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது, செயலாளர் மு. முஹம்மது ஷேக் அன்சாரி மற்றும் ஆரிஃப் ஃபைசல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இச்செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
‌1. கடந்த நவம்பர் 26, 27ல் டெல்லியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக நீதி மாநாடு தேசிய அளவில் குறிப்பாக வட இந்தியாவில் சிறுபான்மை மக்களிடையே பெருமளவில் சமூக நீதி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுள்ளது இம்மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்து பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு மாநாடு வெற்றியடையச் செய்துள்ளார்கள். இம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.

2. முல்லை பெரியார் அணை விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை உடனே நடை முறைப்படுத்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும் அமைதிப்பூங்காவான தமிழகத்தில் இப்பிரச்சனையினால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணித்து அமைதியை நிலை பெறச் செய்ய மாநில அரசு தேவையான முயற்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

‌3. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தாமதித்து கொண்டிருப்பதை மாநில செயற்குழு கண்டிக்கிறது. மாநிலத்திலும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு 3.5% சதவீதத்திலிருந்து 5% சதவீதமாக உயர்ந்த பரிசீலனை செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே மத்தியில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு மற்றும் மாநிலத்தில்5% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சென்னை, கோவை மற்றும் மதுரையில் வருகின்ற ஏப்ரல் 22, 2012 அன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.

4. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அணுமின் நிலையங்களின் ஆபத்துகளை கருத்தில் கொண்டும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பொருட்டு மத்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

‌ஏ.காலிது முஹம்மது
(மாநில பொதுச்செயலாளர்)

வியாழன், நவம்பர் 10, 2011

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சமூக நீதி மாநாடு - கலந்தாய்வு கூட்டம்

கோவை,  
வருகிற நவம்பர் 26, 27 இல் டெல்லியில் வைத்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது  அதனை முன்னிட்டு  கோவை மாவட்டத்தில் மாநாட்டை அறிமுக படுத்தும்முகமாகவும் பெரும்திரளான மக்களை அழைத்து செல்வதற்கான கலந்தாய்வு கூட்டம் கோவை மாவட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் சார்பாக அதன் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது
  
இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமை தாங்கினார் இதில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா வின் மாநில தலைவர் ஜனாப் இஸ்மாயில் சாஹிப் பேசுகையில் நம்மை சுற்றி நடக்கும் அநீதிகளை ஓழித்து  சமூக நீதியினை நிலை நாட்ட பாடுபட வேண்டியது அனைத்து குடி மக்களின் கடமையாகும் எனவேதான் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா "சமூக நீதி மாநாடு " ஒன்றை வருகிற நவம்பர் 26,27 இல் நமது நாட்டின் தலை நகர் புது  டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் வைத்து நடத்த இருக்கின்றது 

சமூக நீதியின் செய்தியை மக்களுக்கு கொண்டு செல்வது இந்த மாநாட்டின் நோக்கமாகும் சமூக நீதியினை மீட்டுஎடுப்பதற்கான போராட்ட களத்தில் நமது பங்களிப்பை நாம் செலுத்த  வேண்டிய காலம் வந்துள்ளது நீதிமிக்க தேசத்தை அமைப்பதற்கான முயற்சியில் வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் உடன் கைகோர்க்குமாறு அனைத்து தரப்பு மக்களையும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அன்புடன் அழைக்கிறது மேலும் இக்கூடத்தில் மாவட்ட செயலாளர் முஸ்தபா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இயக்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

சனி, அக்டோபர் 22, 2011

எஸ்.டி.பி.ஐ 300 இடங்களில் போட்டியிட்டு 56 இடங்களை கை பற்றியது




தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெறும் பெறும் கட்சிகள் தனித்து களம் கண்ட வேலையில் எஸ்.டி.பி.ஐ சில இஸ்லாமிய இயக்கங்கள், தலித் கட்சிகள், கிறிஸ்தவ அமைப்புகளின் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இதில் 56 இடங்களில் வெற்றியையும் பெற்றுள்ளது.


கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் டெல்லியில் வைத்து தொடங்கப்பட்ட தேசிய அரசியல் இயக்கமான எஸ்.டி.பி.ஐ பல மாநிலங்களிலும் அடித்தளமிட்டு வருகிறது. தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே மேற்கு வங்காளம், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டது. அதே போன்று சில மாதங்களுக்கு முன்னால் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட்டு 17 இடங்களில் வெற்றியை பெற்றது.

தமிழகத்திலும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் நன்கு அடித்தளமிட்டு வருகின்றனர். கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எந்தக்கட்சியுடனும் கூட்டணி சேராமால் தனித்து களம் கண்டது. தான் போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் எஸ்.டி.பி.ஐ யினர் கணிசமான வாக்குகளை பெற்றனர் .

தற்போது நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து வார்டு என மொத்தம் 300 இடங்களில் போட்டியிட்டது. இதில் 56 இடங்களில் வெற்றியை பெற்றுள்ளது. அதே போன்று இன்னும் பல பகுதிகளில் வெற்றி தோல்வியை மாற்றும் சக்தியாகவும் எஸ்.டி.பி.ஐ உருவெடுத்துள்ளது. சென்னையில் மாநகராட்சி மேயர் உட்பட மொத்தம் 21 இடங்களில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால் சென்னை மண்ணடி 60வது வார்டில் போட்டியிட்ட அமீர் சுல்தான் மற்றும் 53 வார்டில் போட்டியிட்ட புஷ்பராஜ் ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்று திராவிட கட்சிகளின் தோல்விக்கு காரணமாயிருந்திருக்கிறார்கள்.


எஸ்.டி.பி.ஐயினர் பெற்ற வெற்றிகளின் விபரம் வருமாறு:-


கார்ப்பரேஷன் வார்டு - 2
முனிசிபாலிட்டி வார்டு - 2
டவுன் பஞ்சாயத்து வார்டு - 8
பஞ்சாயத்து வார்டு - 4
4

என மொத்தம் 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

சென்னை, ஈரோடு மாநகராட்சியில் SDPI ன் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கோவையில் ஐக்கிய ஜமாத் வேட்பாளருக்கு SDPI ஆதரவளித்தது. இதில் SDPI ஆதரவுடன் போட்டியிட்ட கோவை மேயர் வேட்பாளர் M.அமீர் அல்தாப் 36,471 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.அதேபோல் ஈரோட்டில் போட்டியிட்ட SDPIன் மேயர் வேட்பாளர் யூனுஸ் 4952 வாக்குகள் பெற்றுள்ளார். சென்னை மேயர் வேட்பாளர் அமீர் ஹம்சா 16,170 வாக்குகள் பெற்றுள்ளார்.


மாநகராட்சி மன்ற உறுப்பினர்களில் கோவையில் 82 வது வார்டில் போட்யிட்ட SDPI ன் வேட்பாளர் முகம்மது சலீம் வெற்றி பெற்றுள்ளார்.அதேபோல் நெல்லை மாநகராட்சியில் 36 வது வார்டு SDPI வேட்பாளர் மைதீன் பாத்திமா வெற்றி பெற்றுள்ளார்.



நகராட்சி வார்டுகள்:கடையநல்லூர் நகராட்சியில் 29-வது வார்டில் நைனா முஹம்மது கனி.

செங்கோட்டை நகராட்சியில் 21-வார்டில் செய்யத் ஷாகுல் ஹமீத் பாதுஷா.

பேரூராட்சி வார்டுகள்:திருநெல்வேலி பத்தமடை 4-வது வார்டு, புலாங்குடியிருப்பு 12-வது வார்டு, கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு 9, 13, 14, 15 வார்டுகள், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8-வது வார்டு மற்றும் 9-வது வார்டு


ஊராட்சியில் 33 உறுப்பினர்கள்SDPI சார்பாக போட்யிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல் 11 ஊராட்சி உறுப்பினர் பதவிகளில் SDPI வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முழு விவரம் கீழே கொடுக்க பட்டுள்ளது  

 

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

மோடியைத் தூக்கி நிறுத்துவதன் பின்னணி!

இந்து மதவெறியர் - குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி - பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளர் என்று தூக்கி நிறுத்தப்பட்டு வருகிறார். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பன ஊடகங்கள் - குறிப்பாக துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி உள்ளிட்டோர், மோடியின் மோசமான மனிதகுல விரோத நடவடிக்கை களைப் புறந்தள்ளி, அவற்றை மூடி மறைத்து, மோடி சிறந்த நிருவாகி, அவர் ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் பொருளாதார நிலையில் நிமிர்ந்து நிற்கிறது என்பது போன்ற பிரச்சாரத்தை சாவி கொடுத்து முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் "தலைவர்கள் மா நாடு"

தேனி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர்கள் மாநாடு கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரு தேதிகளில் தேனியில் வைத்து நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் சகோதரர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநிலம், மாவட்டம், வட்டம் மற்றும் கிளைத்தலைவர்கள் என நூற்றுக்கணக்கான சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.
17ஆம் தேதி காலை சரியாக 10 மணி அளவில் மர்ஹீம் ஆசிரியர் ஹிதாயத்துல்லாஹ் திடலில் மாநில தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் அவர்கள் கொடியேற்றி இம்மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில பொதுச்செயலாலர் சகோதரர் ஹாலித் முஹம்மது அவர்கள் மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாநில துணைத்தலைவரும், விடியல் வெள்ளி மாத இதழின் ஆசிரியருமான எம். முஹம்மது இஸ்மாயில் அவர்கள் புகைப்பட கண்காட்சியை துவக்கிவைத்தார். இந்த கண்காட்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகளை விவரிக்கும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப், எஸ்.டி.பி.ஐயின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழக தலைவர் செய்யது இபுராஹிம் உஸ்மானி, பாப்புலர் ஃப்ரண்டின் துணைத்தலைவர் எம். முஹம்மது இஸ்மாயில், பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் மற்றும் துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
இம்மா நாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் மனோதத்துவம் பற்றி உரை நிகழ்த்தி பின்னர் இது சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
ஞாயிறு மாலை சரியாக 6.00 மணி அளவில் இம்மாநாடு சிறப்பாக நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்!

