அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், செப்டம்பர் 26, 2012

தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை

செப்டம்பர் 24, 2012
திருச்சி

சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி ‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர் (மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4 & 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.

திங்கள், செப்டம்பர் 24, 2012

2014ல் வெளியேறுகிறது அமெரிக்கா: சீனாவுடன் கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் அல்காய்தா, தலிபான் போராளிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன.

இவர்கள் புதிதாக தெரிவு செய்யப்படும் இராணுவ வீரர், போலிசாருக்கு பயிற்சிகளும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2014ஆம் ஆண்டுடன் நேட்டோ படைகள் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானைத் தாக்கினால் மூன்றாம் உலகப்போர் தான்: இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

ஈரானை இஸ்ரேல் தாக்கினால் மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் என்று அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதார தடை விதித்து ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அமெரிக்காவுக்கோ அதன் ஆதரவு நாடுகளுக்கோ அச்சப்படாமல் ஈரான் தன்னுடைய செயற்பாடுகளை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரே இரவில் ஐ.எஸ்.ஐ உளவாளியாக்கப்பட்டேன்: தமீம் அன்சாரி

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட தமிழக இளைஞர் தமீம் அன்சாரி தம்மீது பயங்கரவாதி முத்திரை குத்தப்பட்டமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள மரக்கறி இறக்குமதியாளரான சாஜி என்பவருடன் தொடர்பு உள்ளதாக கூறியே தமிழக காவல்துறை தம்மை கைது செய்தது.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

காவிரியை திறந்து விடாமல் தமிழர்களை கலங்கடிக்கும் பாஜக

மீண்டும் கொதிக்கிறது காவிரி. கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் எனக் கர்நாடகாவின் மைசூர், மண்டியா, பெங்களூரில் வசிக்கும் தமிழர்களிடையே பீதி.

 ''தமிழர்கள் அச்சப்படத் தேவை இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். தமிழகத்துக்குத் தண்ணீர் தர எதிர்ப்பவர்களை அமைதியான வழியில் மட்டுமே போராட அறிவுறுத்தி இருக்கிறேன். தமிழக அரசுடனும் தமிழர்களுடனும் சகோதரத்துவம், நட்புறவு பேணுவதே எங்கள் கர்நாடக அரசின் நோக்கம்!'' என்று கேள்விக்கு முன்னரே பேசத் தொடங்குகிறார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.

தேடுதல்