வியாழன், டிசம்பர் 20, 2012
வியாழன், டிசம்பர் 06, 2012
மாபெரும் பொதுக்கூட்டம். நேரடி ஒலிபரப்பு. கரும்புக்கடை, கோவை.
Free desktop streaming application by Ustream
பாபரி மஸ்ஜித்துக்கான நீதி! தேசத்தின் கடமை!...
மாபெரும் பொதுக்கூட்டம்
கரும்புக்கடை, கோவை.
நேரடி ஒலிபரப்பு இன்று மாலை 6.30 மணிக்கு
சனி, டிசம்பர் 01, 2012
சிறுநீரக நோயால் உயிருக்குப் போராடும் சிறைவாசியை விடுதலை செய்ய வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்டம்
கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அபுத்தாஹிர் கடந்த 5 ஆண்டு காலமாக எஸ் எல் ஈ எனும் நோயால் தாக்கப்பட்டு 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு மரணத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார். இந்நிலையில் உயர் நீதி மன்றத்தில் விடுதலை கொடுக்கப்பட்டும் தமிழக அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. எனவெ, உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல் படுத்த கோரி, கோவையில் அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரண்ட்டின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்களும்,
செவ்வாய், நவம்பர் 20, 2012
பாலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!
எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசியத் தலைவர் இ. அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனின் விடுதலைக்கு போராடும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அகமது ஜாபரி உள்ளிட்ட 7 பாலஸ்தீனியர்களும் மற்றும் 2 குழந்தைகளும் பலியாகியுள்ளனர். மேலும் பல பாலஸ்தீனியர்களும், சிறு குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இந்த பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறி இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதலை பாலஸ்தீன் மீது தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது.
பாலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனின் விடுதலைக்கு போராடும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அகமது ஜாபரி உள்ளிட்ட 7 பாலஸ்தீனியர்களும் மற்றும் 2 குழந்தைகளும் பலியாகியுள்ளனர். மேலும் பல பாலஸ்தீனியர்களும், சிறு குழந்தைகளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். பாலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இந்த பயங்கரவாத செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை மனிதாபிமானக் கொள்கைகளை மீறி இஸ்ரேல் இந்த பயங்கரவாத தாக்குதலை பாலஸ்தீன் மீது தொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது.
அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முட்டுகட்டை: கர்நாடக ஆளும் பா.ஜ.க அரசு மீது பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு
கர்நாடக மாநிலத்தில் "பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா"வின்
நிகழ்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்திய போலீசுக்கு எதிராக தொடரப்பட்ட
வழக்கில், நீதிமன்றம் ரூ 50,000அபராதம் விதித்ததாக கர்நாடக மாநில தலைவர்
"இல்யாஸ் தும்பே" தெரிவித்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? என்ற தலைப்பில், நேற்றுமுன்தினம் மைசூரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவ்வியக்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீப்,
ஞாயிறு, நவம்பர் 11, 2012
திங்கள், அக்டோபர் 22, 2012
சனி, அக்டோபர் 20, 2012
பிடிக்காதவர்களை ஒடுக்கத்தான் ரெளடிகள் பட்டியலா? நீதிபதி ஆவேசம்
காவல் துறை நினைத்தால், ஒருவரை எப்படி வேண்டுமானாலும் பழிவாங் கலாம் என்பதற்கு ஒரு உதாரணம் வேடியப்பன் வழக்கு.
தந்தை
பெரியார் திராவிடர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக
இருப்பவர் வேடியப்பன். அரூர் அரசு மருத்துவமனையில், ஆம்புலன்ஸ் சேவைக்கு
2,000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக அவரிடம் சிலர் புகார் சொன்னதை
வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை அரூர்
மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேச அவரை
வரச்சொல்ல... அந்த சந்திப்பில் மோதல் நடந்துள்ளது.
வியாழன், அக்டோபர் 18, 2012
SDPI கட்சியின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்
SDPI கட்சியின் பூரண மதுவிலக்கிற்கான போராட்டம் அக்டோபர் 2ந்தேதி முதல் அக்டோபர் 17 வரை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. மதுவினால் ஏற்படும் தீங்குகளை மக்களுக்கு எடுத்துக்கூற சுவர் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் ஆகியவற்றை செய்தனர். அரசு மதுக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று கோரி ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் 17ந்தேதி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காலை 11 மணியளவில் SDPI கோவை மாவட்டத் தலைவர் எ.முஸ்தபா அவர்களின் தலைமையில் நடந்தது.
