அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஜூலை 27, 2011

சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட முதல்வரும், பிற தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்: SDPI வலியுறுத்தல்

அப்துல் மஜீத்
பெங்களூரு: சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட கர்நாடக முதல்வரும், பிற அரசியல் தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று SDPI கர்நாடக மாநிலத் தலைவர் அப்துல் மஜீத் கொட்லிபெட் வலியுறுத்தியுள்ளார்.


ஜனார்தன் ரெட்டி
லோக் ஆயுக்தா அறிக்கையில் கர்நாடக முதல்வர் B.S.எடியூரப்பா, ஜனார்த்தன் ரெட்டி, கருணாகர ரெட்டி, ஸ்ரீ ராமுலு, சோமண்ணா, காங்கிரசின்  மாநிலங்களவை உறுப்பினர் அணில் லட், மத சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநிலத் தலைவர் குமார சாமி ஆகியோர் சட்ட விரோத சுரங்க தொழில் செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன. இவர்களால்  அரசுக்கு கடந்த 14 மாதங்களில் மட்டும் 1827 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜனார்தன் ரெட்டி, ஆனந்த் ரெட்டி ஆகியோர் சுரங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட கனிமங்களை பெலேகேரியிலிருந்து சிங்கபூருக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

குமார சாமி

இந்த ஊழலில் பிஜேபி, காங்கிரஸ், ஜனதா தல் ஆகிய மூன்று தேசிய கட்சிகள் ஈடுபட்டிருப்பதால் விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று SDPI கர்நாடக மாநிலத் தலைவர் கோரியுள்ளார்.
எடியூரப்பா

சுரங்கக் கொள்ளையில் ஈடுபட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இது இந்திய ஜனநாயக முறைக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சுரங்கக் கொள்ளைக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் SDPI நடத்தும் என்று அப்துல் மஜீத் கொட்லிபெட் அறிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்