அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஜூன் 30, 2012

எகிப்தின் ஜனாதிபதியாக முகமது முர்ஸி இன்று பதவியேற்பு

எகிப்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற முகமது முர்ஸி, இன்று புதிய ஜனாதிபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எகிப்து ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி சார்பில் போட்டியிட்ட முர்ஸி, 51 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.


இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் 18 நீதிபதிகள் முன்பாக முர்ஸி புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொள்வார் என நீதிமன்ற துணைத்தலைவர் மஹர் சமி தெரிவித்துள்ளார்.

மோடி ஊழலற்றவர் என்றால் லோக் ஆயுக்தவை அமைக்க வேண்டும்

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் ஊழலற்றவர் என்று காட்ட விரும்பினால், முதலில் லோக் ஆயுக்தவை அமைக்க வழிசெய்ய வேண்டும் என்றார் அண்ணா ஹசாரெ குழுவின் அரவிந்த் கெஜ்ரிவால்.
 
மோடி ஊழல்வாதி என்கிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "மோடியை நான் ஊழல்வாதி என்று சொல்லவில்லை. அதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், ஊழல்களில் தொடர்புடைய தன்னுடைய அமைச்சரவை சகாக்களை அவர் பாதுகாக்கிறார். அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு ஆகாமல் பார்த்துக் கொள்கிறார். 

வியாழன், ஜூன் 28, 2012

வெற்று வாக்குறுதி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் சச்சார் கமிட்டி அறிக்கையை அடுத்து முஸ்லிம்களுக்காக தொடங்கப்பட்ட திட்டங்களை மிக மெதுவாக செயல்படுத்துகிறது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் (UPA) தன்னை "சிறுபான்மையினர் நலம் பேணும் அரசு" என்று சொல்லிக்கொள்வதில் ஒருபோதும் சோர்ந்து போனதில்லை. சிறுபான்மையினரிடம் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் அது தோல்வியை தழுவியுள்ளது. சிறுபான்மையினர் அதிக செறிவுள்ள மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 50 சதவீதத்தை கூட சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகம் செலவழிக்கவில்லை. சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியை (BSP) சேர்ந்த தாரா சிங் சௌஹான் தலைமையிலான சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான நாடாளுமன்ற நிலை குழு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சிறுபான்மையினருக்கான முயற்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளது வெளியிட்டுள்ளது. இது அந்த சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கு ஏதேனும் அர்த்தமிருக்கிறதா என்ற ஆச்சரியம் மட்டுமே மிஞ்சுகிறது.

ஷாக் அடிக்கும் மின் கட்டணம்: ஜெ அரசின் மற்றொரு சாதனை


மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தைபார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14 மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம்என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்.  
சரி கட்டண விவரம் பற்றி கீழே பார்க்கலாம். 

புதன், ஜூன் 27, 2012

இராமநாதபுரம் காவல்துறையின் சூழ்ச்சி முறியடிப்பு – கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் விடுதலை!

PFI மாநிலச் செயலாளர் ஜனாப்.காலித் முஹம்மத் 
பெரியப்பட்டிணம்: இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணத்தில் சுய ஒழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களை தீவிரவாத கும்பலை பிடிப்பது போல அதிரடியாக கைது செய்து பரபரப்பை ஏற்படுத்திய காவல்துறையின் சூழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் முறியடித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் காலித் முஹம்மது பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

செவ்வாய், ஜூன் 26, 2012

குடிபோதையில் பெண்களை கேலி செய்த தமுமுக வினரை தட்டிக்கேட்டதால் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் மீது கொலை வெறி தாக்குதல்

வட சென்னை மாவட்டம் லாலா குண்டா பகுதியில் குடிபோதையில் பெண்களை கேலி செய்து இழிவுபடுத்திய தமுமுக வினரை தட்டிக் கேட்டதால் எஸ்.டி.பி.ஐ யினர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. லாலாகுண்டா பகுதியில் உள்ள எஸ்.எம். தெருவில் இரவு நேரங்களில் குடித்துவிட்டு அப்பகுதியில் செல்ல...ும் பெண்களை த.மு.மு.க கும்பல் கேலி செய்து வந்தது. அதே போல் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அப்பகுதியில் வரும் பெண்களை இடிப்பது, கேலி செய்வது போன்ற ஈன செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். இது குறித்து பொதுமக்கள் பலர் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை அணுகி புகார் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக் கிழமை (24/06/2012) அங்கு சென்ற எஸ்.டி.பி.ஐ யின் செயல்வீரர்கள் ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர்கள் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளை தாக்கியதால் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று (25/06/2012) குடிபோதையில் திரண்ட நூற்றுக்கணக்கான தமுமுக மற்றும் மமக குண்டர்கள் அப்பகுதியில் இருந்த செயல்வீரர்கள் மூன்று பேர் மீது உருட்டுக்கட்டை, இரும்புக் கம்பி, கல், பாட்டில் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். மேலும் அப்பகுதியில் இருந்த எஸ்.டி.பி.ஐ யின் ஆதரவாளர்கள் கடைகள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபரம் அறியச்சென்ற எஸ்.டி.பி.ஐ யின் நிர்வாகிகள் மீது அக்கும்பல் கொலை வெறித்தாக்குதல் நடத்தியது. இதனால் எஸ்.டி.பி.ஐ இராயபுரம் தொகுதி துணைத் தலைவர் நியாமத், 48 வது வட்ட பொருளாளர் ஹபீஸ், செயல்வீரர்கள் நவ்சாத் மற்றும் நூர்தீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இராயபுரம் தொகுதி செயலாளர் கோல்டு ரபீக் மீதும் கொடுர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஹபீஸ் என்பவரை தமுமுக குண்டர்கள் கடத்திச் சென்று கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். அதேபோல் நூர்தீன் என்பவரை இரும்புக் கம்பி கொண்டு தாக்கியதில் தோல்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அக்குண்டர்களே காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான போலிஸ் அதிகாரிகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். இருந்தும் அங்கு கூடியிருந்த தமுமுக, மம கட்சி குண்டர்கள் தொடர்ந்து குடி போதையில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அங்கு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் குவியத் தொடங்கினார்கள்.

இதனைப் பார்த்த காவல்துறை மம கட்சி குண்டர்களை விட்டு விட்டு எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது கடுமையான தடியடி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ மாவட்ட நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகளை அணுகி தமுமுக, மம கட்சி குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் தெரிவித்தனர். அதேபோல் வட சென்னை மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்த 500க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் தமுமுக வினருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென தலைமையிடம் அனுமதி கோரினர். ஆனால் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகிகள் உறுதியளித்து தொண்டர்களை அமைதிப்படுத்தினர். மேலும் ஆளுங்கட்சி கூட்டணி என்ற அடிப்படையில் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட கட்டப்பஞ்சாயத்து காவல்துறை மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ தீர்மானித்துள்ளது. குடிபோதையில் பெண்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் சமுதாயப்பணியில் ஈடுபட்டு வரும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய தமுமுக வினரை அப்பகுதி மக்கள் அனைவரும் வன்மையாக கண்டித்துள்ளனர். அதேபோல் 4 பேரை அடிப்பதற்கு நூற்றுக்கணக்கில் ஆட்களை திரட்டிய தமுமுக குண்டர்களின் வீரத்தையும் பொதுமக்கள் நேரில் பார்த்தனர்.

ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்...

[உயர் ஜாதிக்காரர்களில் நாட்டுக்கு எதுவுமே செய்யாதவர்களின் பெயர்களில் எத்தனையோ வீதிகள்! சாலைகள்!! நகரங்கள்!!!
வரலாற்றைத் திருத்தி - திரித்து - எழுதி, அதனை முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். இதன் விளைவாக நித்தமும் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றார்கள்.


