பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினக் கொண்டாட்டங்களையும், சுதந்திர தின அணிவகுப்பையும் (FREEDOM PARADE) நடத்தி வருகின்றது. இந்த வருடம் ஆகஸ்ட் 15, 2011 அன்று சுதந்திர தின அணிவகுப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்துவதெனவும், சுதந்திர தின கொண்டாட்டங்களை நெல்லை உட்பட நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று முஸ்லிம்களுடைய தியாகத்தை மக்கள் மறந்துவிட்டனர். மேலும் முஸ்லிம் என்றாலே பிரிவினைவாதிகள், தீவிரவாதிகள் என பொய் பட்டம் சுமத்துகின்றனர் .
ஆனால் உண்மையில் சுதந்திரதிற்கு அதிகம் போராடியது முஸ்லிம்கள்தான். அன்று நாட்டை காட்டி கொடுத்தவர்கள் எல்லாம் இன்று சுதந்திர போராளிகள் ஆகிவிட்டனர். மேலும் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் அல்ல, உண்மையான தியாகிகள்! அவர்களுடைய் தியாகத்தை போற்றும் வகையில் வருடா வருடம் சுதந்திர அணிவகுப்பை நடத்தி சுதந்திரத்தை போற்றி கொண்டாடி வருகின்றோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக