அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வெள்ளி, ஜூலை 08, 2011

கூட்டுக்களவானிகளின் கூட்டு மனசாட்சி

ஆடு,மாடு,கோழித்திருடர்களுக்குக்கூட நமது இந்திய குற்றவியல் சட்டப்படி குறைந்தபட்ச சிறைத்தண்டனை வழங்க முடியும். ஆனால் முஸ்லிம்களின் 450 ஆண்டுகால உடமையான பாப்ரி மஸ்ஜிதைத் திருடியவர்களை எந்தச் சட்டத்தினாலும் உள்ளே தள்ளமுடியவில்லை.

ஆடுதிருடனும் கோழிகளவானியும் தமது நம்பிக்கையின் அடிப்படையில்தான் அவற்றை திருடினோம் என்றாலோ அல்லது அவ்வாறு திருடியத தேசபக்தி என்று நியாயப்படுத்தினாலோ 'சும்மா' விடுவோமா? பாபர் மசூதியைக் களவாடி இடித்தவர்கள் இப்படிச் சொல்லித்தானே நம்மை ஆண்டார்கள் எனும்போது சுரணையுள்ளவர்களுக்கு ரத்தம் கொதிக்காதா?

ஆடுகளவானிக்குப் பிரதமர் பதவியும்,கோழி களவானிக்கு துணைப் பிரதமர் பதவியும், ஜேப்படி திருடனுக்கு மத்திய அமைச்சர் பதவி அல்லது மாநில முதலமைச்சர் பதவிகளைக் கொடுத்தால் சகித்துக் கொள்வோமா? ஆனால் நமது முன்னாள் பிரதமர்,துணைப்பிரதமர் மற்றும் பல முன்னாள் மத்திய அமைச்சர்கள் பாபர் மசூதி இடிப்பில் கூட்டுக்களவானிகளாக இருந்தவர்களே எனும்போது நடுநிலையாளர்களுக்கு நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம்போல் உள்ளது.

காஷ்மீரை மண்ணின் மைந்தர்களான காஷ்மீரிகளுக்கு விட்டுத்தரமாட்டோம் என்று சர்வபுஜ பலம் காட்டி அடக்கி ஒடுக்கிவரும் இந்திய ராணுவத்தினரால் பாபர் மசூதியை இடித்தபோது கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது. அதைத்தொடர்ந்து மும்பையிலும் குஜராத்தில் கொத்து கொத்தாக முஸ்லிம்கள் கொல்லப்பட்டபோது நமது ராணுவத்தினால் ஒரு சங்பரிவார பயங்கரவாதியைக்கூட தடுத்து நிறுத்த முடியவில்லையே!

ஓரிரு நாட்களில் பாபர் மஸ்ஜித் உடமைகுறித்த வழக்கில் தீர்ப்பு வெளியாக இருப்பதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வழக்கின் தீர்ப்பு எதுவாக இருப்பினும் ஏற்கப் போவதில்லை என நீதிமன்றத்தையும் சட்டத்தையும் முன்கூட்டியே அவமதிக்கும் கும்பலின் குடுமியை பிடித்து நிறுத்த சட்டத்தால் முடியாதா?

சுதந்திர,குடியரசு தினங்களுக்கு சில மாதங்கள் முன்பிலிருந்தே முஸ்லிம்களை சந்தேக வளையத்தில் வைத்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் சிறைவைக்கும் காவல்துறையினரால் ஒருயொரு சங்பரிவாரக் குண்டனைக்கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணம் சொல்லி குண்டர் தடுப்புச் சட்டத்தில்'உள்ளே'தள்ளமுடியாதா?கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியாருக்கு மலம் கழிக்க வாழை இலை விரித்தவர்கள் அல்லவா நம் காவலர்கள்!

அப்சல் குருவுக்கான மரண தண்டனைக்கு நாட்டுமக்களின் கூட்டுமனசாட்சி என்ற விநோத காரணம் கண்டுபிடித்து தீர்ப்பெழுதிய உச்சநீதி மன்றத்தால், முஸ்லிம்களை அச்சுருத்தி வரும் காவிக்கயவர்களின் நரைமுடியைக்கூட தண்டிக்க வக்கில்லை.எனினும் வெட்கமின்றி 'சத்தியமேவ ஜயதே' என்போம்!

முஸ்லிம்கள் விசயத்தில் மட்டும் ஆட்சியாளர்கள், ராணுவம், நீதிமன்றம் என அனைத்துமே இந்துமயமாகி ஒருவருக்கொருவர் கூட்டுக்களவானியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர். முஸ்லிம்களைத் தண்டிக்க விழித்துக் கொள்ளும் கூட்டுமனசாட்சி சங்பரிவாரங்கள் விசயத்தில் கும்பகர்ண தூக்கம் போடுவதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்