இராணுவம், காவல் துறை, அரசு நிர்வாகம் இவற்றில் முஸ்லிம்கள் மெல்ல மெல்ல புறக்கணிக்கப்பட்டு வருகின்றார்கள். இத்தனைக்கும் இலக்காக்கி நிற்கும் முஸ்லிம்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.
இதில் வேதனைக்குரிய செய்தி என்னவெனில் எத்தனையோ இயக்கங்கள் முஸ்லிம்களுக்கிடையோ தோன்றுகின்றன. இவற்றில் எதுவும் முஸ்லிம்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. அத்தனையும் இஸ்லாத்தைக் காப்பாற்ற இருப்பதாகவே அறிவிக்கின்றன.
இந்தியாவில் முஸ்லிம்களே இல்லை என்றாகி விட்டால் இஸ்லாம் எப்படிக் காப்பாற்றப்படும்? ஸ்பெயினில் முஸ்லிம்களே இல்லை என்றாக்கிவிட்டார்கள். ஆகவே அங்கே இஸ்லாம் இல்லை என்றாகிவிட்டது!
இஸ்லாமும் அதனைப் பின்பற்றும் முஸ்லிம்களும் பாமர முஸ்லிம்களால் தான் வரலாறு நெடுகிலும் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். இந்தப் பாமர முஸ்லிம்கள்தான் முஸ்லிம் மக்கள் தொகையில் 95 சதவிகித்தினர். வசதியான முஸ்லிம்கள் மொத்த முஸ்லிம் மக்கள் தொகையில் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் பாமர முஸ்லிம்களைக் குறை காண்பதிலும் உயர்ஜாதி இந்துக்களுக்கு துதிபாடுவதிலும்தான் தங்கள் காலத்தைக் கழித்து வருகிறார்கள்.]
 ஸ்பெயினைப் போல் முஸ்லிம்களைப் பூண்டோடு ஒழிக்கத் திட்டம்...
   வி.டி. இராஜசேகர்  
கி.பி 712 லிருந்து கி.பி 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி. 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது.
இன்றைக்கும் ஸ்பெயின் நாட்டு மக்கள் பேசிடும் மொழியில் அரபி மொழி அப்படியே விரவி வரக் கேட்கலாம். அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமியப் பண்பாட்டின் அரவணைப்பிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமியப் பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

திங்கள், ஜூன் 25, 2012

கோவையில் NWF நடத்திய 7 ஆண்டு கழித்த ஆயுள்சிறைவசிகளை விடுதலை செய்ய கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்

கோவையில் நேஷனல் விமென்ஸ் ஃப்ரண்ட்  ஜூன் 24, மாலை 3.00  மணிக்கு  7 ஆண்டு கழித்த ஆயுள்சிறைவசிகளை விடுதலை செய்ய கோரி நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் எழுச்சி உடன் துவங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர்  A.S.இஸ்மாயில் .அவர்கள் உரை நிகழ்த்தி துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து பேரணி NWF -ன் மாநில தலைவர் பாத்திமா ஆலிமா அவர்கள் தலைமையில்  1000 கணக்கான பெண்கள்  பேரணியாக  செஞ்சிலுவை சங்கம்   நோக்கி எழுச்சி பயணமாக ஆர்ப்பாட்ட  திடலை அடைந்தனர். 

ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி நிரல்

வரவேற்புரை M .பெனாசிர் .- மாவட்ட தலைவர்
தலைமையுரை : M .ஹபீப் நிஷா.- மாநில செயலாளர் .
சிறப்புரை : பவானி ப .மோகன் . NCHRO மாநில தலைவர்
                     பாத்திமா ஆலிமா.  NWF  மாநில தலைவர்
நன்றிஉரை : ஷர்மிலா- மாவட்ட செயலாளர்

வியாழன், ஜூன் 21, 2012

கத்தீல் சித்தீகி கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை!

