பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆகஸ்ட் 15 சுதந்திர அணிவகுப்பு நடத்த இருக்கிறது .இதற்காக பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யபட்டது. சந்திப்பின் போது மாநில தலைவர் A.S இஸ்மாயில் அவர்கள் கூறியதாவது
65 வது சுதந்திர தினத்தை கொண்டாடு வதற்கு நாமெல்லாம் தயாராகி வருகின்றோம் .கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தின் பொது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக சுதந்திரத்தின் நினைவலைகளை நினைவு கூர்ந்து தியாகிகளை கவுரவித்து வருகின்றது. இந்த வருடமும் ஆகஸ்ட் 15 நெல்லை மாவட்டத்தில் சுதந்திர அணிவகுப்பு நடத்த தீர்மானித்துள்ளோம்.
சுதந்திர போரில் ஆணிவேராக இருந்தவர்களையும் , போராட்ட களத்தில் உயிர் நீத்த தியாக செம்மல்களையும் நினைவு கூற வேண்டியது , ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை ஆகும் .உடல் வழிகளையும் , உயிர் அர்பணிப்பு களையும் பொருட்படுத்தாது போராடி பெற்ற சுதந்திரத்தை ஆகஸ்ட் 15 ல் மிகுந்த மகிழ்ச்சியோடு உற்சாகதோடும் தேச வளர்ச்சியின் உண்மையான அக்கறை கொண்ட உள்ளதுடன் கொண்டாட வேண்டும்.
இவற்றை வெளிபடுத்தும் நோக்கத்தோடு சுதந்திர முழக்கமிட்டு , வீர நடை போட்டு பாப்புலர் ஃப்ரண்ட் சீருடை அணிந்து சுதந்திர அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது .இந்த வருடமும் கொண்டாட இருக்கின்றோம்.
இவற்றை வெளிபடுத்தும் நோக்கத்தோடு சுதந்திர முழக்கமிட்டு , வீர நடை போட்டு பாப்புலர் ஃப்ரண்ட் சீருடை அணிந்து சுதந்திர அணிவகுப்பை கொண்டாடி வருகின்றது .இந்த வருடமும் கொண்டாட இருக்கின்றோம்.
மேலும் இந்திய வளங்கள் நவீன பெயர்களில் அந்நியர்களுக்கு தாரை வார்க்க படுவதும் தேச குடிமக்கள் வேலையின்றி அடிமை குடிமக்களாக மாற்ற படும் அவல நிலைகளும் மாற்றியமைக்க பட வேண்டும். ஊழல் களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை களும், கடுமையான தண்டனைகளும் அமலாக்க பட வேண்டும் என்று தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கூறினார். அப்பொழுது அருகில் மாநில செயலாளர் பைசல், மாவட்ட தலைவர் அன்வர் முகைதீன், மாவட்ட செயலாளர் ஹைதர் அலி, பாளை நகர தலைவர் ஷேக் முகைதீன், மேலபாளையம் நகர தலைவர் மூஸல் காலிம். ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக