அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஜூலை 08, 2011

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வலியுறுத்தி SDPI ஆர்ப்பாட்டம்

ஊழலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. அது போன்று தமிழகத்திலும் லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்க வலியுறுத்தி "சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI)" தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி கோவை மாவட்ட SDPI சார்பாக ஜூலை 7 வியாழனன்று மாலை 5 மணியளவில் செஞ்சிலுவை சங்கம் முன்பாக V.M.அபுதாஹீர்  (மாவட்டத் தலைவர், SDPI) அவர்கள் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. N.K.அஷ்ரப் (மாவட்டச் செயலாளர், SDPI) அவர்கள் வரவேற்புரை  ஆற்றினார்.




ஆர்ப்பாட்டத்தில் A.A.அப்துல் காதர் (மாவட்ட பொதுச் செயலாளர், SDPI ) ஆற்றிய சிறப்புரையில்,  "லோக் ஆயுக்தா ஒரு விசாரணை மன்றமாக செயல்படும் வகையில் ஏற்படுத்தப்பட  வேண்டும்" என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கோரிக்கையை அனைத்து வகையிலும் SDPI வலியுறுத்திப் போராடும் என்றும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், தமிழக உள்துறைச் செயலருக்கும் மனு கொடுக்கவிருப்பதாகவும் கூறினார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடக் கூடிய கட்சியாக SDPI இருக்கும் என்றும், அதற்கு எல்லோரும் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில் அன்சர் சரீப் (மாவட்ட துணைத் தலைவர், SDPI), A.J.அப்துல் கரீம் (மாவட்டச் செயலாளர், SDPI), அனீசுர் ரஹ்மான் (மாவட்டப் பொருளாளர், SDPI), தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள், செயல் வீரர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, லோக் ஆயுக்தாவை அமல்படுத்தக் கோரியும், ஊழலை கட்டுப்படுத்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்