வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
இளம்பெண்கள் குறித்து மோசமான கருத்து தெரிவித்த மோடிக்கு தலைவர்கள் கண்டனம்
சமீபத்தில்
ஒரு பத்திரிக்கைக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அளித்த
பேட்டியில், குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம்
வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல்
அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம்
பால் வாங்கி வர சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது
தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்கமாட்டேன்
என்கிறாள் என்று கூறியிருந்தார்.
சிறுவர்களை சிறைப்பிடிக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ்
![]() |
| அண்ணனை விடுவியுங்கள் என கதறி அழும் தங்கை |
ஜம்மு
காஷ்மீர்: மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன்
நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் உட்பட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு -
காஷ்மீர் மாநிலத்தில், தற்போது அமைதி நிலவுவதாக அம்மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா சமீப நாட்களாக, அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
குவாண்டனாமோ சிறை!
![]() |
| காட்டுமிராண்டி அமெரிக்கா |
உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில்
நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த
சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது
அமெரிக்கா!
அமெரிக்கர்களைத் தவிர வேறு யார் விஷயத்திலும் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத அமெரிக்காவினால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரிக்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் குவாண்டனாமோ சிறையிலடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது அமெரிக்கா.
புதன், ஆகஸ்ட் 29, 2012
நரோடா பாடியா வழக்கு: 32 பேர் குற்றவாளிகள்; 29 பேர் விடுதலை
![]() |
| தீவிரவாதிகள் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி |
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற நரோடா பாடியா
வழக்கில், 32 பேர் குற்றவாளிகளாக அறிவித்து ஆமதாபாத் சிறப்பு கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது.
95 அப்பாவி முஸ்லிம்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், பா.ஜ. முன்னாள் அமைச்சர் மாயா
கோட்னானி மற்றும் பஜ்ரங் தள் கட்சி முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி
உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