கதீல் சித்தீகி 
புதுடெல்லி:குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீல் சித்தீகி கொலைச் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கு பொறுப்பை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா-சவூதி புலனாய்வு ஏஜன்சிகள் இணைந்து கைது செய்த ஃபஸீஹ் அஹ்மதின் விவகாரத்தில் நிலவும் மர்மத்தை விலக்க மத்திய அரசு தயாராக வேண்டும் என்றும் செயற்குழு கோரிக்கை விடுத்தது.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்புப் படையால் கைது செய்யப்பட்ட கத்தீல் சித்தீகி தீவிர பாதுகாப்பு மிகுந்த சிறையில் வைத்துக் கொலைச் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தீல் மெளனம் பாலிக்கவேண்டும் என விரும்பிய சிறை-போலீஸ்-புலனாய்வு ஏஜன்சிகளுக்கு தெரியாமல் இந்த கொலை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அரசு இவ்விவகாரத்தில் காட்டும் மெளனத்தை கலைக்கவேண்டும்.

திங்கள், ஜூன் 18, 2012

கற்பழிக்கப் படும் கஷ்மீர் தேச பெண்கள். தட்டிகேட்க ஆள் இல்லாத அவலம் !!!! ( மறு பதிவு )

கஷ்மீர் அங்கே இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கொலை செய்யலாம், பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம் பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும் , மகளையும் அடித்து கொலை செய்யலாம் பஸ்சுக்காக காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம், யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம் தேவையான போது கொன்று புதைக்கலாம்.

சனி, ஜூன் 16, 2012

சிறுபான்மை ஒதுக்கீடு:அரசு தரப்பு வழக்குரைஞரின் நிலைப்பாடு புதிராக உள்ளது – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா!

புதுடெல்லி:சிறுபான்மை உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆந்திரபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்க நிர்பந்திக்காத மத்திய அரசின் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் கவுரவ் பானர்ஜியின் நிலைப்பாடு புரியாத புதிராக உள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னரே நிச்சயித்தபடி சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் மேலும் தெரிவித்தது:
ஐ.ஐ.டியில் சேர்க்கைப் பெற்ற முஸ்லிம் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சிறுபான்மை உள் ஒதுக்கீட்டின் மூலம் தங்களது கனவு நினைவாகப் போகிறது என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தனர். ஆனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்திய நாடகம் மூலம் அவர்களை 27 சதவீத பொது பிரிவு எனும் குளத்தில் குதிக்கவைத்து ஏக்கமடைய வைத்துவிட்டது.

வெள்ளி, ஜூன் 15, 2012

ஜூன் 14 உலக ரத்த தான தினம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் INDIAN BLOOD BANK இணைந்து நடத்திய "இரத்தம் கண்டறியும் முகாம் மற்றும் இரத்த தானம்" திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் நடைபெற்றது. இதில் சுமார் 95 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

வியாழன், ஜூன் 14, 2012

கேன் வாட்டர் தொழில் ஒரு பார்வை

சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை... இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான்.

சந்தை வாய்ப்பு!

நகர்ப்புறங்களில் கேன் வாட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும் இதைத்தான் பயன்படுத்து கிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகள், திருமணங்கள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள் போன்ற வற்றிலும் கேன் வாட்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. இதனால் அதிகமான சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.

தீவிரவாத வேட்டை- ப.சிதம்பரம் வீட்டிற்கு முன்பு தர்ணா!

P.சிதம்பரம் 
புதுடெல்லி:தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை வேட்டையாடுவதை கண்டித்து டெல்லியில் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு முன்னால் இன்று(வியாழக்கிழமை) தர்ணா நடைபெற உள்ளது.

மனித உரிமைக்காக போராடும் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த தர்ணாவை நடத்துகின்றன. ஐஸா, ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேசன், சோலிடாரிட்டி அசோசியேசன்,

புதன், ஜூன் 13, 2012

இடஒதுக்கீடு:சிறுபான்மை சமூகத்தினரை ஏமாற்றும் வித்தையை ஐ.மு அரசு உடனே நிறுத்தவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட்!

இ.எம்.அப்துர் ரஹ்மான், தேசிய தலைவர், PFI        
புதுடெல்லி:சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொறுப்பற்ற அணுகுமுறைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு தொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்திலும், தற்பொழுது உச்சநீதிமன்றத்திலும் மத்திய அரசின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இதனை நிரூபிப்பதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திங்கள், ஜூன் 11, 2012

மியன்மாரில் அவசர நிலை பிரகடனம்

மியன்மாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரக்கீன் மாநிலத்தில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து ஜனாதிபதி தெய்ன் செய்ன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. 