இம்மா நாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
1. அரசு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு பல்வேறு நலப்பணிகள் அறிவித்திருந்தாலும் இத்திட்டத்திட்டங்களில் பயன்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டு செல்வதில் தேக்க நிலையே ஏற்பட்டுள்ளது. பல சமயங்களில் இது போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி பயன்படுத்தபடாமலேயே இருப்பதும் தெரியவருகிறது. மேலும் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் மிக குறைவாகவே உள்ளது. பல்வேறு அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் குறிப்பாக முஸ்லிம்கள் எத்தனை சதவீதத்தினர் இருக்கிறார்கள் என்ற வெள்ளை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்து துறைகளிலும் சக்திப்படுத்தும் இலக்கினை நோக்கி செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட், அரசு நலப்பணிகளை மக்களுக்கு கொண்டு செல்லும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
2. தியாகி இம்மானுவேல் அவர்களின் 54ஆவது நினைவு தினத்தில் பரமக்குடி மற்றும் மதுரையில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது. சூழ்நிலையை நீதியுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் கையாண்டிருந்தால் இத்தகைய துயர சம்பவம் நடைபெற்றதை தவிர்த்திருக்கலாம். தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரித்து தேவையான பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய காவல்துறை, ஒரு விதமான அராஜக போக்கை கடைபிடித்துள்ளது. தமிழக முதல்வர் இத்தகைய அராஜக போக்கை தடுத்து நிறுத்தவில்லையென்றால் அமைதிப்பூங்காவான தமிழகம் மீண்டும் அமளிக்காடாக மாறும் அபாயம் உள்ளது என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் இத்தருணத்தில் குறிப்பிடுகிறது. நடந்த சம்பவத்தை முறையாக நீதி விசாரணைக்குட்படுத்தி தகுந்த நியாயம் வழங்குவது தான் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க முடியும் என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் தெரிவிக்கிறது.
3. மக்கள் மத்தியில் சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இந்தியாவில் வாழக்கூடிய எல்லாதரப்பு மக்களுக்கும் சமமான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும், மேலும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் தனக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை போராடி பெற வேண்டும் என்ற அடிப்படையில் டெல்லியில் வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய‌ இரு தினங்கள் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு" ஒன்றை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமை முடிவுசெய்துள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இம்முடிவு தீர்மானிக்கப்பட்டது. இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் பொருட்டு தமிழகத்தில் பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனை கூட்டங்கள், சுவரொட்டி பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றின் வழியாக மாநாட்டினை விளம்பரப்படுத்த உள்ளோம். இதன் மூலம் மாநாட்டின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் பற்றி பிரச்சாரம் செய்யப்படும். இம்மாநாட்டிற்கு தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
4. குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி உண்ணாவிரதம் இருப்பது அரசியல் இலாபத்திற்காகவும் மக்களை திசை திருப்பும் செயலுக்காகவுமே அன்றி வேறில்லை. தொடர்ந்து பல அதிகாரிகள் மோடியை குஜராத் இனப்படுகொலை நடத்தப்பட்ட காரணமானவர் என்று குற்றம் சாட்டியிருக்கும் நிலையிலும், பல குழுக்கள் இது சம்பந்தமாக நடந்துவரும் வேளியிலும் அமைதி, மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி நடத்தும் உண்ணாவிரதம் மக்களை திசைதிறுப்பும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும் இதே காலகட்டத்தில் குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியின் நிர்வாகத்தை பல நாடுகளில் இராணுவ நடவடிக்கை மூலம் பல அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்கா புகழ்ந்துள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழக முதல்வர் மோடியின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து தன் பிரதிநிதியாக இரண்டு நபரை உண்ணாவிரதத்திற்கே குஜராத்திற்கு அனுப்புவது சிறுபான்மையினரின் மனதை புண்படுத்துவதாக இருக்கிறது. மோடி தேசிய மதச்சார்பின்மை மற்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஹிந்துத்துவா கொள்கைக்கு ஆதரவு தெரிவிப்பவர். நாட்டின் மதச்சார்பன்மை கொள்கையை கருத்தில் கொண்டு மோடியின் விஷயத்தில் தமிழக அரசு தன் அணுகுமுறையில் மறுபரிசீலனை செய்யவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.
5. கடந்த தி.மு.க ஆட்சியின் அண்ணா பிறந்த நாளை ஒட்டி 7 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்த 1405 ஆயுள் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்கள். அதில் முஸ்லிம் கைதிகள் மட்டும் பாரபட்சமாக விடுதலை செய்யப்படாமல் மிகப் பெரும் அநீதி நடைபெற்றது. ஆதிமுக அரசு சிறைவாசிகளின் விஷயத்தில் நடந்த மிகப்பெரும் அநீதியை சரிசெய்ய வழிவகை செய்யும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் ஏக்கத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் 15 அன்று தமிழக அரசு பொது மன்னிப்பில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யாதது சிறைவாசிகளின் குடும்பங்கள், முஸ்லிம் சமூகம், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் காலத்திலாவது தமிழ அரசு இதனை பரிசீலனை செய்து சிறைவாசிகள் குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டு கொள்கிறது.
6. நம் தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தந்தவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையிலும், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க உறுதிபூண்டு செயல்படவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருடா வருடம் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகிறது. நம் முன்னோர்கள் சுதந்திரம் வாங்கும் போது நம் தேசத்தை பற்றி கண்ட கனவான சமூக நீதி மற்றும் சம நீதி, ஊழலில்லா ஆட்சி போன்ற இலட்சியங்கள் இன்று புதைக்குழியில் தள்ளப்பட்டுள்ளது. நாட்டை அடகுவைக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் வெளியுறவு கொள்கைகள் நம் தேசத்தின் வளர்ச்சிக்கே பெரும் சவால்களாக உள்ளது. இத்தகைய சூழலை மாற்றி அமைத்து நம் தேசத்தை, நம் முன்னோர்களின் கனவின் அடிப்படையில் சம நீதி, மதச்சார்பின்மை போன்ற ஜனநாயகத்தின் கோட்பாடுகளுக்கு உட்பட்டு, நாட்டை சக்தி படுத்த வேண்டி கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வருடம் அரசு அனுமதியளிக்காததை உரிமை மறுப்பாகவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கருதுகிறது. கடந்த கால திமுக ஆட்சியில் 2008 ஆம் வருடம் இந்நிகழ்சியினை கொண்டாட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் நடத்தினோம். 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் கடந்த திமுக அரசியல் காவல்துறை அனுமதியுடன் எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாத வகையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தினோம். சிறுபான்மை சமூகம் நடத்தி வரும் ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு காவல்துறை மற்றும் உளவுத்துறை தேவையில்லாத அனுமானங்களை ஏற்படுத்தி பலவிதமான நெருக்கடிகளை கொடுப்பது துரதிஷ்டவசமானது. ஒரு சமூகத்தின் நியாயமான உரிமைகளை அதிகார துஷ்பிரயோகத்தால் தடுக்கும் தமிழக காவல்துறையின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறது இம்மாநாடு. உண்மையான ஜனநாயக கொள்கையை சக்திபடுத்த, நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட நீதிமன்றத்திற்கு செல்லும் நிலைக்கு சிறுபான்மையினர் தள்ளப்படுவதே இங்கு சமூக நீதி மற்றும் சம நீதி, மதச்சார்பின்மை புதைகுழியில் தள்ளப்பட்டுள்ளது என்பதை பறைசாற்றுகிறது. சுதந்திரம் நமது பிறப்புரிமை, அதை யார் தடுத்தாலும் அனுமதியோம் என்ற கொள்கையில் உறுதியாக நிற்கும் பாப்புலர் ஃப்ரண்ட் தன் உரிமைக்காக நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் இதனை எடுத்துச்செல்லும் என இம்மாநாடு தீர்மானிக்கிறது.
7. அக்டோபர் மாதம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல் பிரதிநிதியாக‌ வளர்ந்து வரும் எஸ்.டி.பி.ஐ எடுக்கும் முடிவுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது. எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்கள் வெற்றி பெற பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் முழுமையாக களப்பணி ஆற்றுவார்கள் என்பதை இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது. எஸ்.டி.பி.ஐ வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு சமுதாய மக்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
8. நாட்டில் அனைத்து துறைகளையும் ஊழல் ஆக்கிரமித்துள்ளது. காங்கிரஸ் அரசில் மாத்திரம் அல்ல கடந்த பா.ஜ.க ஆட்சியிலும் இதே நிலையே நீடித்தது. தற்போது பா.ஜ.க ஆட்சி செய்கின்ற கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இதே நிலையே நீடிக்கிறது. தங்களது ஊழலை மறைக்கவும், உள்கட்சி பூசலை மறைக்கவும் மக்களிடம் இழந்து போன ஆதரவை மீட்கவும் ஊழலுக்கு எதிராக ரத யாத்திரை நடத்தவிருப்பதாக பா.ஜ.க அறிவிப்பது கேலிக்குறியது. ஏற்கனவே அத்வானியின் ரத யாத்திரை வன்முறை யாத்திரையாக மாறி போனதை மத்திய அரசும் மாநிலம் அரசும், நாட்டு மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மக்களை ஏமாற்றும் இந்த ரதயாத்திரையை பா.ஜ.க கைவிடக்கோரி நாட்டு மக்கள் அரசிற்கு நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல்:எஸ்.டி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 14 இஸ்லாமிய கட்சிகள் அடங்கிய கூட்டணி


1

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கிறிஸ்தவ அமைப்புகள் இணைந்து தனி அணியாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன.

இந்தக் கூட்டணியில்
1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
4. இந்தியன் நேஷனல் லீக்
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை
6. தேசிய லீக் கட்சி
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா
13. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
14. இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகிய அமைப்புகளும், 6 கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை உள்ளன.

மொத்தமுள்ள 9 மாநகராட்சி மேயர் பதவிகளில், சென்னை உள்பட 3 மாநகராட்சிகளில் இஸ்லாமிய கூட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாநகராட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.

மேயர் தொகுதிகளில் மட்டும்தான் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, கவுன்சிலர், வார்டுகளில் யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்கள் போட்டியிடுவார்கள்

வியாழன், செப்டம்பர் 29, 2011

இந்தியாவில் ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட 16 தீவிரவாதத் தாக்குதல்கள்?

புது டெல்லி: நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களான குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் 4 அல்ல, 16  தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுவரை அவர்களின் பங்கு 4 மிகப் பெரும் குண்டுவைப்பு தாக்குதல்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மலேகான் (செப்டம்பர் 29, 2008), சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் (பிப்ரவரி 18, 2007), மக்கா மஸ்ஜித் (மே 18, 2007), அஜ்மீர் தர்கா (அக்டோபர் 11, 2007).

செப்டம்பர் 16, 2011 அன்று புது டெல்லியில் காவல்துறை பொது இயக்குனர்களின் (Director General of Police - {DGP}) வருடாந்திர மாநாடு நடந்தது. அதில் உளவுத்துறையின் (IB) சிறப்பு இயக்குனர் தன்னுடைய அறிக்கையை மாநிலங்களின் மூத்த காவல்துறை அதிகாரிகளிடையே பகிர்ந்து கொள்ளும் பொழுது, நாட்டில் இதுவரை நடந்த குண்டு வெடிப்புகளில் 16 சம்பவங்களில் ஹிந்துத்துவவாதிகள் ஈடுபட்டுள்ளது பற்றி புலனாய்வு நடந்து வருகிறது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு (புகைப்பட உதவி: AFP)

காவி பயங்கரவாதத்தின் கோரமுகம் இதுவரை 4 சம்பவங்களில் மட்டுமே உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் உளவுத் துறை (IB) அதிகாரிகளின் கூற்றுப்படி இன்னும் அதிகமான குண்டுவெடிப்புகளில் அவர்களுக்குள்ள பங்கை வெளிப்படுத்துகிறது. இருந்த போதிலும், அந்த புலனாய்வு அதிகாரி மற்ற 12 தாக்குதல்களில் காவி தீவிரவாதிகளின் பங்கு குறித்து விரிவான தகவல்களை வெளியிடவில்லை. 

மலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவார பெண் தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகிய இருவரும் கைதான பிறகு தான் காவி பயங்கரவாதம் அம்பலமானது. அத்தாக்குதலில் 7  அப்பாவிகள் பலியானார்கள். மகாராஷ்டிர காவல் துறை ஜனவரி 19, 2009-இல் மலேகான் குண்டு வெடிப்பு குறித்து தாக்கல் செய்த குற்ற நகலில் தாக்கூர், ஸ்ரீகாந்த் புரோஹித் மற்றும் பலரின் பங்கு குறித்தும் பதிவு செய்திருந்தது.

2007-இல் நடந்த இது போன்ற பல பயங்கரவாத குண்டு வெடிப்புகளுக்குப் பிறகு, 2008-இல் ஜெய்பூர், அஹ்மதாபாத், டெல்லி ஆகிய மூன்று இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை நாடு சந்திக்க நேர்ந்தது. 2007 குண்டு வெடிப்புகளில் நடந்ததைப் போலவே, நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 2008 கோரத் தாக்குதல்களுக்காகவும் கொத்து கொத்தாக சிறைப்பிடிக்கப் பட்டனர். இருந்த போதிலும், 2008 குண்டு வெடிப்பு குறித்து இன்னும் விசாரணையே துவங்கப்படவில்லை. 2007 சம்பவங்களில் எப்படி சம்பந்தமே இல்லாத முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்களோ, அது போலவே தான் 2008 சம்பவங்களிலும் நடந்துள்ளதாக கைது செய்யப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் ஆதங்கப்படுகின்றனர். இருந்தாலும், புலனாய்வுத் துறையினர் இந்தத் தாக்குதல்களில் இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பை சந்தேகிக்கின்றனர்.

மலேகான் குண்டு வெடிப்பு (புகைப்பட உதவி: அவுட் லுக்)

அதே காவல்துறை பொது இயக்குனர்கள் மாநாட்டில், பாரதப் பிரதமர் Dr.மன்மோகன் சிங் அவர்கள் பேசும்போது, சட்டத்தை அமுல்படுத்து பவர்களும், புலனாய்வு துறைகளும் சிறுபான்மையினர் மீது மட்டும் குற்றப்பார்வை பார்ப்பது குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார். நடப்பில் இருக்கும் இது போன்ற நடைமுறைகள் தகுதி வாய்ந்த காவல் துறைக்கு ஏற்ற செயல் அல்ல. யூகத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, குற்றத்தின் முழு பின்னணியையும், காரணங்களையும் அறிந்து உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

தீவிர புலனாய்வுக்குப் பிறகு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா போன்ற இடங்களில் குண்டு வைத்தது ஹிந்துத்துவ அமைப்புகளின் பல்வேறு பிரிவுகள் தான் என்பது நிரூபணமானது. RSS பிரச்சாரகர் சுவாமி அசிமானந்த என்பவர் இச்செயல்களை செய்தது காவிக் குழுக்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அசிமானந்த நவம்பர் 2010 இல் ஹரித்வாரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நன்றி: TCN

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்


முஸ்லிம்கள் அதிகார பிரதிநிதித்துவத்திற்கு வராத வகையில் முறைகேடாக கோவையில் வார்டு சீரமைப்பு செய்த அதிகாரிகளை கண்டித்தும், அதை மறு பரிசீலனை செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் 20.09.11 அன்று மாலை 4.30 மணிக்கு கரும்புக்கடை, ஆத்துப்பாலத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் கோவை மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் அவர்கள் தலைமை தாங்கினார். மற்றும் மாவட்டச் செயலாளர் எ.முஸ்தபா, பகுதித் தலைவர் முஹம்மது அலி மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பொது மக்களும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். 
















வெள்ளி, செப்டம்பர் 16, 2011

உரிமைகளுக்காக போராடுவோம்! கேம்பஸ் ஃப்ரண்ட் (CFI)!!

கோவை : கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (மாணவர்களுக்கான தேசிய அமைப்பு) சார்பாக மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம் எனும் பெயரில் தேசிய அளவிலான விழுப்புணர்வுப் பிரச்சாரத்தை 2011 செப் 12 முதல் 19 வரை நடத்த அவ்வமைப்பின் தேசிய குழு தீர்மானித்தது. இதனடிப்படையில் அவ்வமைப்பின் சார்பில் தமிழகத்திலும் கருத்தரங்கள், பேரணிகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் வாயில்முனைக் கூட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் இப்பிரச்சாரத்தின் துவக்கமாக 12\09\2011 மாலை 7 மணியளவில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள திவ்யோதயா ஹாலில் ''மக்கள் உரிமைகளுக்காக போராடுவோம்'' விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதற்கு மாநில தலைவர் எஸ்.முஹம்மது ஷாஃபி, தலைமை ஏற்று, போலி என்கவுன்டர்கள், அஸ்ஸாம், மனிப்பூர் மற்றும் கஷ்மீரில் ராணுவத்தின் அத்துமீறல்கள், கருப்புச் சட்டங்களின் மூலம் நடைப்பெறும் அரச பயங்கரவாதம் ஆகியவற்றால் சிறுபான்மை, தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும் இவற்றிற்கு எதிராக நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் மாணவ சமூகம் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

NCHRO வின் மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், மாணவர்களின் சக்தி குறித்தும் உலகில் நடந்த அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் ஏற்படுத்திய புரட்சி குறித்தும் பேசினார். பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில் பத்திரிக்கைத்துறை ஆதிக்க சக்திகளின் கைகளில் சிக்கியிருப்பதையும், மக்கள் உரிமைகள் பறிக்கப்படுவதில் கார்ப்பரேட் மீடியாக்களின் பங்கு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

கேம்பஸ் ஃப்ரண்டின் மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது தம்பி தனது முடிவுரையில் நாளைய இந்தியாவை வழிநடத்த போகும் தலைவர்களான மாணவ சமூகம் மக்களின் உரிமைகளை அறிந்து கொள்ளவில்லையெனில் நம் தேசம் அடிமைகளின் தேசமாக மாறிவிடும். எனவே நம் உரிமைகளை அறிந்து அவற்றை மீட்கவும் பாதுகாக்கவும் சபதமேற்று போராட வேண்டும் என கேட்டுகொண்டார்.

இந்நிகழ்ச்சி கேம்பஸ் ஃப்ரண்டின் கோவை சட்டக் கல்லூரி யூனிட் செயலாளர் சுலைஹா பர்வீன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI) பெங்களூரில் நடத்திய ஈத் மிலன்

பெங்களூர்: கர்நாடக மாநில பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, சமூகத்தில் ஒற்றுமையும், பரஸ்பர புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செப்டெம்பர் 15 அன்று பெங்களூர் பென்சன் டவுனிலுள்ள ஆடம்ஸ் கோல்டன் ஹெரிடேஜ்-இல் வைத்து ஈத் மிலன் கலந்தமர்வுக் கூட்டத்தை நடத்தியது. 

விழாவில், Dr.துவாரகநாத், பிற்படுத்தப் பட்டோர் நல வாரியத்தின் ஆணையாளர் பேசுகையில், மத சார்பற்ற நாட்டில் சமூக நீதியின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். தலித்துகளும், முஸ்லிம்களும் சம உரிமையைப் பெற்று தேசிய நீரோடையில் கலக்க மிகப் பெரும் தடைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். சமூகத்தில் குறிப்பிட்ட சில இன மக்கள்  புறக்கணிக்கப்படுவதை தடுப்பதற்காக பாடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் வாரியத்தோடு இணைந்து பணியாற்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.





பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் முஹம்மது தும்பே அவர்கள் பேசுகையில், PFI செய்து வரும் ஏராளமான மக்கள் நலப் பணிகளிலிருந்து ஒரு சிலவற்றை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட்டுக் காட்டினார். பல்வேறு இயற்கைச் சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா துடிப்புடன் களமிறங்கி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தேவையில் துடித்துக் கொண்டு இருப்போருக்கு உதவிக்கரம் நீட்டும்.

அஹிந்த அமைப்பின் தலைவர் பேராசிரியர் நரசிம்மையா அவர்கள் பேசும்போது, இன்றைய இந்தியாவுக்கு மதவாதமும், பாசிசமும் மிகப் பெரிய விரோதிகளாகும் என்று குறிப்பிட்டார்.





பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் அனிஸ் அஹமத் அவர்கள் அமைப்பின் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் விளக்கமாகப் பேசினார். ஆனால் அதன் செயல் பாடுகளைப் பற்றி எவ்வாறு திரித்துக் கூறப்படுகிறது என்றும், அதனை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்றும் விளக்கினார். 

விழாவில் உரையாற்றிய முக்கிய பிரமுகர்கள்:- அப்துல் வாஹித் சேட், துணை தலைவர், PFI, கர்நாடகா, அப்துல் மஜீத் கொட்லிபெட், கர்நாடக மாநில தலைவர், SDPI, B.K.அல்தாப் கான், மாமன்ற உறுப்பினர், JJR நகர், சபியுல்லாஹ், கர்நாடக துணை தலைவர், மத சார்பற்ற ஜனதா தளம், பேராசிரியர் நஜ்நீன் பேகம், மாமன்ற உறுப்பினர், படரயனபுற மற்றும் மௌலானா காதீர் அஹ்மத்.

நன்றி: டூசர்கில்

பாப்புலர் பிரண்ட் நடத்தும் சமூக நீதி மாநாடு

புது டெல்லி: 2011 நவம்பர் 26, 27 தேதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சமூக நீதி மாநாட்டை ("Social Justice Conference" [Samajik Nyay Conference]) புது டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது. புது டெல்லியில் அமைந்துள்ள தேசியத் தலைமையகத்தில் நடந்த இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டத்தில் மாநாடு பற்றி முடிவு செய்யப்பட்டது.

கோப்புப் படம்

மாநாட்டில் சமூக நீதி பிரச்சினையின் பல்வேறு அம்சங்கள் குறித்த அமர்வுகளும், இரண்டாவது நாளில் ராம்லீலா மைதானத்தில் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெறும். தேசிய அளவிலான மாநாடாக இருப்பதால், மாநாட்டின் செய்தியை நாட்டின் மூலை முடுக்கிலுள்ள மக்களுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்படும்.

பாப்புலர் பிரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம்.சரீப் அவர்கள் மாநாட்டின் நோக்கத்தைப் பற்றிக் கூறும்போது, "தற்போதைய தேவையான சமூக-அரசியல் மாற்றத்தின் அவசியம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் சம நீதியை பெற்றுத் தருவதுமாகும். மாநாடு மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் மாபெரும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக குடிமக்களின் வாழ்வாதார உரிமைகளையும், கடமைகளையும் பற்றிய செய்தியை மக்கள் மத்தியில் பரவச் செய்வோம். சமூக நீதி மாநாட்டின் கொள்கை "நீதியின் மீது தேசத்தை கட்டி எழுப்புவோம்" (Build Nation on Justice [Mulk Banao Insaaf par]) என்பதாகும்.

மாநாட்டிற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மாநாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைமை மேற்பார்வையாளராக தேசியத் துணைத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்களும், உதவி மேற்பார்வையாளர்களாக முஹம்மது ஷாபி, முஹம்மது ரோஷன் ஆகியோர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசியத் தலைவர் இ.எம்.அப்துல் ரஹ்மான், முஹம்மது சஹாபுதீன், முஹம்மது காலித், மௌலானா உஸ்மான் பேக், மௌலானா கலிமுல்லாஹ் ரஷாதி, வழக்குரைஞர் K.P.முஹம்மது ஷரீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் தொடர்பு அதிகாரி,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா,
புது டெல்லி

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

கோவையில் வார்டு  சீரமைக்கும் பணி நடந்தது. அதில் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருக்கும் பகுதிகளை Schedule Caste வகுப்பினருக்கு எனவும், பெண்களுக்கு எனவும் தனி ஒதுக்கிடு செய்து முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது. 

ஆகவே  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக  கோவை மாவட்டத் தலைவர் k.ராஜா உசேன் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வார்டு சிரமைப்பில் நடந்த முறைகேடை கண்டித்தும், அதை சீரமைக்க தமிழக அரசை  வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 12-09-2011 அன்று காலை 11-00  மணியளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரலான மக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலிஸ் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த  ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

சிறுபான்மை விரோத போலீஸ் சுற்றறிக்கையை திரும்பப் பெறு: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆந்திர அரசை வலியுறுத்தி அறிக்கை

ஹைதராபாத்: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆந்திர மாநிலத் தலைவர் முகம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறையின் கூடுதல் பொது இயக்குனர் (உளவுத்துறை, ADGP) வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரையும், உள்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களால் ரமலான் மாதத்தில் பெறப்பட்ட ஜகாத் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமுதாய மக்களால் துவங்கப்பட்ட சமூக பேரியக்கம் தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா. சமூகத்தை சக்திப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது பதிவு செய்யப்பட்ட இயக்கமாக, டெல்லியில் தேசிய தலைமையகத்தையும், கர்நூலில் மாநில தலைமையகத்தையும் கொண்டுள்ளது. கல்வி விழிப்புணர்வு, பொருளாதார மேம்பாடு, சமூக சேவை, இயற்கை சீற்றங்களின்போது நிவாரண உதவி போன்றவற்றை ஆந்திர மாநிலம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான மக்கள் நலப் பணிகளைச் செய்து வருகிறது. அநீதி இழைக்கப்படும் மக்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தரவும், இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் சவாலாக விளங்கும் மதவாத, பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்பது வெளிப்படையான உண்மையாகும். உண்மைகள் இவ்வாறிருக்க, மாநில காவல்துறை பாப்புலர் பிரண்டின் ரமலான் நிதி சேகரிப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது மிகுந்த பாரபட்சமாகவும், ஆட்சேபத்திற்கு உரியதாகவும் உள்ளது. மேலும், ஜகாத் கொடுத்தவர்கள், வாங்கியவர்கள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்வதென்பது மத சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

