அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சனி, ஜூலை 16, 2011

அல்-காய்தாவை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் ஹிந்து நாளிதழ் கடும் முயற்சி

Original_mg-qaeda-lead

அல்-காய்தாவை இந்தியாவிற்குள் கொண்டு வர பிரவீன் சுவாமி கடுமையான முயற்சியில் இறங்கியுள்ளார். உளவுத்துறையின் பெயரால் பொய்யை உண்மையாக்கும் நாசகார வேலையை மீண்டும் துவக்கிவிட்டார். இவரைப்பற்றி மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். எனவே நம்முடைய சந்தேகம் எல்லாம் ஹிந்து நாளிதளின் நம்பகத் தன்மையைப் பற்றித்தான். 

சென்னையிலிருந்து வெளிவரும் ஹிந்து நாளிதழ் நடுநிலையான, சிறப்பான கருத்துக்களை   தனது தலையங்கத்தில் பிரசுரித்து உணர்வுப்பூர்வமான பத்திரிக்கையாக அறியப்பட்டு வந்தது. பிரச்சினைகள்    குறித்த தெளிவான செய்திகளையும், அதன் மீதான தொடர் எழுத்துப் போரையும் செய்து நீதியை நிலைநாட்ட பாடுபடும். ராபர்ட் முர்டோச் சகாப்தத்தில் உள்ள தற்போதைய  பெரும்பாலான பத்திரிக்கைகள் ஆபாசத்தின் வலையில் வீழ்ந்த போதும் அதிலிருந்தும் தன்னை காத்து நாகரிக நடை போட்டு வரும் நாளிதழ் ஹிந்து. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இப்பத்திரிக்கையின் போலி பயங்கரவாத நிபுணர் பிரவீன் சுவாமி, கற்பனைகளை புனைவதில் வல்லவர் வாந்தி எடுக்கும்  எழுத்துக்களை அப்படியே பிரசுரித்து வருவதால் அதன் கண்ணியத்திற்கு மிகப்பெரும் இழுக்கு ஏற்பட்டு வருகிறது.


அமெரிக்காவின் வாசிங்டனிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் பீஸ் (Institute of Peace) என்ற கல்விக் கூடத்தில் 2004-2005 ஆம் ஆண்டில் கற்று அமெரிக்காவின் உருவாக்கமாக முழுமையாக மாறி, மதி மயங்கிய புலனாய்வுப் பத்திரிக்கையாளராக ஹிந்துவில் நுழைகிறார் இந்த குறுமதியோன் பிரவீன் சுவாமி. தன்னுடைய கற்பனை கலந்த வஞ்சகப் படைப்புகளை அமெரிக்காவின் இஸ்லாத்திற்கெதிரான சிலுவை யுத்தத்தின் ஒரு பகுதியாக வெளியிடத் துவங்கினார். அதனை இந்தியாவிலுள்ள ஹிந்துத்துவ வெறியர்கள் மிகவும் லாவகமாகப் பயன் படுத்திக் கொண்டனர். மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பிஜேபி மதவாத அரசும் தனது முஸ்லிம் விரோதப் போக்கை (இவரின் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு) கொடுமையான சட்டங்களை இயற்றி மறைத்துக் கொண்டது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஹிந்துவிலுள்ள ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது, "உளவுத் துறையோடு பிரவீன் சுவாமிக்கு மிகுந்த நெருக்கம் உள்ளதால் தான் அவரால் ஹிந்து நாளிதழில் நீடிக்க முடிகிறது. அதுவே அவருக்கு அடைக்கலமாக உள்ளது" என்றார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உளவுத்துறை புனையும் கற்பனைக் கதைகளை  பிரவீன் சுவாமி பரபரப்பான செய்திகளாக மாற்றிக் காட்டினார். பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை ஏஜன்சிகளின் கைப்பாவையாக யார் மாறினாலும், சுயமரியாதை உள்ள எந்த நாளிதழும் உடனே அவரை பணி நீக்கம் செய்யும். ஆனால் ஹிந்து நாளிதளின் பொறுப்பாளர் N.ராம் அவர்களுக்கு பிரவீன் சுவாமி மதிப்புமிக்க  சொத்தாவார். சில வருடங்களுக்கு முன்பு நான் மில்லி கெஜட்டில் பணியிலிருக்கும் சமயம், கஷ்மீர் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு இடைதரகர் கொண்டு வந்த "நல்ல செய்தி"யை பிரசுரித்தால் பிரதி மாதமும் ரூபாய் 40,000 பெற்றுத் தருவதாக அவர் சொன்னார். ஆனால் அதனை ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அப்பொழுதே, அங்கேயே   நான் நிராகரித்தேன். 

