அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

வியாழன், ஜூலை 07, 2011

போலீஸ் உடை அணிய விருப்பமா? போக்குவரத்து வார்டன் பணி "ரெடி"

                   கோவை மாநகரை விபத்தில்லா நகரமாக மாற்ற, போக்குவரத்து வார்டன் பணிக்கு தன்னார்வம் உள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பலாம். "தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டன்' அமைப்பு அரசால் நடத்தப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக சேரும் நபர் முற்றிலும் தன்னார்வத்துடன், சமூக சிந்தனையுள்ளவர்களாக இருக்க வேண்டும். போலீஸ் உடை அணிந்து போக்குவரத்து பிரச்னையை நேரடியாக தீர்க்கலாம்.
                
                  ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை அவிநாசி ரோடு, உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ.,பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 9ம் தேதி நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

டிராபிக் வார்டன் அமைப்பில் சேர நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள்:
  • இந்திய குடிமகனாகவும், கோவையில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.
  • 25 முதல் 45 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும். உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால், வயது வரம்பு தளர்த்தப்படும்.
  • தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
  • குறைந்தது வாரம் இரு முறை இரண்டு மணி நேரம் (மாலை 6.00 - 8.00) சேவை செய்ய இயன்றவராக இருத்தல் அவசியம்.
  • சீருடை மற்றும் அதைச் சார்ந்த பொருள்களை சொந்த செலவில் வாங்கும் தகுதி உள்ளவராக இருத்தல் வேண்டும்.
  • முக்கியமாக குற்றப்பின்னணி இல்லாதவராக இருத்தல் அவசியம்.
டிராபிக் வார்டன் பணியில் சேருவது பற்றி மேலும் விபரம் அறிந்து கொள்ள 99940 - 74062 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்