அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

செவ்வாய், ஜூலை 05, 2011

களம் காணும் நெஞ்சங்களுக்கு.....

மௌலானா மௌதூதி (ரஹ்)

ஒழுக்க வளர்ச்சிக்கு சமுதாயத்தின் கூட்டு வாழ்வைப் பலப் படுத்துங்கள் என்பதே என்னுடைய முதல் ஆலோசனை ஆகும்.

ஏனெனில் இன்று தீமைகளும் குழப்பங்களும் கைகோர்த்துக் கொண்டு ஒன்றாக சேர்ந்து வளர்கின்றன. கூட்டு முறையில் வளரும் அல்லது வளர்க்கப்படும் தீமைகளைத் தனிப்பட்ட முறையில் எதிர்த்து நிற்பது சற்று கடினமான செயலே!

எனவே நன்மையை விரும்புவோரும் அதற்காக பாடுபட நினைப்பவர்களும் ஒன்று பட்டு, கூட்டு முயற்சியினால் அத்தீமைகளை எதிர்த்துப் போரிட வேண்டும். காட்டாற்று வெள்ளத்தை ஒரு துரும்பு எதிர்த்துப் போராட முடியாது.  போராடுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஓடுகின்ற வெள்ளத்தோடு அதுவும் அடித்துச் செல்லப்பட்டுவிடுமே! பிறகு எங்கே போராடுவது? எனவே தனிப்பட்ட முறையில் சீர்திருத்த பணிகள் செய்வதை விட கூட்டான முறையில் செய்வதே மிகவும் சிறந்ததாகும்.

கூட்டு முயற்சியில் நற்செயல்கள் புரியும்போது நாம் எந்த அளவுக்கு நன்மை அடைகிறோம் என்பதை ஒவ்வொரு கணமும் எண்ணிப்பார்க்க வேண்டும். இணைந்து செயல்பட வேண்டும். என்ற ஆர்வமும் எழுச்சியும் நமக்குள் தோன்றிவிட்டால் பிறகு அத்தனை ஒழுக்கக்கேடுகளும் தூள் தூளாகி விடாதா?

- மௌலானா மௌதூதி (ரஹ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்