வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
இளம்பெண்கள் குறித்து மோசமான கருத்து தெரிவித்த மோடிக்கு தலைவர்கள் கண்டனம்
சமீபத்தில்
ஒரு பத்திரிக்கைக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அளித்த
பேட்டியில், குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம்
வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல்
அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம்
பால் வாங்கி வர சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது
தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்கமாட்டேன்
என்கிறாள் என்று கூறியிருந்தார்.
சிறுவர்களை சிறைப்பிடிக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ்
அண்ணனை விடுவியுங்கள் என கதறி அழும் தங்கை |
ஜம்மு
காஷ்மீர்: மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன்
நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் உட்பட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு -
காஷ்மீர் மாநிலத்தில், தற்போது அமைதி நிலவுவதாக அம்மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா சமீப நாட்களாக, அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
குவாண்டனாமோ சிறை!
காட்டுமிராண்டி அமெரிக்கா |
உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில்
நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த
சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது
அமெரிக்கா!
அமெரிக்கர்களைத் தவிர வேறு யார் விஷயத்திலும் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத அமெரிக்காவினால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரிக்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் குவாண்டனாமோ சிறையிலடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது அமெரிக்கா.
புதன், ஆகஸ்ட் 29, 2012
நரோடா பாடியா வழக்கு: 32 பேர் குற்றவாளிகள்; 29 பேர் விடுதலை
தீவிரவாதிகள் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி |
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற நரோடா பாடியா
வழக்கில், 32 பேர் குற்றவாளிகளாக அறிவித்து ஆமதாபாத் சிறப்பு கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது.
95 அப்பாவி முஸ்லிம்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், பா.ஜ. முன்னாள் அமைச்சர் மாயா
கோட்னானி மற்றும் பஜ்ரங் தள் கட்சி முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி
உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: அமெரிக்காவை பயமுறுத்தும் சீனா
கண்டம் விட்டு கண்டம் பாயும், அதி நவீன, 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஏவுகணையை சீனா, நேற்று பரிசோதித்தது.
வல்லரசு
நாடான சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு போட்டியாக அதி நவீன
ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. கடலுக்கு அடியில், நீர்மூழ்கி கப்பலில்
இருந்து எதிரி நாட்டை தாக்கும் வகையிலான ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து
பார்த்தது சீனா.
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு வேண்டுகோள்!
கடந்த ஆகஸ்ட் 25,26 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில
செயற்குழு கூட்டம் சென்னையில் கூடியது. இக்கூட்டத்திற்கு பாப்புலர்
ஃப்ரண்ட் மாநில தலைவர். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில
பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, துணை தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில்.
செயலாளர்கள் ஆரிஃப் பைசல் மற்றும் மு. ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர்
கே.எஸ்.எம். இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திங்கள், ஆகஸ்ட் 27, 2012
முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்
அமெரிக்கா நடத்திய உளவு விமானத்
தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத்த தளபதி முல்லா
தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு
உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின.
ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012
பாபா ராம்தேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
என்று கூறும் பாபா ராம்தேவ், தன்னை விளம்பரப்படுத்தி பிரபலமாக்க பல்வேறு போராட்ட நாடகங்களை நடத்தி வருகிறார்.
ரூ.60லட்சம் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக பாபா
ராம்தேவுக்கு அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணத்தை
ஒழிக்க வலியுறுத்தி போராட்டாம் நடத்தி வரும் பாபா ராம்தேவ்
அறக்கட்டளை நடத்தி வருகிறார். வெளி நாட்டில் இந்தியர்கள் பதுக்கி
வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும்
அவருக்கு இந்துத்துவாவின் ஆதரவு உள்ளது.
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்து பரிசோதிக்க முடிவு
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் பொலோனியம் என்ற விஷம் வைத்து கொல்லப்பட்டாரா
என்பது குறித்து சுவிஸ் நாட்டு ஆய்வகம் பரிசோதனை செய்ய உள்ளது.
பாலஸ்தீன
விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள்
பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத்
நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு
அழைத்து செல்லப்பட்டார்.
சனி, ஆகஸ்ட் 25, 2012
வட கொரியாவுக்கு பயப்படும் அமெரிக்கா
வட கொரியாவில் இருந்து வரும் அச்சுறுத்தலுக்காகவே ஜப்பானுடன் இணைந்து
ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பை விரிவாக்கம் செய்வதாக அமெரிக்கா
தெரிவித்துள்ளது.
ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தில் அமெரிக்காவுடன் ஜப்பான் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வருகிறது.
ஜப்பானிடம் நிலம் மற்றும் கடலில் இருந்து ஏவுகணைகளைச் செலுத்தக்கூடிய
கட்டமைப்பு உள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தெற்குப் பகுதியில் எதிரி
நாட்டு ஏவுகணைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிந்து எச்சரிக்கை
செய்யும் ரேடார் கருவியை அமைக்க அமெரிக்கா பேச்சு நடத்தி வருவதாக வால்
ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது.
வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012
வதந்தியை பரப்புதல்: மத்திய உள்துறை அமைச்சருக்கு பாப்புலர் ஃபிரண்ட் பொதுச் செயலாளர் கடிதம்
திரு. சுஷில் குமார் சம்பாஜிராவ் ஷிண்டே
மதிப்பிற்குரிய மத்திய உள்துறை அமைச்சர்
நார்த் ப்ளாக், மத்திய தலைமைச் செயலகம்
நியூ டெல்லி - 110 001.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: அரசுத்துறைகளை மேற்கோள் காட்டி பாப்புலர் ஃபிரண்ட்டின் மீது குற்றம் சுமத்தும் ஒரு சில ஊடகங்கள்
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நான் இக்கடிதத்தை எழுதுகிறேன். இது ஒரு நவீன-சமூக இயக்கம், தேசத்திலுள்ள ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலனுக்காக உழைத்து வருகிறது. அஸ்ஸாமிய மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்திகள் குறித்த செய்திகளில் துரதிஷ்டவசமாக எங்களுடைய அமைப்பை தொடர்புபடுத்தி ஒரு சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை உங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதில் பாப்புலர் ஃபிரண்டின் ஈடுபாட்டை மறுக்கிறேன்.
வியாழன், ஆகஸ்ட் 23, 2012
ஈரானில் நடக்கும் அணி சேரா மாநாட்டில் பங்கேற்க பான் கி மூனுக்கு அமெரிக்கா எதிர்ப்பு
வாஷிங்டன்: ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், ஐ.நா.,
பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்பதை, அமெரிக்கா எதிர்த்துள்ளது. ஈரான்
நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள்
குறைகூறி வருகின்றன. இதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய்
வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட
நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தளபதி வந்த விமானம் மீது தலிபான்கள் ராக்கெட் வீசி தாக்குதல்
ஆப்கானிஸ்தான்
ராணுவ தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ தளபதியின் விமானம்
மீது தலிபான்கள் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை களையெடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ
படைகள் முகாமிட்டுள்ளன. அவர்கள் அதிரடி தாக்குதல் நடத்தி தலிபான்களை
கொன்று வருகின்றனர்.
நேட்டோ
படைகள் மீது தலிபான்களும் பதில் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில்,
அமெரிக்க ராணுவ தளபதி மார்ட்டின் டிம்ப்சி, நேற்று முன்தினம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் வந்தார். அங்கு நேட்டோ படை கமாண்டர் ஜான்
ஆலன், ஆப்கன் ராணுவ தளபதி ஷெர் முகமது கரீம் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அமெரிக்க தளபதி மார்ட்டின் வந்த சி17 ராணுவ விமானம், பக்ராம் ராணுவ
தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
புதன், ஆகஸ்ட் 22, 2012
அஸ்ஸாம் மக்களுக்கு எதிரான வதந்திகளில் சிக்க வைக்கும் முயற்சி: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!
தென்னிந்திய
மாநிலங்களில் வாழும் அஸ்ஸாம் மக்களுக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி
செய்திகளுக்கான பழியை சுமத்தி பாப்புலர் ஃப்ரண்டை சிக்கவைக்கும் உண்மைக்கு
புறம்பான ஊடகங்களின் செய்திகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று சில ஆன்லைன் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சானல்களும் அஸ்ஸாம் மாநிலத்தவருக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேசனல் சைபர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது என்று பரப்புரைச் செய்தன. இதனைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் மற்றும் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி ஆகியோர் கலந்துகொண்டு அவதூறானச் செய்திக்கு மறுப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.
நேற்று சில ஆன்லைன் பத்திரிகைகளும், தொலைக்காட்சி சானல்களும் அஸ்ஸாம் மாநிலத்தவருக்கு எதிராக பரப்பப்படும் வதந்தி செய்திகளின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக நேசனல் சைபர் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்சி உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது என்று பரப்புரைச் செய்தன. இதனைத் தொடர்ந்து நேற்று கேரளாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் மற்றும் கேரள மாநில தலைவர் அஷ்ரஃப் மெளலவி ஆகியோர் கலந்துகொண்டு அவதூறானச் செய்திக்கு மறுப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர்.
6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்த நியூயார்க் போலீஸ்
நியூயார்க் ஏரியாவில் வசிக்கும் முஸ்லீம் மக்களை ஆறு
வருடங்களுக்கு மேலாக உளவு பார்த்தும், உருப்படியான ஒரு கேஸ்கூட
கிடைக்கவில்லை என ஒப்புக் கொண்டுள்ளது நியூயார்க் போலீஸ் NYPD (New York
Police Department)
நியூயார்க் கோர்ட்டில் நடைபெறும் சிவில் உரிமை
வழக்கு ஒன்றில் சாட்சியமளித்த NYPD துணைத் தலைவர் தாமஸ் கலாடி, கோர்ட்டில்
இதை ஒப்புக்கொண்டார்.
‘அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள் எல்லைக்கே வருவோம்!”
ஈரானிய ஜனாதிபதி நேற்று (செவ்வாய்கிழமை) குறுகிய
தொலைவு தரையில் இருந்து தரைக்கு ஏவும் பாலஸ்டிக் ஏவுகணை (short-range
surface-to-surface ballistic missiles) பற்றி அறிவித்திருப்பது,
இஸ்ரேலுக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கை என்றே கருதப்படுகிறது. பொதுவாக
ஈரான் தம்மிடமுள்ள சென்சிடிவ் ஆயுதங்கள் பற்றி வாய் திறப்பதில்லை.
இந்த ஏவுகணை பற்றி இரு வாரங்களுக்கு முன் ஈரானிய தேசிய செய்திச் சேவை IRNA, மேலோட்டமாக இரண்டு வரி செய்தி ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தது. Fateh-110 (மேலேயுள்ள போட்டோ) ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பதே அந்த செய்தி.
இந்த ஏவுகணை பற்றி இரு வாரங்களுக்கு முன் ஈரானிய தேசிய செய்திச் சேவை IRNA, மேலோட்டமாக இரண்டு வரி செய்தி ஒன்றை மட்டும் வெளியிட்டிருந்தது. Fateh-110 (மேலேயுள்ள போட்டோ) ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என்பதே அந்த செய்தி.
செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012
அமெரிக்க அதிபர் ஒபாமா இனிமேலாவது சரியாகச் செயல்பட வேண்டும்: ஜூலியன் அசாஞ்ச்
விக்கி லீக்ஸ் நிறுவனத்தை அச்சுறுத்தும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின்
ராணுவ ரகசியங்கள் உட்பட பல்வேறு ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளத்தில்
வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இரண்டு பெண்களை
கற்பழித்தது தொடர்பாக, சுவீடன் அரசு இவர் மீது வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, அசாஞ்ச் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். சுவீடன் கோரிக்கை
படி இவர் கைது செய்யப்பட்டார். லண்டன் நீதிமன்றம் இவருக்கு முன் பினை
வழங்கியது. இதற்கிடையே, தங்கள் நாட்டிடம் ஒப்படைக்கும்படி சுவீடன்
கோரியது. இதை எதிர்த்து அசாஞ்ச் மனு செய்திருந்தார்.
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் மத்திய அரசுக்கு கோரிக்கை
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளர் KM ஷரீப் |
சென்னை : தென் இந்திய மாநிலங்களில் உள்ள அஸ்ஸாம் மாநில மாணவர்கள்
மற்றும் பணியாளர்களின் வாழ்க்கை அச்சுறுத்தப்படுவதாக வதந்திகளை பரப்பி
வரும் சில விஷமிகளின் பிரச்சாரத்திற்கு மக்கள் மயங்கி விட வேண்டாம் என்று
பாப்புலர் ஃப்ரண்;ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர்
கே.எம்.ஷரிஃப் கேட்டுக் கொண்டுள்ளார். வடக்கு மற்றும் வடகிழக்கு மக்களின்
பாதுகாப்பை பேணுவதை தங்களின் கடமையாக ஏற்று செயல்படுத்தி வருவதுதான் தென்
இந்திய மக்களின் பாரம்பரியம் என்பதை அவர் நினைவு படுத்தினார்.
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012
அமெரிக்காவின் நிவாரண உதவி தேவையில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரான் அறிவிப்பு
"பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் நிவாரண உதவியை ஏற்க முடியாது,'' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.
ராணுவ தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பு: இஸ்லாமிய அமைப்பில் இருந்து சிரியா நீக்கம்
சிரியாவில் அதிபர் பசீர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சி
நடைபெறுகிறது. இதை ஒடுக்க ராணுவம் நடத்தும் தீவிர குண்டுவீச்சு
தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்.