புதன், அக்டோபர் 17, 2012
குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும்
இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய
அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்
தொடங்கியது. இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குழு
மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று
நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர்,
மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில்
சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும்.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம்
மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து
இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய், அக்டோபர் 16, 2012
கல்விக்கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சார்பில் கோவையில் உயர்கல்விக்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி 14 ம்
தேதி மாலை 5 மணியளவில் உக்கடம் அருகிலுள்ள CGMA ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் A.S.
இஸ்மாயில் அவர்கள் தலைமையில் 24 லட்சம் ரூபாய்க்கான கடன் உதவி
வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் அவர்களது
பெற்றோர்களுடன் வந்து கலந்து கொண்டார்கள்.
வியாழன், அக்டோபர் 11, 2012
கர்நாடக பாஜகவில் பிளவு: எடியூரப்பா புதிய கட்சி தொடங்க திட்டம்
கோஷ்டிப் பூசலுக்கு பெயர் போன கட்சி காங்கிரஸ் என்று அவ்வப்பொழுது செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், மத்தியில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் பாஜகவும் அதற்கு எவ்விதத்திலும் சளைத்ததில்லை என்பதை பல்வேறு நிகழ்வுகள் மூலம் நிரூபித்து வருகிறது. உதாரணத்திற்கு, பாஜக தலைவர் நிதின் கட்கரிக்கு எதிராக கோபிநாத் முண்டேவையும், குஜராத்தில் மோடிக்கு எதிராக கேசுபாய் படேலையும், ராஜஸ்தானில் எதிர்கட்சித் தலைவர் வசுந்தரா ராஜேவிற்கு எதிராக முன்னாள் உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியாவையும் குறிப்பிடலாம். அந்த வரிசையில் கர்நாடக பாஜகவிற்கு இடையூறாக இருந்த எடியூரப்பாவும் சேர்ந்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் முதல்
மந்திரி எடியூரப்பா பாரதீய ஜனதா கட்சியில் இருந்து டிசம்பர் மாதம்
வெளியேறுவேன் என்று தெரிவித்துள்ளார்.
அசாமில் 18 லட்சம் குழந்தைகள் உணவில்லாமல் தவிப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
அசாமில் கடந்த மூன்று மாதங்களாக சுமார் 18 லட்சம் குழந்தைகள் உணவு,
தண்ணீர், மருத்துவ உதவி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து
வருவதாக சர்வதேச அளவில் செயல்படும் அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
லன்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அசாமில் வெள்ளத்தால் 4.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் பெருமளவு பாதிப்பு எனபது குழந்தைகளுக்கு மட்டுமே.
லன்டனில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, அசாமில் வெள்ளத்தால் 4.89 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதில் பெருமளவு பாதிப்பு எனபது குழந்தைகளுக்கு மட்டுமே.
புதன், அக்டோபர் 10, 2012
ஹரியானா மாநில தொடர் கற்பழிப்புகள்: கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு சோனியா உத்தரவு
காங்கிரஸ்
ஆட்சி செய்யும் ஹரியானா மாநிலத்தில் இந்த ஒரு மாதத்தில் நடந்த 12
கற்பழிப்பு சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கற்பழிக்கப்பட்ட தலித் பெண் தீக்குளித்தது
மற்றொரு மாவட்டத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தற்கொலை செய்தது என
பல சம்பவங்கள் ஹரியானாவில் அரங்கேறியுள்ளது.
மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்
மலச்சிக்கல் என்று தன் பெயரிலேயே
சிக்கலைக் கொண்டது இந்நோய். அதுமட்டுமல்ல, இந்த ஒரு சிக்கலால் உடலின் பல
பாகங்களில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இந்த முக்கியமான சிக்கல்
தீர்ந்தால் பல சிக்கல்கள் தீரும் வாய்ப்பு உள்ளது. காலைக் கடன்களில்
மலஜலம் கழிக்கும் கடன் சீராக முடிந்தால் உடல் ஆரோக்கியத்துடன்,
புத்துணர்ச்சியுடன் இருப்பதை நாம் உணரலாம்.
மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.
மருத்துவரிடம் நாம் போகும்போது, அவர் கேட்கும் முதல் கேள்வி, ‘‘உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதா?’’ என்பதுதான். பிறகுதான் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவற்றைப் பற்றி விசாரிக்கிறார்.
செவ்வாய், அக்டோபர் 02, 2012
பாரதியார் பற்றியான ஆய்வு
-வே. மதிமாறன்
முன்னுரை
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
அதில் முக்கியமான இரண்டு,
அதில் முக்கியமான இரண்டு,
1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது.
2. இந்த இந்தியச் சமூகம், நிலப்பிரபுத்துத்திலிருந்து முதலாளித்துவ சமூகமாக மாறும் முயற்சியில் இறங்கியது. ஏறக்குறைய மாறியது.
இதில்
மிகக் குறிப்பாக இந்தியாவின் நகரங்கள், செழிப்பான பகுதிகள் முதலாளித்துவ
முகம் பெறலாயின. இந்த நகரங்களிலும், செழிப்பான பகுதிகளிலும் வாழ்ந்த -
இந்திய மன்னர்கள், செல்வந்தர்கள், பார்ப்பனர்கள் இவர்களுக்கு
நிலப்பிரபுத்துவ தோல் உறிந்து, முதலாளித்துவ தோல் வளர ஆரம்பித்தது.
மன்னர்களும், செல்வந்தர்களும் கள்ளுப் பானையிலிருந்து - விஸ்கி
பாட்டிலுக்கு மாறினார்கள். முதலாளித்துவ `சொகுசு` தன் மீது படரும் வரை
பொறுமையாக அமைதி காத்தார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள் முதலாளித்துவம் தம்மை வந்து அடையும்வரை
காத்திருக்க அவர்களுக்குப் பொறுமை இல்லை அல்லது பொறுமையாக இருந்தால்,
‘வேலைக்காகாது’ என்ற காரணத்தால், முதலாளித்துவத்தை தன் இரண்டு கைகளையும்
நீட்டி அன்போடு, `வருக, வருக` என்று வரவேற்றபடி, அதிவேக வாகனத்தில் ஏறி,
முதலாளித்துவத்திடம் முதலில் சென்றடைந்தார்கள்.
மன்னர்களிடம் இருந்த தனது மரியாதைக்குரிய புரோக்கர் பணியை அல்லது ஆலோசனை
வழங்கும் பணியை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்குத் தானாகவே `பணி மாற்றம்`
செய்து கொண்டார்கள்.
திங்கள், அக்டோபர் 01, 2012
1870 பணியிடங்கள் நிரப்ப 9.8 லட்சம் பேர் எழுதிய வி.ஏ.ஓ தேர்வில் 20 சதவீதம் பேர் ஆப்செண்ட்
தமிழகம் முழுவதும் விஏஓ தேர்வை 9.8 லட்சம்
பேர் எழுதினர். குளறுபடிகள் நடக்காமல் தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள்
தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மாதத்தில் ரிசல்ட்
வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,870
பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), கடந்த ஜூலை 9ம் தேதி
வெளியிட்டது. அதன்படி, விஏஓ பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. காலை
10 மணிக்கு தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணி வரை நடந்தது.
அரசு பயங்கரவாதத்தை கண்டித்த உச்ச நீதி மன்றம்
உச்ச நீதி மன்றம் |
"சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக எந்த ஓர் அப்பாவி
நபரையும் பிடித்து பயங்கரவாதி / தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில்
அடைக்காதீர்" என்று நேற்று உச்ச நீதிமன்றம் தனது வரலாற்று சிறப்பு
மிக்க அதிரடி தீர்ப்பில் குஜராத் போலீஸ்க்கு ஓங்கி நச்சென மண்டையில்
குட்டும் விதமாக, இந்த நெத்தியடி கருத்தினை கூறியது. குஜராத்துக்கு
மட்டுமல்ல... இது அனைத்து மாநில அரசு, காவல்துறை மற்றும் ஊடகங்களுக்கும்
சேர்த்தே பொருந்தும்!
