வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டும் கேரளா உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தலைமை தீர்மானித்துள்ளது.
கேரளாவில் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் அது மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்ககூடியது. சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வெறும் சம்பிரதாயமாக பார்க்கப்பட்ட இந்த சுதந்திர தினம் ஒரு சில அரசு அலுவலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்தி வரும் சுதந்திர தின அணிவகுப்பு மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தையும், அணிவகுப்பையும் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக