அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஜூலை 13, 2011

இஷ்ரத் போலி மோதல் கொலையில் உள்ள குளறுபடிகள்: மறு ஆய்வில் வெளியாகிறது

அகமதாபாத்: இஷ்ரத் ஜஹான், ஜாவேத் பிள்ளை இருவரையும் போலீசார் போலி மோதல் கொலையில் சுட்டுக் கொன்றனர். இதனை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) மறு விசாரணை செய்து வருகிறது. சுட்டுக் கொல்லப்பட்ட போலீசாரால் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (FIR) ஏராளமான குளறுபடிகள் உள்ளதை SIT சுட்டிக் காண்பித்துள்ளது. 

2004 ஜூனில்,  இஷ்ரத் மற்றும் அவரோடு சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற மூவரின் உடல்களிலும் துளைக்கப்பட்ட குண்டுகளை எடுத்து பரிசோதித்து பார்த்ததில் அதன் அளவும், தன்மையும் போலீசாரால் உபயோகிக்கப்பட்டதாக FIR- இல் பதிவு செய்யப்பட்ட குண்டுகளோடு மாறுபடுவதாக  மகாராஷ்டிராவிலுள்ள மூத்த காவல்துறை அதிகாரி சத்யபால் சிங் அவர்களின் தலைமையிலான (SIT) குழு கண்டறிந்துள்ளது.

இஷ்ரத் மற்றும் அவரோடு  சுட்டுக் கொல்லப்பட்ட மற்ற குற்றவாளிகளும் டாட்டா இண்டிகா காரில் பயணம் செய்யும்போது  காவல்துறையின் வாகனம் காரின் இடது பக்கத்தில் இருந்து தாக்குதல் தொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் காரின் வலது பக்கத்தில் குண்டு துளைத்துள்ளது என SIT அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தனர்.

 
SIT -யிலுள்ள துப்பறிவு நிபுணரின் கூற்றுப்படி, காரின் இடது பக்கத்தில் இருந்து சுடப்பட்டால் வலது பக்கம் குண்டு துளைக்க வாய்ப்பில்லை என்கிறார். அம்ஜத் ரானா என்பவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட 0.9 MM விட்டமுள்ள குண்டுகள் காவல் துறையில் பயன்படுத்தப்படுவதே இல்லை. காவல் துறையால் பயன்படுத்தப்படாத 0.38MM விட்டமுள்ள குண்டுகளும் அவர்களின் உடலைத் துளைத்துள்ளன.

இவைகள் காவல்துறையின் பதிவில் காணப்படும் மிக முக்கியமான தவறுகள் ஆகும். மோதல் கொலையில் ஈடுபட்ட அதிகாரிகள் ரிவால்வர், மெசின் கன், ஏகே-47, ஏகே-57, சண்டை துப்பாக்கி போன்றவற்றை பயன்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களின் உடலில் துளைக்கப்பட்ட குண்டுகள் இந்த ரகங்களை சேர்ந்தவை அல்ல.

இறந்தவர்களின் உடலில் நெஞ்சிலும், தொண்டையிலும், காதின் சோனையிலும் குண்டுக் காயங்கள் இருப்பதாக பிரேத  பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இவைகள் மிக அருகிலிருந்து சுடப்பட்டவைகள் ஆகும். மாறாக காவல் துறையினர் சொல்வதுபோல் தூரத்திலிருந்து சுடப்பட்டவை அல்ல.

இஷ்ரத், ஜாவேத், அம்ஜத் ரானா, ஜீசன் ஜௌகர் ஆகியோர் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறும் நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே கொல்லப்பட்டுவிட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை மேலும் கூறுகிறது. ஜூன் 15 அன்று மதியம் சம்பவம் நடந்ததாக காவல் துறை கூறுகிறது. ஆனால் ஜூன் 14 அன்று நடுநிசியிலேயே அவர்களின் உயிர் பிரிந்துவிட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

நீதிபதி  S P தமங் அவர்கள் தன்னுடைய புலனாய்வு அறிக்கையில் இது மோதல் கொலை அல்ல; மாறாக  திட்டமிட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக முன்பே கூறியிருந்தார். காவல் துறையின் பதிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தார். இருந்தாலும் இவரின் அறிக்கையை குஜராத் உயர் நீதி மன்றம் தடை செய்தது. அதன் பிறகு உயர் நீதி மன்றம் SIT -ஐ அமைத்து அடுத்த கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டது.

நன்றி: டூசர்க்கில்.நெட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்