புதன், செப்டம்பர் 26, 2012
தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதாகக் கைது: உண்மை அறியும் குழு அறிக்கை
செப்டம்பர் 24, 2012
திருச்சி
சென்ற 18ந்தேதி முதல் தமிழக ஊடகங்களில் தஞ்சையைச் சேர்ந்த தமிம் அன்சாரி
என்னும் இளைஞன் இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக்
கடத்தியதாக ஒரு செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. திருச்சி
‘கியூ’ பிரிவு போலீசார் அவரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்
(மு.த.அ எண் 1/2012. குற்றப் பிரிவுகள்; The Official Secret Act 3, 4
& 9 மற்றும் IPC 120(B)). இவருடன் சக குற்றவாளிகளாக இலங்கை கொழும்பு
நகரைச் சேர்ந்த ஷாஜி மற்றும் லங்கா ஷாஜி ஆகியோரும் இலங்கையிலுள்ள
பாகிஸ்தான் தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் என்பவரும்
சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டு உளவுப் பிரிவான
ஐ.எஸ்.ஐயின் தென் ஆசியப் பகுதியின் முக்கிய முகவர்கள் என்பதாகவும் கியூ
பிரிவு போலீசார் ஊடகங்களுக்குச் செய்திகள் தந்துள்ளனர்.
திங்கள், செப்டம்பர் 24, 2012
2014ல் வெளியேறுகிறது அமெரிக்கா: சீனாவுடன் கைகோர்க்கும் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானில் அல்காய்தா, தலிபான் போராளிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன.
இவர்கள்
புதிதாக தெரிவு செய்யப்படும் இராணுவ வீரர், போலிசாருக்கு பயிற்சிகளும்
கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2014ஆம் ஆண்டுடன் நேட்டோ
படைகள் ஆப்கானை விட்டு முழுமையாக வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரே இரவில் ஐ.எஸ்.ஐ உளவாளியாக்கப்பட்டேன்: தமீம் அன்சாரி
பாகிஸ்தான்
உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயுடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டு
கைதுசெய்யப்பட்ட தமிழக இளைஞர் தமீம் அன்சாரி தம்மீது பயங்கரவாதி முத்திரை
குத்தப்பட்டமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள மரக்கறி இறக்குமதியாளரான சாஜி என்பவருடன் தொடர்பு உள்ளதாக கூறியே தமிழக காவல்துறை தம்மை கைது செய்தது.
வெள்ளி, செப்டம்பர் 21, 2012
காவிரியை திறந்து விடாமல் தமிழர்களை கலங்கடிக்கும் பாஜக
மீண்டும்
கொதிக்கிறது காவிரி. கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம் எனக் கர்நாடகாவின்
மைசூர், மண்டியா, பெங்களூரில் வசிக்கும் தமிழர்களிடையே பீதி.
''தமிழர்கள்
அச்சப்படத் தேவை இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லுங்கள். தமிழகத்துக்குத்
தண்ணீர் தர எதிர்ப்பவர்களை அமைதியான வழியில் மட்டுமே போராட அறிவுறுத்தி
இருக்கிறேன். தமிழக அரசுடனும் தமிழர்களுடனும் சகோதரத்துவம், நட்புறவு
பேணுவதே எங்கள் கர்நாடக அரசின் நோக்கம்!'' என்று கேள்விக்கு முன்னரே பேசத்
தொடங்குகிறார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.
திங்கள், செப்டம்பர் 17, 2012
பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் வேட்டை அதிகரித்துவிட்டது – அருந்ததி ராய் ! ! !
புதுடெல்லி:- பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை பொய்
வழக்குகளில் கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது என்று பிரபல
எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார். இந்தியாவின்
பல்வேறு சிறைகளில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை
விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஒரு மாத கால ‘சட்டப்படி
பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற தேசிய அளவிலான
பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அப்பிரச்சாரத்தின் இறுதி நிகழ்ச்சியாக டெல்லி
ஜந்தர் மந்தரில் நேற்று(செப்.15) நடத்திய மாபெரும் மனிதச் சங்கிலிப்
போராட்டத்தில் அருந்ததி ராய் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
ஞாயிறு, செப்டம்பர் 16, 2012
அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து கோவையில் பாப்புலர் ப்ரண்டின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான
முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக விமர்சிக்கும் ‘innocence of
muslims’ திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து
வருகிறது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும்
உலகிற்கு புதியதல்ல. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த சாம் பாசிலி என்ற
யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட
இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில்
மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம்
செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
கோவை பாப்புலர் ஃபிரண்ட் நடத்திய மனித சங்கிலி போராட்டம்
சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக
சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால்
தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க
மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம்.
1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம்
இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே
விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS
(டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட
அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில்
பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு
உதாரணமாகும்.
சனி, செப்டம்பர் 15, 2012
கோவையில் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம்
சுதந்திர இந்தியாவில் 65 ஆண்டு காலமாக
சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகம் ஆளும் அதிகார வர்க்கத்தினரால்
தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக இட ஒதுக்கீடு வழங்க
மறுத்தல், போலி என்கவுண்டர், பொய் வழக்கு போன்றவற்றை குறிப்பிடலாம்.
1990க்கு பிறகு எவ்வித முகாந்திரமும் இல்லாமல் பல ஆயிரக் கணக்கான முஸ்லிம்
இளைஞர்கள் போலியான பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு பிணையில் கூட வெளியே
விடாமல் இந்தியா முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளில் ஆய்வு செய்த TISS
(டாட்டா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயன்ஸ்) என்ற நிறுவனம் வெளியிட்ட
அறிக்கையின்படி மகாராஷ்டிர மாநிலத்தின் சிறையில் உள்ள முஸ்லிம்களில்
பெரும்பான்மையானவர்கள் அப்பாவிகளாவார்கள் என்ற அறிக்கை இதற்கு ஒரு
உதாரணமாகும்.
வெள்ளி, செப்டம்பர் 14, 2012
இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராயின் அறிக்கை
கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்துப் போராடும்
இடிந்தகரை மக்களோடு நான் முழு நல்லாதரவோடு நிற்கிறேன். ஜப்பானில் பூகம்பம்
ஏற்பட்டு புகுஷிமா அணு உலை பாதிக்கப்பட்ட போது நான் அங்கு இருந்தேன். அந்த
பேரழிவுக்கு பிறகு அணு சக்தியை பயன்படுத்தும் எல்லா நாடுகளும் தங்களது
கொள்கையை மாற்றிக் கொள்ள போவதாக அறிவித்தன. இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளும் அறிவித்திருந்தன.
வியாழன், செப்டம்பர் 13, 2012
கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழிநடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத்துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்தடைக்கு இவர்கள்தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன்பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு இருளிலிருந்து மீண்டுவிடும் என்பதுபோலவும் ஒரு "மூட நம்பிக்கை' நிலவிக் கொண்டிருக்கிறது.
ஆபியா சித்தீக்கியை விடுதலை செய்யுங்கள்: ஜவாஹிரி காணொளியில் வேண்டுகோள்
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட அமெரிக்கரான வாரன் வெயின்ஸ்டீன் தங்களிடம்
இன்னும் பிணையக் கைதியாக உயிருடன் இருப்பதாக அல்கொய்தா இயக்கத்தின்
தலைவரான அய்மான் அல் ஜவாஹிரி தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன்
கொல்லப்பட்ட பிறகு ஜவாஹிரியிடமிருந்து வீடியோக்கள் வெளியாவது
குறைந்திருந்த நிலையில், இப்போது அவரது புதிய வீடியோவை அல்காய்தா
வெளியிட்டுள்ளது. சில அல்காய்தா இணையத்தளங்களில் இந்த வீடியோ
வெளியாகியுள்ளது.
புதன், செப்டம்பர் 12, 2012
செவ்வாய், செப்டம்பர் 11, 2012
நிலக்கரி சுரங்க ஊழல்:பா.ஜ.க முதல்வர்கள் தமது பதவியை ராஜினாமாச் செய்து முன்மாதிரியாக மாறவேண்டும்! – எஸ்.டி.பி.ஐ!
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் அமளியால் முடங்கியதில் சோசியல்
டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. பிரதமரின்
ராஜினாமாவைக் கோரி அமளியில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி தாம் ஆளும் மாநில
முதல்வர்களை ராஜினாமாச் செய்யவைத்து முன்மாதிரியாக மாறவேண்டும் என்று
எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடங்குளம் போலீஸ் அடக்குமுறை: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்!
கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின்நிலையத்தில் அணு உலைகளில் யுரேனியம்
நிரப்புவதை நிறுத்தக்கோரி சுற்றுவட்டார மக்கள் நடத்திய போராட்டத்தில்
போலீஸார் நடத்திய தடியடி, கண்ணீர் புகை தாக்குதல்களை
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில்
வன்மையாக கண்டித்துள்ளார். அணுமின் சக்தி ஆபத்தானது என்ற கொள்கையில் தமது
இயக்கம் உறுதியாக இருப்பதாக அவர் தெளிவுப்படுத்தினார்.
திங்கள், செப்டம்பர் 10, 2012
சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டம்
கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை
கண்டித்தும், இடிந்த கரை பகுதியில் இருந்து காவல்துறையினர் உடனடியாக
வெளியேற வலியுறுத்தியும், போராட்டக் குழுவினரோடு முதல்வர்
பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையில்
எரிபொருள் நிரப்புவதை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சி இன்று (10-09-2012)
மாபெரும் சாலை மறியல் போராட்டத்தை
நடத்தியது.
வெள்ளி, செப்டம்பர் 07, 2012
வியாழன், செப்டம்பர் 06, 2012
புதன், செப்டம்பர் 05, 2012
செவ்வாய், செப்டம்பர் 04, 2012
திங்கள், செப்டம்பர் 03, 2012
சனி, செப்டம்பர் 01, 2012
வெள்ளி, ஆகஸ்ட் 31, 2012
இளம்பெண்கள் குறித்து மோசமான கருத்து தெரிவித்த மோடிக்கு தலைவர்கள் கண்டனம்
சமீபத்தில்
ஒரு பத்திரிக்கைக்கு குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி அளித்த
பேட்டியில், குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம்
வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல்
அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம்
பால் வாங்கி வர சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது
தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்கமாட்டேன்
என்கிறாள் என்று கூறியிருந்தார்.
சிறுவர்களை சிறைப்பிடிக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ்
அண்ணனை விடுவியுங்கள் என கதறி அழும் தங்கை |
ஜம்மு
காஷ்மீர்: மாநிலம் ஸ்ரீநகரில் சமீபத்தில் 12 வயது சிறுவன் ஒருவன்
நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல் உட்பட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு -
காஷ்மீர் மாநிலத்தில், தற்போது அமைதி நிலவுவதாக அம்மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா சமீப நாட்களாக, அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
வியாழன், ஆகஸ்ட் 30, 2012
குவாண்டனாமோ சிறை!
காட்டுமிராண்டி அமெரிக்கா |
உலகில் நடக்கும் ஒட்டு மொத்த சிறைக் கொடுமைகளை ஒரே இடத்தில்
நிகழ்த்தும் சிறைக்கூடம். குவாண்டனமோ பே சிறை என்று அழைக்கப்படும் இந்த
சித்திரவதைக் கூடத்தை கியூபாவிற்கு அருகில் கட்டி வைத்திருக்கிறது
அமெரிக்கா!
அமெரிக்கர்களைத் தவிர வேறு யார் விஷயத்திலும் மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாத அமெரிக்காவினால் குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளோரில் பெரும்பாலானோர் நிரபராதிகள்தான்! இது அமெரிக்காவிற்கு தெரியும் என்கிறது விக்கி லீக்ஸ். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் குவாண்டனாமோ சிறையிலடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகிறது அமெரிக்கா.
புதன், ஆகஸ்ட் 29, 2012
நரோடா பாடியா வழக்கு: 32 பேர் குற்றவாளிகள்; 29 பேர் விடுதலை
தீவிரவாதிகள் பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி |
ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற நரோடா பாடியா
வழக்கில், 32 பேர் குற்றவாளிகளாக அறிவித்து ஆமதாபாத் சிறப்பு கோர்ட்
தீர்ப்பளித்துள்ளது.
