அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட வலைதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

புதன், ஜூலை 06, 2011

வக்ப் சட்ட திருத்தத்திற்கு முன் முஸ்லிம் அமைப்புகளை கலந்தாலோசிக்க வேண்டும்: SDPI அரசுக்கு வேண்டுகோள்

4 July 2011 - 11:47pm

நியூ டெல்லி: வக்ப் சட்டத் திருத்தத்தை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா புறக்கணித்துள்ளது. ஏனென்றால், இச்சட்டத்தில்  நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) மற்றும் சச்சார் கமிட்டி அறிக்கையின் பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும் முஸ்லிம் அமைப்புகளோடு தேவையான கலந்துரையாடலுக்குப் பிறகே சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


SDPI -இன் இரண்டு நாள் தேசிய செயற்குழு (NCW) -வின் இறுதி நாளான ஜூலை 3 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  

                        லோக்பால்  மசோதாவை வெறுமனே நிறைவேற்றிவிடுவதால் மட்டும் ஊழலை ஒழித்துவிட முடியாது. மாறாக அச்சட்டத்தில் ஓட்டைகள் இல்லாமலும், ஒரு தனி நபரின் ஆதிக்கத்தில் சிக்கி விடாமலும், தகுதிமிக்க நபர்களை குழுக்களாக நியமித்து அக்குழுவிடம் மசோதாவின் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு நியாயமான முறையில் செயல்பட்டு வரும் அமைப்புகளான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (PFI), தப்லீக் ஜமாஅத், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), தலித் மனித உரிமை அமைப்பு, ANHAD மற்றும் குஜராத், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் செயல்பட்டு வரும் சில கிறிஸ்தவக் குழுக்களின் மீதும் தொடர் அச்சுறுத்தல்களையும், இடையூறுகள் செய்து வருவதையும் இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.


                      கட்சியை பலப்படுத்தவும், இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் செயல் வீரர்களை உருவாக்கவும் SDPI தீவிர உறுப்பினர் சேர்க்கை திட்டத்தைத்  துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பீகார் மற்றும் உ.பி.யில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு அடுத்து வரும் 3 மாதங்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளது.


                     இக்கூட்டத்தில் SDPI-இன் பல புதிய பிரிவுகளை துவங்க முடிவு  செய்யப்பட்டுள்ளது. அதில், அரசியல் விவகாரம், பொது நிர்வாகம், மகளிர் அணி, கல்வி மற்றும் தொழிற்பயிற்சி, ஆராய்ச்சி, ஊடகம், தொழிற்சங்கங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அணி, நிதி திரட்டுதல், சட்ட விவகாரம் போன்றவைகள் அடங்கும். ஒவ்வொரு துறைக்கான பொறுப்பாளர்களாக NWC உறுப்பினர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். 


                  இச்செயற்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு, குண்டு வெடிப்பு வழக்கில் ஜோடிக்கப்பட்டு சேர்க்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்தல், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள், அணு உலைகள், வறுமைக் கோடு, ஹஜ் போன்றவைகள் சம்பந்தமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதற்கிடையே, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளாவின் பொறுப்பாளராக Dr. மகபூப் ஷரிப் அவர்களையும், தமிழ்நாடு, கர்நாடகா, கோவா-வின் பொறுப்பாளராக A.சயீத் அவர்களையும், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மணிப்பூரின் பொறுப்பாளராக M.K.பைஜி அவர்களையும், பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், உ.பி., உத்தரகாண்டின் பொறுப்பாளராக ஹபிஸ் மன்சூர் அலி கான் அவர்களையும், டெல்லி, ஹரியானா, பஞ்சாப்பின் பொறுப்பாளராக அப்துல் ரஷித் அக்வான் அவர்களையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.


நன்றி: TCN NEWS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

தேடுதல்