கர்நாடக மாநிலம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக குல்பர்கா மற்றும் புத்தூர் ஆகிய இரு இடங்களில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-இல் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
கடந்த 28ம் தேதி புத்தூரில் வைத்து நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் தும்பே இதனை அறிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்திய சுதந்திர தினத்தை
சிறப்பான முறையில் கொண்டாடி வருகிறது. வருகின்ற ஆகஸ்ட் 15 ம் தேதி திங்கட்கிழமை அன்று பிரம்மாணடமான அணிவகுப்புடன் கூடிய சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக இல்யாஸ் தும்பே கூறினார்.
நம் நாட்டின் சுதந்திரதிற்காக பாடுபட்டு தன் உயிர் நீத்த தியாகிகளை நினைவூ கூர்வதற்காக இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்புடன் கூடிய சுதந்திர தின விழாவை கொண்டாடி வருகிறது. ஒழுக்கத்துடனும் உற்சாகத்துடனும் நடக்கும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு மக்களிடையே சுதந்திர போராட்ட உணர்வை தங்களது மனதில் ஆழமாக பதியும் படி செய்கிறது. "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக!" என்ற முழக்கத்தோடு நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடம் சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என இல்யாஸ் தும்பே கூறினார்.
இனவாதம், தீவிரவாதம், மனித உரிமை மீறல்கள் இவற்றிற்கு எதிராக போராடும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் குரலாக பாப்புலர் ஃப்ரண்ட் செயல்பட்டு வருகிறது. மேற்கூறப்பட்ட சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் வலிமை அடைவதற்காகவும் பாப்புலர் ஃப்ரண்ட் கடுமையாக முயற்ச்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு இல்யாஸ் தும்பே கூறினார்.
பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநிலச் செயலாளர் ஷரீஃப், மற்றும் பலர் அருகில் இருந்தனர்.
மேலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாரூக் மற்றும் அப்துல் ரஜாக் கெம்மாரா ஆகிய இருவரும் ( 29 ஜூலை, 2011 ) நேற்று பத்திரிக்கையாளர்களிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.
கோப்புப் படம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக