அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஆகஸ்ட் 25, 2012

வட கொரியாவுக்கு பயப்படும் அமெரிக்கா

வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்காகவே ஜப்பானுடன் இணைந்து ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை விரிவாக்கம் செய்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அமெரிக்காவுடன் ஜப்பான் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறது.

ஜப்பானிடம் நிலம் மற்றும் கடலில் இருந்து ஏவுகணைகளைச் செலுத்தக்கூடிய கட்டமைப்பு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் எதிரி நாட்டு ஏவுகணைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் ரேடார் கருவியை அமைக்க அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

வதந்தியை பரப்புதல்: மத்திய உள்துறை அமைச்சருக்கு பாப்புலர் ஃபிரண்ட் பொதுச் செயலாளர் கடிதம்

சுஷில் குமார் சம்பாஜிராவ் ஷிண்டே
பெறுனர் 
திரு. சுஷில் குமார் சம்பாஜிராவ் ஷிண்டே 
மதிப்பிற்குரிய மத்திய உள்துறை அமைச்சர் 
நார்த் ப்ளாக், மத்திய தலைமைச் செயலகம் 
நியூ டெல்லி - 110 001.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: அரசுத்துறைகளை மேற்கோள் காட்டி பாப்புலர் ஃபிரண்ட்டின் மீது குற்றம் சுமத்தும் ஒரு சில ஊடகங்கள் 

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இது ஒரு நவீன-சமூக இயக்கம், தேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக உழைத்து வருகிறது. அஸ்ஸாமிய மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் குறித்த செய்திகளில் துரதிஷ்டவசமாக எங்களுடைய அமைப்பை தொடர்புபடுத்தி ஒரு சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை உங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதில் பாப்புலர் ஃபிரண்டின் ஈடுபாட்டை மறுக்கிறேன்.

வியாழன், ஆகஸ்ட் 23, 2012

ஈரானில் நடக்கும் அணி சேரா மாநாட்டில் பங்கேற்க பான் கி மூனுக்கு அமெரிக்கா எதிர்ப்பு

வாஷிங்டன்: ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்பதை, அமெரிக்கா  எதிர்த்துள்ளது. ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறைகூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ராணுவ தளபதி வந்த விமானம் மீது தலிபான்கள் ராக்கெட் வீசி தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ தளபதியின் விமானம் மீது தலிபான்கள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை களையெடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. அவர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி தலிபான்களை கொன்று வருகின்றனர்.

நேட்டோ படைகள் மீது தலிபான்களும் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், அமெரிக்க ராணுவ தளபதி மார்ட்டின் டிம்ப்சி, நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அங்கு நேட்டோ படை கமாண்டர் ஜான் ஆலன், ஆப்கன் ராணுவ தளபதி ஷெர் முகமது கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார். அமெரிக்க தளபதி மார்ட்டின் வந்த சி17 ராணுவ விமானம், பக்ராம் ராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 

புதன், ஆகஸ்ட் 22, 2012

அஸ்ஸாம் மக்களுக்கு எதிரான வதந்திகளில் சிக்க வைக்கும் முயற்சி: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!

தென்னிந்திய மாநிலங்களில் வாழும் அஸ்ஸாம் மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளுக்கான பழியை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்டை சிக்கவைக்கும் உண்மைக்கு புறம்பான ஊடகங்களின் செய்திகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று சில ஆன்லைன் பத்திரிகைகளும்,  தொலைக்காட்சி சானல்களும் அஸ்ஸாம் மாநிலத்தவருக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேசனல் சைபர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது என்று பரப்புரைச் செய்தன. இதனைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் மற்றும் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி ஆகியோர் கலந்துகொண்டு அவதூறானச் செய்திக்கு மறுப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.

தேடுதல்