Praveen Swami (inset) again graces the pages of The Hindu
உள்படம்: பிரவீன் சுவாமி, மீண்டும் ஹிந்துவின் பக்கங்களை நிரப்புகிறார் 

பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்களும் சுவாமியின் கட்டுக்கதைகளுக்கு  எதிராக நடவடிக்கை வேண்டி நின்றபோதெல்லாம், அவர் தொடர்ந்து ஹிந்துவிலேயே பணியாற்றி வருகிறார். போதுமான இடத்தை நிரப்பிக் கொள்கிறார். சில நாட்களில் இரண்டு விதமான கதைகளை அளக்கிறார். இந்தியாவில் நடக்கும் எல்லா பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்கள் மட்டுமே காரணம் என்பது தான் இவரின் (குருட்டுப்) பார்வை. இதில் சமீபத்தில் உறுதிப்படுத்தப் பட்ட ஹிந்துத்வா தாக்குதல்களும் அடங்கும்.

உளவுத் துறையின் பெயரைப் பயன்படுத்தி சுவாமியால்  "இஸ்லாமியத் தீவிரவாதம்" என்ற கோணத்தில் புனையப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் தவறானவை என்பதால் கடுமையான விமர்சனதிற்குள்ளானது. நியூ டெல்லியிலுள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் "ஜாமியா ஆசிரியர்கள் ஒருமைப்பாட்டு சங்கம்" (JITSA) என்ற அமைப்பு "பாட்லா ஹவுஸ் என்கௌன்ட்டர்" குறித்து சுவாமி அளந்த கதைகளை கடுமையாக விமர்சித்தது. அந்த விரிவான விமர்சனத்தில், அந்த அமைப்பு (JITSA) பாட்லா ஹவுஸ் என்கௌன்ட்டர் தவறானது என்றும், இந்தியாவின் மிகப் பெரிய மருத்துவ நிறுவனமான 'AIIMS' வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின் படி இறந்தவர்கள் அனைவரும் திட்டமிட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. ஆனால் சுவாமி தன்னுடைய கிறுக்கல்களில் இறந்த மாணவர்கள் அனைவரும் உண்மையான என்கௌண்டரிலேயே கொல்லப்பட்டதாக கூறிக்கொண்டிருந்தார். தி ஹிந்துவோடு சுவாமிக்குள்ள நெருக்கம் பலதரப்பட்ட மக்களை வெறுப்பூட்டியது. எனவே அம்மக்கள் முகப்புத்தகத்தில் "வாயை மூடு பிரவீன் சுவாமி" என்ற குழுவை உருவாக்கி, சுவாமியின் கதைகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்று தொடர்ந்து எழுதி வந்தனர். JITSA- இன் அறிக்கையில், பிரவீன் சுவாமியின் சிறுகதைகள் இந்திய செக்யூரிட்டி ஏஜென்சிகளை திருப்திப்படுத்த மட்டுமே எழுதப்படுகின்றது என்றும் கூறுகிறது. சுவாமிக்கு எதிராக வலைதளங்களில் வெளியான விமர்சனங்களால், குறிப்பாக அவரின் நண்பர் அன்னி ஜைதியின் ப்ளாகில் வெளியான விமர்சனத்தாலும் விரக்தியடைகிறார். இது போன்ற பிரசாரத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர் விமர்சனமும் செய்கிறார். இருந்தபோதிலும் "சுவாமியும் நண்பர்களும்" என்ற தலைப்பில் JITSA செய்த கடுமையான விமர்சனத்திற்கு சுவாமி வாயைத் திறக்கவே இல்லை.     
  
கடந்த ஆண்டு ஒருவழியாக தி ஹிந்துவிலிருந்து அவர் விலகி, லண்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராப் என்ற பத்திரிக்கையில் தன்னை  இணைத்துக் கொண்டார். டெல்லியிலிருந்து வெளிவரும் பயனீர் என்ற நாளிதழில் அதன் மேலாண் இயக்குனர் சந்தன் மித்ராவின் இஸ்லாத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்கள் வெளிவருவதைப் போல லண்டனிலிருந்து டெலிகிராபில் வெளிவரும். (சந்தன் மித்ரா 2003 -2009 வரை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 ஜூனில் மத்தியப் பிரதேசத்திலிருந்து பிஜேபி MP ஆக மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்) பிரவீன் சுவாமியால் டெலிகிராபில் அவ்வளவாக சோபிக்க முடியவில்லை. எனவே மீண்டும் தி ஹிந்துவில் தனது பணியைத் தொடர்ந்துள்ளார். ஆனால் டெலிகிராபின் பணியாளர் பட்டியலில் சுவாமி தொடர்ந்து நீடிக்கிறார் (http://blogs.telegraph.co.uk/news/author/praveenswami/). ஆனால் சுவாமியின் டுவிட்டர் கணக்கில் 22 ஜூனில் அவர் நியூ டெல்லியில் இருப்பதாக உள்ளது (http://twitter.com/#!/praveenswami).