ராணுவ தாக்குதலும் தொடர்ந்து நீடிக்கிறது. இதற்கிடையில் இஸ்லாமிய
ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில்
நடைபெற்றது. இதில் உறுப்பினர் பொறுப்பில் இருந்து சிரியாவை சஸ்பெண்டு
செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
அசாமில் மீண்டும் கலவரம் வெடித்தது; முஸ்லீம்கள் சாலை மறியல்
கவுகாத்தி, ஆக.16 - அசாம் மாநிலத்தில் மீண்டும் இனக்கலவரம் வெடித்தது.
இதனால் மாநிலம் முழுவதும் பதட்டம் அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில்
உள்ள பல மாவட்டங்களில் பழங்குடி இனத்தவர்களான போடோ தீவிரவாதிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் 80-க்கும்
மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
கலவரத்தை ராணுவம் அடக்கியது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் இந்த இரண்டு இனத்தவர்களுக்கும் இடையே மோதல்
நடந்தது. நல்பாரி மற்றும் கம்ரூப் மாவட்டங்களில் இந்த மோதல்
வெடித்துள்ளது.
வியாழன், ஆகஸ்ட் 16, 2012
கோவையில் துவக்க நிகழ்ச்சி: சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!
சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம். 1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS (டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு உதாரணமாகும்.
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
சுதந்திரப் போராட்ட முஸ்லிம் தலைவர்கள் |
இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில்
எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத்
தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின்
பங்கு மகத்தானது. இதனை 1975ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி வெளியான
'இல்லஸ்டிரேட்டட் வீக்லி' என்னும் பத்திரிக்கையில் அதன் ஆசிரியர்
குஷ்வந்த் சிங் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறி உறுதிப்படுத்தியுள்ளார்.
புதன், ஆகஸ்ட் 15, 2012
முழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் யார் என்று உங்களுக்கு தெரியுமா ? உண்மையை உரக்க சொல்லுவோம்!
செக்கிழுத்த செம்மல் மொஹானி |
மறுக்க முடியாது உண்மையை மறைக்க முடியாது !!!
1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ்
மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் (Complete
Independence India,as its goal) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண சுதந்திரமே எங்கள்
பிறப்புரிமை � என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஆவார்.
1929 � ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ்
மாநாட்டில்தான் இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம்
முன் வைக்கப்பட்டது.
சுதந்திரம் நமது பிறப்புரிமை
நமது தேசம் 65வது சுதந்திர தின கொண்டாட்டத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் கோவை மாவட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நமது முன்னோர்கள் ஜாதி, மத பேதமின்றி ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரத்தம் சிந்தி போராடியதன் வெற்றிக்கனி தான் நாம் இப்போது சுவாசித்துக் கொண்டிருக்கும் சுதந்திரக் காற்று.
இப்படிப்பட்ட சுதந்திர தின விழாவை கௌரவிக்கும் விதமாகவும், சுதந்திர போராட்டத்தின் தியாக நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக் குலுங்கச் செய்யும் விதமாகவும், சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின அணிவகுப்பை பல மாநிலங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகின்றது. 2008ம் ஆண்டு மதுரையிலும், 2009ம் ஆண்டு கும்பகோணத்திலும், 2010ம் ஆண்டு மேட்டுப்பாளையத்திலும் இந்த நிகழ்ச்சியை நாம் சிறப்பாக நடத்தியுள்ளோம். 2011ல் நாம் நெல்லையில் நடத்த இருந்த சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதியை மறுத்து தனது சிறுபான்மையினர் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.
கவர்னர் மாளிகை முற்றுகையிட முயன்ற 500 க்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது
அசாம்
கலவரத்தையும், பிரிவினையைத் தூண்டும் பாஜக தலைவர்களை கட்டுப்படுத்த
வலியுறுத்தியும், மியான்மரில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த இனப்படுகொலையை
தடுத்து நிறுத்த ஐ.நா சபையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்ற
கோரிக்கையை முன்னிறுத்தி, கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது தலைமையில்
நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு வட சென்னை, தென் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பிரதமரைவிட அதிக அளவு விமானப்படை விமானங்களை பயன்படுத்திய பிரதிபா பாட்டீல்
ஜனாதிபதி
பதவி வகித்த பிரதீபா பாட்டீல், பதவியில் இருந்தபோதும், விலகிய பின்னரும்
பல்வேறு சர்ச்சையில் சிக்கியவர். ஜனாதிபதியாக இருந்த வரை பதவி
வகித்தவர்களில், அதிக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர் பிரதீபா பாட்டீல்
மட்டுமே.