சிரியாவின் பஷர் அல் அஸத் ஒரு கோவேறு கழுதை! ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி கடும் கண்டனம்

சிரியாவின் பஷர் அல் அஸத் ஒரு கோவேறு கழுதை என ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி கடுமையாக சாடியுள்ளார். சிரியா  மக்கள் விரைவில் வெற்றி பெறுவர் என்றும் கொடுங்கோலன் பஷரும் அவனது ஆட்சியும் இழிவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குத்பா பிரசங்கத்தின் போது ஷெய்க் கர்ளாவி சிரிய மக்களை விழித்துப் பேசினார்.  "சகோதரர்களே! உறுதியுடன் நில்லுங்கள். நீங்கள்தான் வெற்றிபெறுபவர்கள். பிரபஞ்சத்தில் இறை நீதிக்கும், இறை நியதிக்கும் எதிராக யாரும் நிற்க முடியாது. அநீதி நீதியை வெல்ல முடியாது. சத்தியம் அசத்தியத்தை வெல்ல முடியாது. இழிவு சிறப்பை வெல்ல முடியாது. தீமை நன்மையை வெல்ல முடியாது” என அவர் கூறினார்.

செவ்வாய், ஜூன் 05, 2012

நாம் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வளவு சம்பளம்? என்னென்ன சலுகைகள்?

1) நாடாளுமன்ற உறுப்பினருக்கு மாதம் 50,000 ரூபாய் சம்பளம், அது போக தினப்படியாக 2,000 ரூபாய் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும்போது.

2) ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வருடத்திற்கு 34 தடவை இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம், அவருடன், அவரது மனைவி, குழந்தைகள், சொந்தக்காரர்கள் என யாரை வேண்டுமானாலும், எத்தனை பேரை வேண்டுமானாலும் இலவசமாக ...அழைத்துச் செல்லலாம்!. உடன் செல்பவர்கள் வருடத்திற்கு 8 முறை அவரை காண தனியாக இலவசமாக செல்ல முடியும், செல்லும் போது, அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதுமானது, இந்தியாவிற்குள் சென்றால் ரயிலில் குளிர் சாதன முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானத்தில் முதல் வகுப்பு மற்றும் அதை விட உயர் ரக வகுப்புப் பிரிவுகளில் இலவசமாக அனுமதிகப்படுவார்கள்.

காஷ்மீரை நசுக்கும் இந்துத்துவமும், இந்தியமும் - சில குறிப்புகள்!

1. இந்தியாவை இந்துப் பேரரசாக வளர்க்க முனையும் இந்து மதவாத ஆதிக்க அரசியலை இந்துத்துவம் என்றும் மதச்சார்பின்மை பேசும் இந்தியத் தேசிய ஆதிக்க அரசியலை இந்தியம் என்றும் குறிப்பிடுகிறோம். இந்துத்துவமும் இந்தியமும் முரண்பட்டவை போல் தோன்றினாலும் அடிப்படையில் ஒன்றே. அணுகுமுறையில் மட்டுமே வேறுபாடு. இந்துத்துவம் நேரடியாகவும் இந்தியம் சுற்றடியாகவும் பார்ப்பனியக் கருத்தியலைச் சார்ந்திருப்பவை. இரண்டுமே தேசிய ஒடுக்கு முறையையும் சாதிய ஒடுக்குமுறையையும் செயல்படுத்துகிறவை. 

2. பாசக - ஆர்.எஸ்.எஸ் - பஜ்ரங் தளம் - இந்து முன்னணி போன்றவை இந்துத்துவ அமைப்புகளில் தலையாயவை. இந்தியத்தின் தலையாய அமைப்பு காங்கிரசாகும். இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் 'மதச் சார்பற்ற' எதிர்க்கட்சிகளும், இந்தியத் தேசிய இடதுசாரிக் கட்சிகளும் இவ்வகையிலானவையே.

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்