ஜூன் 16-இல் அல்-காயிதாவின் தலைவராக Dr. அல்-ஜவாஹிரி அறிவிக்கப்பட்டதும் சுவாமிக்கு மீண்டும் தி ஹிந்துவுக்குள் நுழைய ஒரு வாய்ப்புக் கிடைத்துவிட்டது. ஒரு கட்டுரை அல்ல. ஒரே செய்தியைப் பற்றிய இரண்டு கட்டுரைகள். இரண்டும் நாளிதளின் முக்கியமான பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டு ஒரு பத்திரிக்கையாளனின் கனவை நிறைவேற்றி வைத்தது. இதுவும் (N.RAM) தி ஹிந்துவின் மேலாண் இயக்குனரின் ஆதரவு இருப்பதால் தான். முதல் கட்டுரை, அது தான் முக்கிய செய்தியாக (ஜூன் 17) முதல் பக்கத்தில் வெளியானது. அதில் "அல்-காயிதாவின் புதிய தலைவரின் தாக்குதல் இந்தியாவின் மீது தான்" என்று கூக்குரலிடுகிறார். ஒரு கணம் மூச்சைப் பிடுத்துக் கொள்ளுங்கள், செய்தியின் ஆதாரமாக இந்த மேதாவி மேற்கோள் காட்டியிருப்பது, சிறந்த "உளவுத் துறையைத் தான்." அதனை தனது முதல் பத்தியிலேயே குறிப்பிட்டுவிட்டார். சுவாமி மீண்டும் பழைய பல்லவியையே பாடுகிறார். (கஷ்மீர் கட்டுரைகளில் அடிக்கடி சுட்டிக் காட்டும்) அல்-காயிதாவின் இந்தியாவிற்கு எதிரான எச்சரிக்கையை மீண்டும் வாந்தி எடுக்கிறார். பாகிஸ்தானின் துணையோடு இந்தியா தாக்கப்படுமாம். இரண்டு நாடுகளுக்கும் இடையே பகை உணர்வு உள்ளதை யாவரும் அறிந்ததே. தீவிரவாத தலைவர்களுக்கு இடையே உள்ள உட்பூசல்களால் தான் இது போன்ற தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாம். ஒரு விஷயம் நமக்கு தெளிவாகத் தெரியும்: அல்-காயிதாவின் புதிய தலைவர் இது போன்ற அறிவிப்பு எதையும் செய்யவில்லை. மத்தியிலும், கஷ்மீரிலும் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் "அல்-காயிதா இந்தியாவில் இல்லை" என்று பலமுறை திரும்பத் திரும்ப சொல்லிவருகிறார்கள். ஆனால் அவைகளை எல்லாம் "தீவிரவாத அச்சுறுத்தல் செய்யும் வியாபாரிகள்" இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வது இல்லை. சுவாமியின் அடுத்த கட்டுரை தலையங்கம் வெளியாகும் பக்கத்தில். இது ஒரு பழைய செய்தி என்பது மிகத் தெளிவாகும். அது பயங்கரவாதத் தளபதி(சுவாமி)யின் கம்ப்யூட்டர் கோப்புகளிலிருந்து எடுத்து பிரசுரிக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி தனது 14 -ஆம் வயதில் இஹ்வானுல் முஸ்லிமீனில் இணைத்துக் கொண்டார் என்ற விலைமதிக்க முடியாத  தகவலைச் சொன்னது. 

பயங்கரவாத விற்பனையாளரான இந்த சுவாமிக்கு ஒரு கணம் நிதானித்து, மலை போல் குவிந்துள்ள செய்திகளையும், ஆதாரங்களையும் ஆராய நேரமில்லை. ஒரு வேலை அவர் ஆராய்ந்தால், அல்-காயிதா என்பது அமெரிக்காவின் உருவாக்கம் என்பதும், உலகில் உண்மையில் அது இல்லவே இல்லை என்பதும் புலனாகும். அவரும், அவரின் அமெரிக்க ஆசான்களும் அது போன்ற உண்மையை அறிவதில் ஆர்வப்படுவதில்லை. அல்-காயிதா என்பது ஒரு சிந்தனையாகும். சுவாமி, நீர் அங்கும் இங்குமாக காணும் இது போன்ற குழுக்கள் எல்லாம் அமெரிக்காவின் அநீதிக்கு எதிரான சிந்தனையால் தோன்றியவை ஆகும். சுவாமி விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இது போன்ற சிந்தனை இந்திய முஸ்லிம்களை ஒருபோதும் கவராது.

COURTESY: By Zafarul-Islam Khan, The Milli Gazette

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்