பாப்புலர் பிரண்ட் தடை செய்யப்படவும் இல்லை, மறைமுகமாகச் செயல்படுவதும் இல்லை. இதன் உறுப்பினர்களில் ஒருவரைக்கூட பயங்கரவாத வழக்குகளில் பதியப்பட்டதில்லை. இந்த அமைப்புக்கு வேறு எந்த வெளிநாட்டு தீவிரவாத அல்லது மற்ற அமைப்புகளோடு எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் உளவுத்துறையை மேற்கோள் காட்டி வெளிவரும் செய்திகள், "பாப்புலர் பிரண்ட் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளோடு அதற்குள்ள தொடர்புக்கு தெளிவான சான்றுகள் இல்லை" என்றும் தெரிவிக்கின்றன. இது போன்ற எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகள் உண்மையிலேயே காவல் துறையின் மூலமாகத்தான் வெளியாகின்றது என்றால் இது போன்ற வேலைகளை காவல் துறையின் உயர் பதவிகளில் ஊடுருவியுள்ள பாசிச சிந்தனை கொண்ட கயவர்களின் வேலையாகத் தான் இருக்கும்.

காங்கிரசின் தலைமயிலான மத சார்பற்ற அரசு ஆந்திர மாநிலத்தை நிர்வகித்து வருகிறது என்றாலும், அம்மாநில காவல் துறை மத சார்பு வாதத்தோடும், சிறுபான்மை சமூகத்தை குறிவைத்து நடவடிக்கை எடுத்துவருவதும் துரதிஷ்டவசமாக இது முதல் முறையாக நடந்தது அல்ல. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு விசாரணை என்ற பெயரில் பல அப்பாவி முஸ்லிம்களை சிறைப்பிடித்து, சித்திரவதை செய்தனர். உண்மையில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் ஹிந்துத்துவ அமைப்புகள் தான். முஸ்லிம்களின் மத உரிமையான ஜகாத் விநியோகித்தலைப்பற்றி தேவையற்ற கவனத்தை எடுத்துக் கொள்ளும் இந்த உளவுத் துறை, பல்வேறு ஹிந்துத்துவ மத அமைப்புகளுக்கு பணம் வந்து குவியும் வழிகளைப் பற்றி பாராமுகமாக இருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது.


ஆந்திர மாநில காவல் துறையின் உளவுத்துறையில் ஊடுருவியுள்ள மதவாத பாசிச முகவர்களை களையெடுக்க வேண்டும் என்று முஹம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திர காவல் துறையின் மத சார்பு போக்கை தடுக்கத் தவறினால், சிறுபான்மை சமூக அமைப்புகளையும், மனித உரிமை குழுக்களையும் ஒன்று திரட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதன், ஆகஸ்ட் 31, 2011

நாசரேத்தில் மசூதி இடிக்க முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!

ஆகஸ்ட் 30, 2011:

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழ‌டைந்து போனது.

இந்நிலையில் அந்த ஊரில் தற்போது வசிக்கும் 6 முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியைப் புனரமைப்பதற்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பாப்புலர் ப்ரன்ட் என்ற இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக பாப்புலர்           ப்ரன்ட் அம்மசூதியை ட்ரஸ்டின் கீழ் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மசூதி புனரமைக்கும் பணியில் ஈடுபடவே அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மசூதி இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடினார். பஞ்சாயத்திடம் அனுமதி கேட்காமல் மசூதி கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அதனை இடிக்க வேண்டும் என பஞ்சாயத்திடம் புகாரும் கொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு இந்து முன்னணி தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது இப்பிரச்சினையை பூதாகரமாக்கவே அப்பகுதியில் வகுப்பு கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. “மசூதியினைப் பஞ்சாயத்து நிர்வாகம் இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்” என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

பாபரி மஸ்ஜித் வழக்கு: பாப்புலர் ஃப்ரண்ட் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி பாபரி மஸ்ஜித் நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கெதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

Quantcast

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்யவேண்டும் என்றும், பாபரி மஸ்ஜித் நின்றிருந்த 2.7 ஏக்கர் நிலத்தை உத்தரப் பிரதேச வக்ஃப் வாரியத்திற்கு வழங்கிட உத்தரவிடவேண்டும் என்றும் கோரிக்கை வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.http://www.popularfrontindia.org/pp/sites/default/files/imagecache/Poster/babri_awareness_campaign_popular_front.png
பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும், ஆதலால் அந்த நிலத்தை மூன்றாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றும் 2010 செப்டம்பர் 10 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இது வெறும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலான ஆதாரங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் என்.எல்.கணபதி, ஆர்.சி.கப்ரியேல் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். செப்டம்பர் 2ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அப்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மூத்த வழக்கறிஞர் ருபேந்தர் சூரி ஆஜராவார்.

முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு விசித்திரமானது என்று கூறி நீதிபதிகள் அஃப்தாப் ஆலம், ஆர்.எம்.லோதா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்தத் தீர்ப்பை இடைநிறுத்தம் (Stay) செய்தது குறிப்பிடத்தக்கது.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்