ஜனாதிபதி
மாளிகைளில், குடும்ப உறுப்பினர்கள் அதிகம் பேரை குடியிருக்க வைத்தவரும்
இவர்தான். இதனால், சர்ச்சை நாயகியாக பிரதீபா பாட்டீல் பார்க்கப்பட்டார்.
இந்திய விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள்
அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.
கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூத்து தந்தவர்கள் நினைக்கலாம், ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.
(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.
(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.
கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்
மாவீரன் திப்பு சுல்தான் |
''கிழக்கிந்தியக்
கம்பெனியின் குலை நடுக்கம்'', திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன்
பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க
முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. 1782
டிசம்பரில், ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது
32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட
வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.
1784இல்
முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000
சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால்
விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம்தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின்
தொடக்கம். மூன்றாவது மைசூர்ப் போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க
எதிர்ப்புப் போர் (1790 – 92) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர்
மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது
என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக்
களமிறங்கினான்.
செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012
திங்கள், ஆகஸ்ட் 13, 2012
சூடான்: கடும் வெள்ளப்பெருக்கால் 32 பேர் பலி
சூடான் நாட்டில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர்
தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் பெய்துவரும் கனமழையால் 32 பேர் பலியானதாகவும்,
4700 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், மேலும் 35,000 விலங்குகள்
கொல்லப்பட்டுள்ளதாகவும் சூடான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செளதியில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்க உருவாகும் தனி நகரம்
களப் பயிற்சிக்கு இஸ்லாமிய உடைகள் தடையில்லை |
ரியாத்: பெண்கள் மட்டும் பணியாற்றும் தனி நகரத்தை உருவாக்க செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது.
இஸ்லாமிய ஷரியா சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நகரில் பெண்கள் மட்டுமே வசிப்பர், பணியாற்றுவர்.
இந்த நகரை கட்டும் பணி அடுத்த ஆண்டு துவங்கவுள்ளது.
செளதி அரேபியாவில் ஆண்களைப் போலவே பெண்கள் மத்தியிலும் பணியாற்றும்
ஆர்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், செளதி பெண்கள் பணியாற்ற ஏராளமான
கட்டுப்பாடுகள் உண்டு.
அசாம் அகதிகளுக்கு உதவிடுவீர்! பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் வேண்டுகோள்!
பாப்புலர்
ஃப்ரண்டின் தேசிய செயலாளர் KM ஷரீப் தன்னார்வ தொண்டர்களுடன் |
அசாம் அகதிகள் முகாமில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண
பணிகளுக்கு பொருளாதார ரீதியில் உதவிக்கரம் நீட்டுமாறு பாப்புலர்
ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.
சிறுபான்மையினருக்கு எதிராக போடோ இனத்தினர் நடத்திய கலவரத்தில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும்
உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயன்றளவு
நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012
திப்புசுல்தான்: உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு
rocket |
திப்புசுல்தான் உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் உருவான வரலாறு
நம்மால்இன்றுநினைத்த நேரத்தில்உலகின் எந்த மூலையில் இருக்கும் ஒருவருடனும்
கைதொலைபேசியின் வாயிலாக பேசிவிட முடிகிறது என்றால் அது செயற்கைக்கோள்களின்
செயல்பாடுகள் இல்லாமல் சாத்தியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே,
அந்தசெயற்கைகோளை சுமந்து சென்று விண்வெளியில் (Outer
Space) நிலைநிறுத்துவதில் ராக்கெட்டுகளின் (Rocket) பங்கு
அளவிடற்கரியது.
அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. விண்வெளி புரட்சிக்கு வித்திட்ட ராக்கெட் (Rocket) தொழில்நுட்பம் ஒரு சில ஆண்டுகளின்ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை, கிட்டத்தட்ட ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD) ஆம் ஆண்டு தான் ராக்கெட் தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது.
அந்த வகையில் விண்வெளி ஆய்வில் மனித சமுதாயம் புதிய சகாப்தத்தை அடைய ராக்கெட் தொழில்நுட்ப (Rocket Technology) கண்டுபிடிப்புதான் அடிப்படை காரணமாக இருந்தது என்றால் மிகையில்லை. விண்வெளி புரட்சிக்கு வித்திட்ட ராக்கெட் (Rocket) தொழில்நுட்பம் ஒரு சில ஆண்டுகளின்ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டதில்லை, கிட்டத்தட்ட ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளின் முடிவில் கி.பி.1942 (1942 AD) ஆம் ஆண்டு தான் ராக்கெட் தனது மேம்பட்ட முதல் வடிவத்தை எட்டியது.
வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012
அசாமில் தொடரும் கலவரம்: ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
அசாம் மாநிலத்தில் கலவரம் தொடர்வதால் 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அசாமில்
கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ தீவிரவாதிகளுக்கும், சிறுபான்மை
முஸ்லிம்களுக்கும் இடையே கடந்த மாதம் வெடித்த மோதல் கலவரமாக மாறி, இன்னும்
தொடர்கிறது.
இந்த கலவரம் அசாமின் சிராங், பக்சா மற்றும் துப்ரி ஆகிய அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது.
எச்சரிக்கை: ஈரான் செல்லும் இஸ்ரேலிய விமானங்களை சவுதி சுட்டு வீழ்த்தும்!
“இஸ்ரேலிய யுத்த விமானங்கள் ஈரானை தாக்கும்
நோக்கத்துடன் சென்றால், எமது வான் பகுதியில் வைத்து இஸ்ரேலிய விமானங்களை
சுட்டு வீழ்த்துவோம்” என்று சவுதி அரேபியா இஸ்ரேலுக்கு எச்சரிக்கை
அனுப்பியுள்ளதாக, இஸ்ரேலில் வெளியாகும் ஹெப்ரூ மொழி பத்திரிகை Yedioth
Ahronoth செய்தி வெளியிட்டுள்ளது.
“சவுதி அரேபியா இந்த எச்சரிக்கையை நேரில் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவுக்கு தெரிவித்து, அவர்கள் மூலமாகவே இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளது” எனவும் அப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
“சவுதி அரேபியா இந்த எச்சரிக்கையை நேரில் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவுக்கு தெரிவித்து, அவர்கள் மூலமாகவே இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ளது” எனவும் அப் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திரப் போரா? சிப்பாய் கலவரமா ?
பார்ப்பனர்களால் விளைந்த கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. பார்ப்பனர்கள் அனைத்து துறைகளிலும் சாம, தான, பேத, தண்ட முறையைப் பயன்படுத்தி ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதில் அவர்களுக்கு ஈடு இணையாக யாரையும் காட்டமுடியாது.
சமுதாயம், அரசியல், அரசுத் துறைகளில் இன்றும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதுபோல் நீதித்துறையில் அவாளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது.
அந்த வகையில் வரலாற்றுத்துறையில் சிந்து சமவெளி பிரச்சனையிலிருந்து, தற்போது நடக்கும் சேதுசமுத்திர பிரச்சனை வரை அவர்கள் ஆதிக்கம் தான் . அந்த வகையில் வரலாற்றைத்திரித்து எழுதுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே.
நம்முடைய வரலாற்றுப் பாடத்திட்டத்தில்
“முஸ்லீம்படையெடுப்பும், ஆரியர் வருகையும்” என்றுதான் எழுதுவார்கள். முஸ்லீம்களை எதிரிகளாகவும், ஆரியர்களை வேண்டியவர்களாகவும் மனரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “நயவஞ்சக” முயற்சிதான் வரலாற்றை இப்படி எழுதுவதற்கு காரணம்.
வியாழன், ஆகஸ்ட் 09, 2012
குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே அமெரிக்க மசூதியில் தீ: நாசவேலை காரணமா?
அமெரிக்காவில் மிசெüரி பகுதியில் உள்ள
மசூதி தீயில் எரிந்து நாசமானது. விஸ்கான்சின் பகுதியில் உள்ள
குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே இஸ்லாமிய மையம்
எரிந்து சாம்பலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரிந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மிசெüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. தீப்பற்றி எரிந்தபோது இதில் எவரும் இருக்கவில்லை என்று மிசெüரி பகுதி தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர் சையத் முர்துஜா ஹஸ்ரத் !!!!
சையத் முர்துஜா ஹஸ்ரத் அவர்களின் பூர்வீகம் புகாரா (புகாரஸட் – ரஷ்யா) ஆகும். ஹஸ்ரத் அவர்கள் பிறந்தது, வளர்ந்தது திருச்சிராப்பள்ளியில் தான். இவர் பி.ஏ. வரை படித்து தேர்வு பெற்று, திருச்சி ஜில்லா மாவட்ட ஆட்சியர் காரியாலயத்தில் தலைமைக் குமாஸ்தா பதவியை ஏற்றார்கள். கல்வியில் இஸ்லாமியர்கள் சிறக்க வேண்டும் என்பதால் “இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி” என்ற பள்ளியைத் தோற்றிவித்தார். இப்போது இதன் பெயர் “சையத் முர்துஜா அரசு உயர்நிலைப்பள்ளி” என்று மாற்றப்பட்டுள்ளது.
புதன், ஆகஸ்ட் 08, 2012
ஆகஸ்ட் 15ல் “சுதந்திர தின அணிவகுப்பு” பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் அறிக்கை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர இந்தியாவின் 65வது சுதந்திர தினம் ஆகும். இந்நாளில் இந்த தேசத்தின் விடுதலைக்காக நடைபெற்ற போராட்டங்களையும், அதில் கலந்து கொண்டு நம் முன்னோர்கள் செய்த தியாகங்களையும் நினைவு கூர்வது நமது கடமையாகும்.
இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது யார்?
பதுருதின் தியாப்ஜி குடும்பம் தான் இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? கண்டிப்பாக இதை படித்து மறைக்கப்பட்டு இருக்கும் வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள். தெரியாதவர்களுக்கு தெரியபடுத்துங்கள்!
லண்டனில் மெட்ரிக் படிப்பை முடித்து Middle Temple Barrister (வழக்கறிஞர்)April 1867-இல் தான் பணியை தொடர்ந்தார். பாம்பேயின் முதல் வழக்கறிஞராக திகழ்ந்த இவர், பின்னர் மிகவும் புகழ் பெற்று விளங்கினர். 1895 பாம்பே உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றினார். பின்பு 1902-ல் இவரே முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்தார் மற்றும் பாரபட்சம் பார்க்காமல் தீர்ப்பு வழங்குவதில் கண்ணிய மிக்கவராக இருந்தார்.
செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012
சுதந்திர போராட்ட மாவீரர் சிராஜ்-உத்-தௌலா பற்றிய வரலாற்று உண்மைகள் !!
சிராஜ்-உத்-தௌலா |
இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்
திங்கள், ஆகஸ்ட் 06, 2012
அசாமில் மீண்டும் வெடித்த வன்முறையால் 5 பேர் பலி
அசாம் மாநிலத்தில் போடோ தீவிரவாதிகளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல்
இனக்கலவரமாக மாறி மாநிலத்தின் அமைதியை சீர்குலைத்தது. இந்த கலவரத்தால் 56
பேர் உயிரிழந்தனர். பல லட்சம் முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து அரசின் நிவாரண
முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். கலவரத்தை ஒடுக்க மாநில போலீசாருடன்,
ராணுவமும் இணைந்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் கடந்த பத்து
நாட்களாக அசாமில் அமைதி நிலவிவந்தது.
ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012
திணறும் இந்தியப் பொருளாதாரம்
2012 – ன் இறுதிக் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3% என்று
குறைந்துவிட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 49
ரூபாயிலிருந்து 56 ரூபாயாக அதிகரித்துவிட்டது. ஸ்டாண்டர்ட் அண்ட் பூர்
என்ற நிறுவனம், இந்தியாவின் தர வரிசையை குறைக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. மாதாந்திர தொழில் வளர்ச்சிக் குறியீட்டு எண்ணான
ஐ.ஐ.பி, ஏப்ரல் மாதத்தில் வெறும் 0.1% மட்டுமே வளர்ந்திருக்கிறது.
என்னதான் நடக்கிறது இந்தியாவில்?
சனி, ஆகஸ்ட் 04, 2012
அரசு அதிகாரிகள், மாணவர்கள் நோன்பு நோற்கத் தடை!
முஸ்லிம்கள் கட்டாயமாகக்
கடைப்பிடிக்கும் வழிபாடுகளில் ஒன்றான ரமலான் மாதம் நோன்பு நோற்பதை அரசு
அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கடைப்பிடிக்கக் கூடாது என்று சீன அரசு
உத்தரவிட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின்
மத நடவடிக்கைகளான நோன்பு நோற்றல், மசூதிகளுக்குச் செல்லுதல் போன்றவற்றில்
கட்டுப்பாடுகளைக் கொண்டு வருமாறு சீன அரசு கம்யூனிஸ்டு கட்சித்
தலைவர்களைக் கேட்டுக் கொள்ளும் வாசகங்கள் சீன அரசின் பல இணையங்களிலும்
இடம் பெற்றுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2012
(257)
- ► செப்டம்பர் (22)
-
▼
ஆகஸ்ட்
(62)
- அஸ்ஸாம் மக்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி: பாப்புலர...
- இளம்பெண்கள் குறித்து மோசமான கருத்து தெரிவித்த மோடி...
- சிறுவர்களை சிறைப்பிடிக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ்
- குவாண்டனாமோ சிறை!
- நரோடா பாடியா வழக்கு: 32 பேர் குற்றவாளிகள்; 29 பேர்...
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: அமெரிக்க...
- தலிபான் சடலத்தின் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க வீ...
- அமெரிக்க ஆர்வலரை புல்டோசர் ஏற்றி கொன்ற இஸ்ரேலிய இர...
- எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்...
- முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்
- அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஷ்யா
- பாபா ராம்தேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
- அமெரிக்கப் படைகளின் அளவுக்கு அதிகமான அதிர்ச்சி மரண...
- பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்...
- வட கொரியாவுக்கு பயப்படும் அமெரிக்கா
- வதந்தியை பரப்புதல்: மத்திய உள்துறை அமைச்சருக்கு பா...
- ஈரானில் நடக்கும் அணி சேரா மாநாட்டில் பங்கேற்க பான்...
- அமெரிக்க ராணுவ தளபதி வந்த விமானம் மீது தலிபான்கள் ...
- அஸ்ஸாம் மக்களுக்கு எதிரான வதந்திகளில் சிக்க வைக்கு...
- 6 வருடங்களாக முஸ்லிம்களை உளவு பார்த்த நியூயார்க் ப...
- ‘அருகில் உள்ள எதிரிக்கு’ ஈரானின் மிரட்டல்: “உங்கள்...
- அமெரிக்க அதிபர் ஒபாமா இனிமேலாவது சரியாகச் செயல்பட ...
- அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வ...
- அமெரிக்காவின் நிவாரண உதவி தேவையில்லை. பூகம்பத்தால்...
- ராணுவ தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிர் இழப்பு: இஸ்...
- அசாமில் மீண்டும் கலவரம் வெடித்தது; முஸ்லீம்கள் சால...
- கோவையில் துவக்க நிகழ்ச்சி: சட்டப்படி பிணையில் விடு...
- இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன?
- முழுமையான சுதந்திரம் கேட்ட முதல் இந்தியன் யார் என்...
- சுதந்திரம் நமது பிறப்புரிமை
- கவர்னர் மாளிகை முற்றுகையிட முயன்ற 500 க்கும் மேற்ப...
- பிரதமரைவிட அதிக அளவு விமானப்படை விமானங்களை பயன்படு...
- இந்திய விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள்
- கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்
- மியான்மர் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களு...
- சூடான்: கடும் வெள்ளப்பெருக்கால் 32 பேர் பலி
- செளதியில் பெண்கள் மட்டுமே வேலை பார்க்க உருவாகும் த...
- அசாம் அகதிகளுக்கு உதவிடுவீர்! பாப்புலர் ஃப்ரண்ட் த...
- மும்பையில் நடைபெற்ற சம்பவங்கள் அதிர்ச்சியளிக்கின்ற...
- திப்புசுல்தான்: உலகின் முதல் உலோகத்தாலான ராக்கெட் ...
- அசாமில் தொடரும் கலவரம்: ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு
- எச்சரிக்கை: ஈரான் செல்லும் இஸ்ரேலிய விமானங்களை சவு...
- சுதந்திரப் போரா? சிப்பாய் கலவரமா ?
- குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த மறுநாளே ...
- திருச்சிக்கு பெருமை சேர்த்த சுதந்திர போராட்ட வீரர்...
- "கண்ணியமிக்க "காயிதே மில்லத்"
- ஆகஸ்ட் 15ல் “சுதந்திர தின அணிவகுப்பு” பாப்புலர் ஃப...
- இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது யார்?
- சுதந்திர போராட்ட மாவீரர் சிராஜ்-உத்-தௌலா பற்றிய வர...
- அசாமில் மீண்டும் வெடித்த வன்முறையால் 5 பேர் பலி
- திணறும் இந்தியப் பொருளாதாரம்
- அரசு அதிகாரிகள், மாணவர்கள் நோன்பு நோற்கத் தடை!
- வள்ளல் பக்கிர் முஹம்மத்
- புனே குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இந்துத...
- சீனாவில் தனிநாடு கோரி போராட்டம் நடத்திய போராளிகள் ...
- சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் செய்ய ஒப...
- முஸ்லிம்கள் நிறைந்து வாழும் சினேகல் நாட்டில் 10 லட...
- மியான்மர் நாட்டில் முஸ்லிம் பெண்களை கற்பழித்த ராணுவம்
- விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வீட்டுக்கு எடுத்துச...
- சாதியத்தையும் மதத்தையும் அரசியலுக்குள் கொண்டுவந்தவ...
- மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!
- சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்