95 அப்பாவி முஸ்லிம்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், பா.ஜ. முன்னாள் அமைச்சர் மாயா
கோட்னானி மற்றும் பஜ்ரங் தள் கட்சி முன்னாள் தலைவர் பாபு பஜ்ரங்கி
உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: அமெரிக்காவை பயமுறுத்தும் சீனா
கண்டம் விட்டு கண்டம் பாயும், அதி நவீன, 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லும் ஏவுகணையை சீனா, நேற்று பரிசோதித்தது.
வல்லரசு
நாடான சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு போட்டியாக அதி நவீன
ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. கடலுக்கு அடியில், நீர்மூழ்கி கப்பலில்
இருந்து எதிரி நாட்டை தாக்கும் வகையிலான ஏவுகணையை சமீபத்தில் சோதனை செய்து
பார்த்தது சீனா.
செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012
எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு வேண்டுகோள்!
கடந்த ஆகஸ்ட் 25,26 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில
செயற்குழு கூட்டம் சென்னையில் கூடியது. இக்கூட்டத்திற்கு பாப்புலர்
ஃப்ரண்ட் மாநில தலைவர். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார். மாநில
பொதுச் செயலாளர் ஏ. ஹாலித் முஹம்மது, துணை தலைவர் மு. முஹம்மது இஸ்மாயில்.
செயலாளர்கள் ஆரிஃப் பைசல் மற்றும் மு. ஷேக் முஹம்மது அன்சாரி, பொருளாளர்
கே.எஸ்.எம். இப்ராஹிம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து
கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திங்கள், ஆகஸ்ட் 27, 2012
முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்
அமெரிக்கா நடத்திய உளவு விமானத்
தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் மூத்த தளபதி முல்லா
தாதுல்லாவும், 20 போராளிகளும் உயிரிழந்ததை அந்த அமைப்பு
உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின.
பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானிலும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளிலும் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா உளவு விமானங்கள் கடந்த 18-ம் தேதியில் இருந்து தொடர்ந்து குண்டுவீசித் தாக்கின.
ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012
பாபா ராம்தேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும்
என்று கூறும் பாபா ராம்தேவ், தன்னை விளம்பரப்படுத்தி பிரபலமாக்க பல்வேறு போராட்ட நாடகங்களை நடத்தி வருகிறார்.
ரூ.60லட்சம் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக பாபா
ராம்தேவுக்கு அமலாக்க பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கறுப்பு பணத்தை
ஒழிக்க வலியுறுத்தி போராட்டாம் நடத்தி வரும் பாபா ராம்தேவ்
அறக்கட்டளை நடத்தி வருகிறார். வெளி நாட்டில் இந்தியர்கள் பதுக்கி
வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும்
அவருக்கு இந்துத்துவாவின் ஆதரவு உள்ளது.
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்து பரிசோதிக்க முடிவு
பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் பொலோனியம் என்ற விஷம் வைத்து கொல்லப்பட்டாரா
என்பது குறித்து சுவிஸ் நாட்டு ஆய்வகம் பரிசோதனை செய்ய உள்ளது.
பாலஸ்தீன
விடுதலைக்காக 40 ஆண்டு காலம் போராடியவர் யாசர் அராபத். இஸ்ரேலிய படைகள்
பாலஸ்தீனத்தை முற்றுகையிட்டிருந்த நிலையில், 75 வயதான அராபத்
நோய்வாய்ப்பட்டதால் அவர் பிரான்ஸ் நாட்டு விமானம் மூலம் பாரிசுக்கு
அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வலைப்பதிவு காப்பகம்
-
▼
2012
(257)
-
►
அக்டோபர்
(13)
- "நீதிக்கான முழக்கம்" கோவை மண்டல மாநாடு
- பிடிக்காதவர்களை ஒடுக்கத்தான் ரெளடிகள் பட்டியலா? நீ...
- SDPI கட்சியின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம்
- குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்
- கல்விக்கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி
- கர்நாடக பாஜகவில் பிளவு: எடியூரப்பா புதிய கட்சி தொட...
- அசாமில் 18 லட்சம் குழந்தைகள் உணவில்லாமல் தவிப்பு
- ஹரியானா மாநில தொடர் கற்பழிப்புகள்: கடும் நடவடிக்கை...
- பீகாரில் தலித் பெண் எரித்துக்கொலை: உயர் ஜாதியினரின...
- மலச்சிக்கல் - காரணங்களும் தீர்வுகளும்
- பாரதியார் பற்றியான ஆய்வு
- 1870 பணியிடங்கள் நிரப்ப 9.8 லட்சம் பேர் எழுதிய வி....
- அரசு பயங்கரவாதத்தை கண்டித்த உச்ச நீதி மன்றம்
-
►
செப்டம்பர்
(22)
- தஞ்சை முஸ்லிம் இளைஞர் இராணுவ இரகசியங்கள் கடத்தியதா...
- 2014ல் வெளியேறுகிறது அமெரிக்கா: சீனாவுடன் கைகோர்க்...
- ஈரானைத் தாக்கினால் மூன்றாம் உலகப்போர் தான்: இஸ்ரேல...
- ஒரே இரவில் ஐ.எஸ்.ஐ உளவாளியாக்கப்பட்டேன்: தமீம் அன்...
- காவிரியை திறந்து விடாமல் தமிழர்களை கலங்கடிக்கும் பாஜக
- பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் வேட்டை அ...
- அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து கோவையில் பாப்புலர்...
- கோவை பாப்புலர் ஃபிரண்ட் நடத்திய மனித சங்கிலி போராட...
- கோவையில் மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட...
- இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக அருந்ததி ராயின் அறிக்கை
- கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்ட...
- ஆபியா சித்தீக்கியை விடுதலை செய்யுங்கள்: ஜவாஹிரி கா...
- இஸ்லாத்திற்கெதிராக அமெரிக்க படம்: லிபியாவில் மக்கள...
- நிலக்கரி சுரங்க ஊழல்:பா.ஜ.க முதல்வர்கள் தமது பதவிய...
- கூடங்குளம் போலீஸ் அடக்குமுறை: பாப்புலர் ஃப்ரண்ட் க...
- சென்னையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய சாலை மறியல் ப...
- ஈரான் மீது எந்தவொரு நாடும் தாக்குதல் நடத்தக்கூடாது...
- கிங் பிஷர் விஜய் மல்லையாவிடம் கோடிக்கணக்கில் கடனை ...
- கோவையில் ரயில் மறியல்: 200க்கும் மேற்பட்ட SDPI கட்...
- நரோடாபாட்டியா தீர்ப்பு : வகுப்புவாத அரசியல்வாதிகளு...
- ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர், ஜார்ஜ் புஷ் ...
- குஜராத் நரோடா பாட்டியா கூட்டுக்கொலை வழக்கில் அதிரட...
-
►
ஆகஸ்ட்
(62)
- அஸ்ஸாம் மக்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி: பாப்புலர...
- இளம்பெண்கள் குறித்து மோசமான கருத்து தெரிவித்த மோடி...
- சிறுவர்களை சிறைப்பிடிக்கும் ஜம்மு காஷ்மீர் போலீஸ்
- குவாண்டனாமோ சிறை!
- நரோடா பாடியா வழக்கு: 32 பேர் குற்றவாளிகள்; 29 பேர்...
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை: அமெரிக்க...
- தலிபான் சடலத்தின் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க வீ...
- அமெரிக்க ஆர்வலரை புல்டோசர் ஏற்றி கொன்ற இஸ்ரேலிய இர...
- எஸ்.எம்.எஸ். வதந்திகளை நம்பாதீர், பாப்புலர் ஃப்ரண்...
- முல்லா தாதுல்லா இறந்தது உண்மை: தலிபான் ஒப்புதல்
- அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஷ்யா
- பாபா ராம்தேவுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்
- அமெரிக்கப் படைகளின் அளவுக்கு அதிகமான அதிர்ச்சி மரண...
- பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தின் உடலை தோண்டியெடுத்...
-
►
அக்டோபர்
(13)