உதாரணமாக,
- கிருஸ்துவ மதம் இயேசு கிருஸ்துவின் பெயரைக் கொண்டுள்ளது.
- புத்த மதம் கௌதம புத்தரின் பெயரின் அமைந்துள்ளது.
- யூத இன மக்களின் மதம் யூத மதம்.
- சிந்து நதிக்கரைக்கு அப்பால் வசிக்கும் மக்களின் மதம் இந்து மதம்.
ஆனால், இஸ்லாம் மட்டும் இதில் விதி விலக்கு. இதன் பெயர் எந்த ஒரு தலைவரையோ, இனத்தையோ, நாட்டையோ குறிப்பது அல்ல. மாறாக, ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய தன்மைகளை பிரதிபலிப்பதாகவே இதன் பெயர் அமைந்துள்ளது.
இஸ்லாம் என்ற அரபிச் சொல்லின் பொருள் 'அடிபணிதல்', 'கட்டுப்படுதல்' 'கீழ்ப்படிதல்' ஆகியவையாகும். படைப்பாளனாகிய இறைவனின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவற்றிற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் இஸ்லாம்.
இஸ்லாம் என்றச் சொல்லுக்கு 'அமைதி' என்றொரு பொருளும் உண்டு. இறைவனின் கட்டளைகளுக்கேற்ப அமையும் வாழ்க்கையில்தான் உடலும் உள்ளமும் அமைதி பெறும் என்பதையே இப்பெயர் குறிப்பதாகக் கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக